RCB vs GT, IPL 2023 LIVE: சதத்துடன் அணியை வெற்றி பெறச்செய்த சுப்மன் கில்; தொடரில் இருந்து வெளியேறிய பெங்களூரு
IPL 2023, Match 70, RCB vs GT: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் பெங்களூரு அணி இந்தாண்டுடன் 16 வருடங்கள் விளையாடி ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் பெற்ற தோல்வியின் மூலம் பெங்களூரு அணி ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.
குஜராத் அணி 19.1 ஓவரில் 198 ரன்களை எட்டி பெங்களூரு அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்களூரு அணி சார்பில் விராட் கோலியும் குஜராத் அணி சார்பில் சுப்மன் கில்லும் சதம் விளாசினர்.
குஜராத் அணி வெற்றி பெற 12 பந்துகளில் 19 ரன்கள் சேர்க்க வேண்டும்.
4வது நபராக களமிறங்கிய ஷனகா தனது விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.
198 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள குஜராத் அணி 15.2 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் சேர்த்துள்ளது.
34 பந்தில் தனது அரைசத்தினை எட்டிய விஜய் சங்கர் அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கிய விஜய் சங்கர் 34 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார்.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வரும் சுப்மன் கில் 29 பந்தில் அரைசதத்தினை எட்டியுள்ளார். இந்த அரைசதம் 16வது சீசனில் ஒட்டுமொத்தமாக அடிக்கப்பட்ட 50வது அரைசதமாகும்.
11 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 102 ரன்கள் சேர்த்துள்ளது.
இலக்கை நோக்கி சீரான முன்னேறும் குஜராத் அணி 9 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 84 ரன்கள் சேர்த்துள்ளது.
198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள குஜராத் அணி 8 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 71 ரன்கள் சேர்த்துள்ளது.
60 பந்தில் விராட் கோலி தனது சதத்தினை எட்டியுள்ளார்.
16.1 ஓவரில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்கள் சேர்த்துள்ளது.
15 ஓவர்களில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்துள்ளது.
இக்கட்டான சூழலில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனது விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காமல் இழந்து வெளியேறினார்.
14 ஓவரில் பெங்களூரு அணி 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் சேர்த்துள்ளது.
16 பந்தில் 26 ரன்கள் சேர்த்த ப்ரேஸ்வெல் தனது விக்கெட்டினை முகமது ஷமியிடம் இழந்து வெளியேறினார்.
தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி வரும் விராட் கோலி 35 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார்.
மூன்று விக்கெட்டுகளை இழந்தாலும் பெங்களூரு அணி 10.5 ஓவர்களில் 100 ரன்களைக் கடந்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 94 ரன்கள் சேர்த்துள்ளது.
பெங்களூரு அணியின் லோம்ரோர் தனது விக்கெட்டை நூர் அகமதிடம் இழந்து வெளியேறினார்.
பெங்களூரு அணியின் மேக்ஸ்வெல் தனது விக்கெட்டை ரஷித் கான் பந்து வீச்சில் இழந்துள்ளார்.
அதிரடியாக ஆடி வந்த டூ பிளசிஸ் தனது விக்கெட்டை இழந்துள்ளார்.
சிறப்பாக ஆடி வரும் பெங்களூரு அணியின் தொடக்க ஜோடி பவர்ப்ளேவில் விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்துள்ளது.
4.2 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்துள்ளது.
போட்டியின் 4வது ஓவரின் முதல் மூன்று பந்துகளில் பவுண்டரிகள் விளாசி அதகளப்படுத்தி வருகிறார்.
போட்டியின் 3வது ஓவரில் பாஃப் டூ பிளசிஸ் ஹாட்ரிக் பவுண்டரி விளாசினார். மேலும், இந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் இந்த ஓவரில் மொத்தம் 4 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.
மழை நின்று விட்டதால் போட்டி தொடங்கியுள்ளது.
பெங்களூரு அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே ப்ளேஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும்.
ஐபிஎல் தொடரின் 16வது சீசனின் கடைசி மற்றும் 70வது லீக் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் மோதும் இந்த போட்டி தான்.
பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் மழை பெய்து வருவதால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு அணி குஜராத் அணியுடன் மோதுகிறது. இதுவே நடப்பு ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டமாகும்.
கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய 16வது ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது. இதில் இன்று நடக்கும் 70வது லீக் போட்டியில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஃபாஃப் டூபிளெஸ்சிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றது. இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இப்போட்டி பெங்களூரு அணிக்கு மிக முக்கியமான போட்டியாகும்.
காரணம் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல முடியும். அதேபோல் பெங்களூரு அணியின் வெற்றி தான் மும்பை அணியை பிளே ஆஃப் செல்லவிடாமல் தடுக்கும். எனவே எப்படியாவது கடந்தாண்டைப் போல பெங்களூரு அணி பிளே ஆஃப் செல்ல முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பிளே ஆஃப் சென்று விட்டதால் சம்பிரதாய ஆட்டமாக மாறி விட்ட நிலையில், பெங்களூரு அணிக்கு வாழ்வா சாவா போட்டி என்பதால் ஆட்டம் நிச்சயம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.
அச்சுறுத்தும் வானிலை
இந்த போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் போட்டி நடக்கும் சின்னசாமி மைதானத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். மழை பெய்யாவிட்டாலும் போட்டி முழுவதும் மிகவும் ஈரப்பதமான சூழ்நிலையுடன் தான் மைதானம் இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆட்டத்தில் மழை குறுக்கிட்டால் நிலைமைக்கு ஏற்ப ஓவர்கள் குறைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
தொடர்ந்து மழை பெய்தால் ஆட்டம் கைவிடப்பட்டு இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்படும். இதன்மூலம் பெங்களூரு பிளேஆஃப் சுற்றுக்கு செல்லலாம் என்றால் அதுதான் இல்லை. முன்னதாக 3.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் மும்பை அணி ஹைதராபாத்திடம் தோற்க வேண்டும். இப்படி ஒரு சிக்கலில் பெங்களூரு அணி சிக்கி கொண்டுள்ளது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
பெங்களூரு அணி: விராட் கோலி , ஃபாஃப் டூபிளெசிஸ் (கேப்டன்) , மைக்கேல் பிரேஸ்வெல் , மஹிபால் லோம்ரோர் , கிளென் மேக்ஸ்வெல் , ஷபாஸ் அகமது , வெய்னே பார்னெல் , அனுஜ் ராவத்(விக்கெட் கீப்பர்) , ஹர்ஷல் பட்டேல் , முகமது சிராஜ் , ஹிமான்ஷூ ஷர்மா
குஜராத் அணி: ஷுப்மன் கில் , ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்) , சாய் சுதர்சன் , டேவிட் மில்லர் , ராகுல் திவேடியா , தஷூன் ஷனகா , விருத்திமான் சஹா (விக்கெட் கீப்பர் ) , ரஷித் கான் , முகம்மது ஷமி , மோகித் சர்மா , நூர் அகமது
மேலும் படிக்க: IPL Playoffs: மும்பைக்கு முட்டு கட்டையாய் பெங்களூரு.. குறுக்கே ’கௌசிக்’ காக ராஜஸ்தான்.. யாருக்கு பிளே ஆஃப்?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -