RCB vs KKR, IPL 2023 LIVE: கொல்கத்தா சுழலில் சுருண்ட பெங்களூரு; 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி..!
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதும் நிலையில், போட்டிக் குறித்த அப்டேட்டுகளை உடனுக்குடன் காணலாம்.
பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ரஸ்ஸல் பந்தில் ஹசரங்கா தனது விக்கெட்டை 5 ரன்களில் பறிகொடுத்து வெளியேறினார்.
16.3 ஓவரில் பெங்களூரு அணி 6 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடி வரும் பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 138 ரன்கள் சேர்த்துள்ளது.
அரைசதம் கடந்து விளையாடி வந்த கோலி ரஸ்ஸல் பந்து வீச்சில் கேட்ச் ஆகி தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
அதிரடியாக சிக்ஸர்கள் விளாசி வந்த லாம்ரோர் தனது விக்கெட்டை வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார்.
சிறப்பாக ஆடி வரும் விராட் கோலி 33 பந்தில் தனது அரைசத்தினை எட்டியுள்ளார். இது இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் அவரது 5வது அரைசதமாகும்.
சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு அணி 10.3 ஓவரில் 102 ரன்கள் சேர்த்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது.
20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 200 ரன்கள் சேர்த்தது. பெங்களூரு அணி சார்பில் விஜய் வைஷாக் மற்றும் ஹசரங்கா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்த ராணா 21 பந்தில் 48 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சிக்ஸர்களை தொடர்ந்து விளாசி வரும் கொல்கத்தா அணி 16 ஓவர்கள் முடிவில் 150 ரன்கள் சேர்த்துள்ளது.
சிறப்பாக ஆடி வரும் கொல்கத்தா அணி 15 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது.
10வது ஓவரில் ஏற்கனவே ஜெகதீசன் தனது விக்கெட்டை இழந்த நிலையில் அதே ஓவரின் கடைசி பந்தில் அதிரடியாக ஆடிவந்த ஜேசன் ராய் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார்.
களமிறங்கியது முதல் சிறப்பாக ஆடி வந்த ஜெகதீசன் 29 பந்தில் 27 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.
அதிரடியாக ஆடி வரும் ஜேசன் ராய் 22 பந்தில் அரைசதம் விளாசி பெங்களூரு அணிக்கு சொம்ம சிப்பனமாக இருக்கிறார்.
பவர்ப்ளேவின் இறுதி ஓவரில் கொல்கத்தா அணியின் ஜோசன் ராய் 4 சிக்ஸர்கள் பறக்கவிட்டார். இதனால் அந்த அணி 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் சேர்த்துள்ளது.
களமிறங்கியது முதல் சிறப்பாக ஆடி வரும் கொல்கத்தா அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் சேர்த்துள்ளது.
டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது.
பெங்களூரு - கொல்கத்தா மோதல்:
ஐ.பி.எல். தொடரின் இன்றைய லீக் போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு களிக்கலாம்.
பெங்களூரு அணி நிலவரம்:
நடப்பு தொடரில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. கேப்டன் டூப்ளெசிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் பேட்டிங்கில் தொடர்ந்து அசத்தலான ஃபார்மில் உள்ளனர். ஆனால், அவர்களை தவிர வேறு யாரும் பேட்டிங்கில் சோபிக்காதது பெங்களூருவிற்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இதேபோன்று பந்துவீச்சிலும் முகமது சிராஜ் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வர, ஹர்ஷல் படேல் உள்ளிட்டோர் தொடர்ந்து அதிக ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற பெங்களூரு அணி, இன்றைய போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களுக்குள் நுழைய முனைப்பு காட்டி வருகிறது.
கொல்கத்தா அணி நிலவரம்:
கொல்கத்தா அணி இதுவரை நடப்பு தொடரில் 7 போட்டிகளில் விளையாடி, இரண்டில் மட்டும் வென்று புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. கேப்டன் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர் உள்ளிட்ட எந்தவொரு பேட்ஸ்மேனும் தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தாதும், நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவதும் அந்த அணியின் தொடர் தோல்விகளுக்கு முக்கிய காரணமாக உள்ளது. நடப்பு தொடரில் இரு அணிகளுக்கு இடையே ஏற்கனவே நடைபெற்ற போட்டியில், கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மைதானம் எப்படி?
பேட்டிங்கிற்கு சாதகமான பெங்களூரு மைதானத்தில் டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும். முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற வேண்டுமானால் எதிரணிக்கு மிகப்பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டியது கட்டாயமாகும்.
சிறந்த பேட்ஸ்-மேன்: டூப்ளெசிஸ் இன்றைய போட்டியில் பேட்டிங்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்
சிறந்த பவுலர்: இன்றைய போட்டியில் முகமது சிராஜ் பந்துவீச்சில் அசத்த கூடுதல் வாய்ப்பு
யாருக்கு வெற்றி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு
- - - - - - - - - Advertisement - - - - - - - - -