GT vs CSK Qualifier 1 LIVE Score: குஜராத் டைட்டன்ஸ் ஆல் அவுட்! பத்தாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்!
IPL 2023, Qualifier 1, GT vs CSK LIVE Score Updates: ஐபிஎல் தொடரின் முதல் பிளே ஆஃப் போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் இன்று மோதுகின்றது. போட்டி நிலவரத்தை உடனுக்குடன் இங்கு காணலாம்.
ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது.
14 பந்துகளில் 36 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடி வருகிறது.
குஜராத் அணி 8 விக்கெட்களுக்கு 137 ரன் எடுத்துள்ளது.
குஜராத் அணி 14 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 106 ரன் எடுத்துள்ளது. 30 பந்துகளில் 71 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் குஜராத் அணி விளையாடி வருகிறது.
குஜராத் அணி 98 ரன் எடுத்திருந்த நிலையில், ராகுல் தெவாட்டியா அவுட் ஆனார்.
குஜராத் அணி 5 விக்கெட் இழப்பு. சுப்மன் கில் 42 ரன்னில் ஜடேஜா பவுலிங்கில் அவுட் ஆனார்.
12 வது ஓவரில் டேவிட் மில்லர் அவுட் ஆனார்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 74 ரன் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 74 ரன் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 74 ரன் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 74 ரன் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி 11 ஓவர் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 74 ரன் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளது
சி.எஸ்.கே. அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி 2 பந்துகளீல் 1 ரன் எடுத்து அவுட் ஆனார். மொஹித் ஷர்மா பந்தில் ஹர்தி பாண்டியாவிடம் கேட்ச் அவுட் ஆனார்,.
அவுட்டானார் அம்பத்தி ராயுடு..சென்னை அணி தனது 5வது விக்கெட்டை இழந்தது. தோனி களமிறங்கியுள்ளார்
சென்னை அணி தனது 4வது விக்கெட்டை இழந்தது. டெவன் கான்வே 40 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
சென்னை அணி தனது 3வது விக்கெட்டை இழந்தது. 15 ஓவர்களில் அந்த அணி 125 ரன்கள் எடுத்துள்ளது.
ஷிவம் துபே ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்தார். நூர் அகமது பந்து வீச்சில் அவர் போல்ட் ஆனார்
சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சென்னை அணி 10 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 85 ரன்கள் எடுத்துள்ளது. விக்கெட் எடுக்க முடியாமல் குஜராத் அணி திணறி வருகிறது.
சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 50 ரன்கள் விளாசினார். 36 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் அவர் அரைசதம் எட்டியுள்ளார்.
சென்னை அணி வீரர் ருத்துராஜ் கெய்க்வாட் 50 ரன்கள் விளாசினார். 36 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் அவர் அரைசதம் எட்டியுள்ளார்.
சென்னை அணி 8 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 64 ரன்களை குவித்துள்ளது. விக்கெட் எடுக்க முடியாமல் குஜராத் அணி திணறி வருகிறது.
சி.எஸ்.கே. இரண்டு ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன் எடுத்துள்ளது.
1.2 பந்தில் கெய்க்வாட் கேட்ச் அவுட் ஆனார். ஆனால், நோ பால் ப்ரி ஹிட் கிடைத்து
முதல் ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன் எடுத்து விளையாடி வருகிறது.
சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான முதலாவது தகுதிச் சுற்று போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் சீசனில் குவாலிபையர் போட்டியில் குஜராத் - சென்னை அணிகள் மோதுகிறது. இதில் தோற்கும் அணி தொடரிலிருந்து வெளியேறியாது. மாறாக நாளை நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன், மே 26 ஆம் தேதி நடக்கும் குவாலிஃபையர் 2 போட்டியில் மோதும்
குஜராத் அணி கடந்த சீசனில் தான் அறிமுகமாகியிருந்தது. ஆனால் 2 சீசனிலும் சென்னை அணி குஜராத்தை வீழ்த்தியது இல்லை. இந்த போட்டியில் வரலாறு மாறும் என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்த சீசனில் லீக் போட்டிகளில் சென்னை வீரர் மதீஷா பதிரனா வீழ்த்திய 15 விக்கெட்களுள் 14 டெத் ஓவரில் எடுத்தவை
ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகளின் முடிவில் குஜராத் அணி முதல் இடத்தையும், சென்னை அணி 2வது இடத்தையும் பெற்றது.
Background
GT vs CSK, IPL 2023 Qualifier 1 LIVE Score:
ஐபிஎல் 16வது சீசனின் லீக்கில் 14 போட்டிகளில் விளையாடி 10ல் வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. அதேபோல், கடந்த ஆண்டு 9வது இடத்தை பிடித்த எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
இந்த இரு அணிகளும் (மே 23) இன்று சென்னை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதே நேரத்தில் தோல்வியடைந்த அணி இரண்டாவது தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும்.
நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை மூன்று முறை எதிர்கொண்டு குஜராத் டைட்டன்ஸை வென்றதில்லை. இருப்பினும், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்றைய முதல் தகுதிப்போட்டி இருப்பதால் சென்னைக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. மேலும், சென்னை அணியின் பலமே எம்.எஸ்.தோனிதான். அவரது அனுபவமும், மேஸ்ட்ரோ மூளையும் எப்படியாவது இன்றைய போட்டியில் வெற்றியை தேடி தருவார். குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் அசைக்க முடியாத பார்மில் இருக்கிறார். அதற்கு மேல் முகமது ஷமி மற்றும் ரஷித் கான் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர்.
சென்னை அணியை பொறுத்தவரை, தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே களமிறங்கும் அனைத்து மேட்ச்களிலும் கலக்கி வருகின்றன. இவர்களும் பலமாக ஷிவம் துபே அதிரடியில் பட்டையை கிளப்பி வருகிறார். துஷார் தேஷ்பாண்டே மற்றும் பதிரனா ஆகியோர் பந்துவீச்சில் விக்கெட்களை வீழ்த்தி வருகின்றன.
போட்டி விவரங்கள்:
- குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ் - குவாலிஃபையர் 1
- இடம்: எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம், சென்னை
- தேதி & நேரம்: செவ்வாய், மே 23, 7:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
பிட்ச் அறிக்கை:
சேப்பாக்கம் என்ற எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தின் பிட்ச் மேற்பரப்பு இன்று மெதுவாக இருக்கலாம். எனவே டாஸ் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது நல்லது. குஜராத் டைட்டன்ஸ் அணி வலுவான பந்துவீச்சை கொண்டிருப்பதால், முதலில் அவர்களது சாய்ஸ் பந்துவீச்சாக கூட இருக்கலாம். 170 க்கு மேல் எடுக்கப்படும் ஸ்கோர் வெற்றிக்கு உகந்ததாக இருக்கும்.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி):
சுப்மன் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, தசுன் ஷனகா, மோகித் சர்மா, ரஷித் கான், முகமது ஷமி, நூர் அகமது
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே):
ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்& கேப்டன்), தீபக் சாஹர், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா
இன்றைய போட்டியில் சிறந்த வீரர்களாக யார் இருப்பார்கள்..?
சுப்மன் கில்:
இளம் இந்திய தொடக்க வீரராக சுப்மன் கில் இந்த ஐபிஎல் சீசனில் அபார ஃபார்மில் இருக்கிறார். இவர் இதுவரை 14 போட்டிகளில் விளையாடி 680 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம், அதிக ரன்கள் அடித்தவர்களாக ஆரஞ்சு கேப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இன்றைய போட்டியில் இவர் அதிரடியை தொடர்ந்தால் ஜிடியின் வெற்றி உறுதி.
ரஷித் கான்:
சேப்பாக்கம் ஸ்டேடியம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான பிட்சாக பார்க்கப்படுவதால் ரஷித் கான் இன்றைய போட்டியில் மிகவும் ஆபத்தானவராக இருப்பார். இவர் இந்த சீசனில் 24 விக்கெட்களை வீழ்த்தி, ஐபிஎல் பர்பிள் கேப் பந்தயத்தில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -