RCB vs GT, IPL2022 Live: ஆர்சிபி அணியை அசத்தலாக வீழ்த்தி முதலிடம் சென்ற குஜராத்
RCB vs GT, IPL2022 Live: குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியின் லைவ் அப்டேட்ஸ்!
ஆர்சிபி அணியை குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
18 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
29 ரன்கள் எடுத்திருந்த ஓப்பனர் பேட்டர் சாஹா, ஹசரங்கா பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதனால் முதல் விக்கெட்டை இழந்திருக்கிறது குஜராத் அணி. அடுத்து ஹர்திக் பாண்டியா களமிறங்க உள்ளார்.
19 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்துள்ளது.
விராட் கோலி 53 பந்துகளில் 6 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் விளாசி 58 ரன்களுக்கு ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
16 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் ராஜாட் பட்டிதார் 30 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 45 பந்துகளில் விராட் கோலி அரைசதம் கடந்து அசத்தியுள்ளார்.
முதல் 6 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 43 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓஅர்களின் முடிவில் ஆர்சிபி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்கள் எடுத்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியின் கேப்டன் டூபிளசிஸ் டக் அவுட்டாக்கியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் ஆர்சிபி அணி விக்கெட் இழப்பின்றி 10 ரன்கள் எடுத்துள்ளது.
Background
ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இந்த தொடரில் அறிமுக அணியாக களமிறங்கினாலும் குஜராத் அணி தொடர் தொடங்கியது முதலே பலமிகுந்த அணியாக வலம் வருகிறது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது குஜராத் அணி மிகுந்த பலமிகுந்த அணியாக வலம் வருகிறது.
பெங்களூர் அணி தொடக்கத்தில் பலமான அணியாக விளையாடினாலும், கடந்த ஓரிரு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் அந்த அணி மீண்டு வரவேண்டியது அவசியம் ஆகும். பெங்களூர் கேப்டன் பாப் டுப்ளிசிஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -