RCB vs DC LIVE Score: டெல்லியை வீழ்த்தி அசத்தல்..ஆர்சிபி செய்த மாஸ் சம்பவம்!
RCB vs DC LIVE Score Updates: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்துள்ளது.
39 பந்துகள் களத்தில் நின்ற டெல்லி அணியின் கேப்டன் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 57 ரன்கள் எடுத்தார்.
14 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வரும் டெல்லி அணியின் கேப்டன் அக்ஸர் படேல் 30 பந்துகளில் 53 ரன்களை விளாசி உள்ளார்.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
3 ரன்கள் மட்டுமே எடுத்து ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ் ரன் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
10 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்துள்ளது.
பெர்குசன் வீசிய பந்தை ஷாய் ஹோப் ஓங்கி அடிக்க கரண் சர்மா ஓடிவந்து அசத்தலாக கேட்ச் பிடித்துள்ளார். அதன்படி ஷாய் ஹோப் 29 ரன்களில் விக்கெட்டை இழந்துள்ளார்.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்துள்ளது
6 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்துள்ளது டெல்லி கேப்பிடல்ஸ் அணி.
4 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 30 ரன்கள் எடுத்துள்ளது.
2 ரன்கள் மட்டுமே எடுத்து டெல்லி அணி வீரார் குமார் குஷாக்ரா விக்கெட்டானார்.
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 28 ரன்களில் அவுட்.
2 ரன்கள் மட்டுமே எடுத்து அபிஷேக் பொரல் விக்கெட்டை பறிகொடுத்தார்.
2 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 24 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஓவர் முடிந்த நிலையில் டெல்லி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் எடுத்துள்ளது.
பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியில் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
பேட்டிங்கை தொடங்கிய டெல்லி அணியில் டேவிட் வார்னர் ஒரு ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்துள்ளது. 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்க உள்ளது டெல்லி கேப்பிடல்ஸ்.
6 ரன்கள் மட்டுமே எடுத்து கர்ண் சர்மா விக்கெட்டை பறிகொடுத்தார்.
19 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்துள்ளது.
ஸ்வப்னில் சிங் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
தினேஷ் கார்திக் டக் அவுட் ஆகி வெளியேறியுள்ளார்.
8 பந்துகள் களத்தில் நின்று 13 ரன்கள் எடுத்து மஹிபால் லாம்ரோர் விக்கெட்டை பறிகொடுத்தார்.
17 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்துள்ளது.
16 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
15 ஓவர்கள் முடிந்த நிலையில் 4 விக்கெட் இழப்பிற்கு பெங்களூரு அணி 140 ரன்கள் எடுத்துள்ளது.
29 பந்துகள் களத்தில் நின்ற வில் ஜாக்ஸ் 41 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் 3 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்துள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.
அதிரடியாக விளையாடி வந்த ரஜத் பட்டிதார் 32 பந்துகளில் 52 ரன்கள் விளாசி விக்கெட்டை பறிகொடுத்தார்.
12 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது
பெங்களூரு அணி வீரர் ரஜத் பட்டிதார் 29 பந்துகளில் 50 ரன்கள் விளாசி அரைசதம் எடுத்துள்ளார்.
11 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்துள்ளது.
10 ஓவர்கள் முடிந்து 2 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்துள்ளது.
7 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 76 ரன்கள் எடுத்துள்ளது.
6 ஓவர்கள் முடிந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் எடுத்துள்ளது.
ஆட்டத்தின் மூன்றாவது ஓவரில் டூ ப்ளெசிஸ் மற்றும், 4வது ஓவரில் விராட் கோலியும் தங்களது விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர்.
Background
ஐ.பி.எல் சீசன் 17:
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் இன்றைய 62வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் விளையாடுகின்றன. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு 5ல் வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 12 புள்ளிகளுடன் அட்டவணையில் 5வது இடத்தில் இருக்கிறது.
நேருக்குநேர்:
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி மொத்தம் 29 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 18 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. அதேசமயம், டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. ஒரு போட்டி தடை காரணமாக டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் இன்றைய போட்டியில் விளையாடவில்லை.
இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 4-1 என்ற கணக்கில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தியுள்ளது. ஸ்டேடியத்தை பொறுத்தவரை, இந்த சீசனில் விளையாடிய ஐந்து போட்டிகளில், முதலில் பேட் செய்யும் அணிகளுக்கும் சேஸிங் செய்யும் அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டிகள் நடந்துள்ளன. இதில், மூன்று போட்டிகளில் சேசிங் அணியும், இரண்டு போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணியும் வெற்றிபெற்றுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியமானது பேட்ஸ்மேன்களின் சொர்க்கம் என்றே சொல்லலாம். சிறிய ஸ்டேடியம் என்பதால் பவுண்டரிகள் நாலாபுறமும் பந்துகள் பறக்கும். எனவே, இரு அணியின் பந்துவீச்சாளர்களும் கவனமாக பந்துவீசுவது நல்லது.
டாஸ் வென்ற டெல்லி:
இதையடுத்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கிடையே யான போட்டி அதிக ஸ்கோரிங் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்)
ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், கேமரூன் கிரீன், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள்
டெல்லி கேப்பிடல்ஸ் (பிளேயிங் லெவன்)
ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல்(விக்கெட் கீப்பர்), ஷாய் ஹோப், குமார் குஷாக்ரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்ஸர் படேல்(கேப்டன்), குல்தீப் யாதவ், ரசிக் தார் சலாம், முகேஷ் குமார், இஷாந்த் சர்மா, கலீல் அகமது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -