IPL El Clásico MI vs CSK: ஐபிஎல் தொடரில் மிகவும் பரபரப்பு மிக்க போட்டி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி தான். இதனை ஐபிஎல் தொடரின் எல் கிளாசிகோ என கூறலாம். எல் கிளாசி என்பது ஸ்பேனிஷ் மொழியில் இருந்து வந்த சொல்லாகும்.


இது கால்பந்து கிளப் போட்டிகளில் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி என்றால் அது ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையில் தான். இந்த அணிகளுக்கு இடையிலான போட்டியைத் தான் எல் கிளாசியோ என அழைப்பார்கள். அப்படி ஐபிஎல் தொடரில் எல் கிளாசிகோ போட்டி என்றால் அது சென்னை மும்பை அணியின் மோதல் தான். 


மிகுந்த எதிர்பார்ப்பு:


ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட காலத்தில் இந்த தொடரில் இப்படியான பரபரப்பும் எதிர்பார்ப்பும் மிக்க போட்டியாக இரு அணிகள் மோதும் போட்டி இருக்கும் என யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அதேபோல் 2012ஆம் ஆண்டு வரை இந்த இரு அணிகளும் மோதும் போது பெரிய எதிர்பார்ப்பு இருந்ததில்லை. மாறாக இயல்பாகவே நடக்கும்  இரு அணிகளுக்கு இடையிலான போட்டி என தான் இருந்தது.


ஆனால் 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகிறது என்றால், போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்ட கணத்தில் தொடங்கி இணையத்தில் இணையத்தில் ரசிகர்கள் சண்டையிட்டுக்கொள்ள ஆரம்பித்து விடுகிறார்கள். ரசிகர்கள் ஒருபுறம் இப்படி செய்ய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சென்னை மும்பை மோதல் என்றாலே, பல்வேறு கருத்துகளை இரு அணிகளுக்கும் ஆதரவாக பேசி எதிர்பார்ப்பை எகிறவைக்கிறார்கள். 


கோப்பையை வென்று காட்டிய ரோகித்:


2010 மற்றும் 2011ஆம் ஆண்டு கோப்பையை வென்று 2013ஆம் ஆண்டும் கோப்பையை வென்று ஐபிஎல் வரலாற்றில் மூன்று கோப்பைகளை வென்ற அணி என்ற பெருமையை பதிவு செய்ய சென்னை அணி இறுதிப் போட்டியில் களமிறங்கியது.  அந்த ஆனால் அந்த சீசனில் லீக் தொடரில் முதல் ஐந்து போட்டிகளை தோற்ற ரிக்கி பாண்டிங் தலைமையிலான மும்பை அணி அதன் பின்னர், ரோகித்தின் கரங்களுக்கு வந்தது. ரிக்கி பாண்டிங்கினாலே முடியல இந்த சின்ன பையன் என்ன செய்து விடுவான் என பலர் கேள்வி எழுப்பியதை எல்லாம் கடந்து தோனியின் தலைமையிலான சென்னை அணியை எதிர்த்து இறுதிப் போட்டியில் விளையாட களமிறங்கினார் ரோகித்.


அந்த இறுதிப் போட்டிக்கு முன்னரும் கூட தோனியின் கேப்டன்சி முன்னால் மும்பை தவிடுபொடியாகிவிடும் என கூறீனார்கள். இதற்கு காரணம் 2010ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் சச்சின் தலைமையிலான மும்பை அணி  தோனி தலைமையிலான சென்னை அணியிடம் சரணடைந்தது மட்டுமில்லாமல், சென்னை அணியின் முதல் ஐபிஎல் கோப்பையும் அதுதான். இதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது மும்பை அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை வென்றது. 


இறுதிப்போட்டியில் 3 முறை:


அதன் பின்னர் 2015, 2019 ஆகிய ஆண்டுகளில் மும்பை கோப்பையைக் கைப்பற்றினாலும், அவை அனைத்தும் சென்னை அணிக்கு எதிராகத்தான், மேலும், சென்னை அணி இரண்டு ஆண்டுகள் தடை செய்யப்பட்டபோது தோனி ரைஸிங் புனே ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். இதில் 2017ஆம் ஆண்டு மும்பை அணி கோப்பையை புனே அணியுடனான இறுதிப் போட்டியை வென்று கோப்பையை கைப்பற்றியது. சென்னை அணி தடை செய்யப்பட்ட பின்னர் சென்னை அணியின் ரசிகர்கள் தோனி இருந்த புனே அணிக்கு ஆதரவளித்து வந்தனர். 


இப்படி சென்னை அணியின் கோப்பையை ஒருமுறை அல்ல இருமுறை அல்ல மொத்தம் மூன்று முறை மும்பை அணி தட்டிச் சென்றுள்ளது. இதனாலேயே சென்னை அணி ரசிகர்களுக்கு மும்பை அணியை திட்டித் தீர்த்து வருகின்றனர். பதிலுக்கு மும்பை அணி ரசிகர்களும் சென்னை அணியை சமூகவலைதளங்களில் பதிலடி கொடுக்க இணையதளமே இவர்கள் சண்டையில் நிரம்பி வழியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், போட்டியில் வீரர்களுக்கு இடையிலான ஆக்ரோஷமான விளையாட்டும் அனல் பறக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.