RCB vs DC Score LIVE :கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து பெங்களூர் வெற்றி - கே.எஸ்.பரத் அபாரம்

துபாயில் நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லி அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

சுகுமாறன் Last Updated: 08 Oct 2021 11:12 PM
கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து பெங்களூர் வெற்றி - கே.எஸ்.பரத் அபாரம்

பெங்களூர் அணியின் வெற்றிக்கு 1 பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பெங்களூர் விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் ஆவேஷ்கான் வீசிய கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து பெங்களூர் அணியை வெற்றி பெற வைத்தார்.

6 பந்தில் 15 ரன்கள் தேவை - வெற்றி பெறுமா பெங்களூர்?

பெங்களூர் அணியின் வெற்றிக்கு 6 பந்தில் 15 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் கே.எஸ். பரத்தும், மேக்ஸ்வேலும் உள்ளனர். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18 பந்தில் 31 ரன்கள் - பெங்களூர் வெற்றி பெறுமா?

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றிக்கு 18 பந்தில் 31 ரன்கள் தேவைப்படுகிறது. பரத் 62 ரன்களுடனும், மேக்ஸ்வேல் 39 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

பெங்களூர் வெற்றிக்காக போராடும் பரத் - மேக்ஸ்வேல் ஜோடி

டெல்லி அணி நிர்ணயித்த 165 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிவரும் பெங்களூர் அணியின் வெற்றிக்காக ஸ்ரீகர் பரத்தும், கிளென் மேக்ஸ்வெல்லும் போராடி வருகின்றனர். பெங்களூர் வெற்றிக்கு 41 பந்தில் 78 ரன்கள் தேவைப்படுகிறது.

ப்ளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறிய மும்பை - ஹைதராபாத்தால் வாய்ப்பு பெற்ற கொல்கத்தா

ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் மும்பை ஆட்டமிழக்க செய்யாத காரணத்தால், மும்பை அணிக்கு ப்ளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு கைநழுவி போனது.

கூல்டர் நைல் ஓவரில் அபிஷேக் ஹாட்ரிக் பவுண்டரிகள்

ஹைதராபாத் அணி பந்துவீச்சில் அபிஷேக் சர்மா கூல்டர் நைல் வீசிய ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்துள்ளார்.

4 ஓவர்களில் 47 ரன்கள் - ஹைதராபாத் அதிரடி

மும்பை அணி நிர்ணயித்த 236 ரன்கள் என்ற இலக்குடன் ஆடி வரும் ஹைதராபாத் அணியும் அதிரடி தொடக்கத்தை தொடங்கியுள்ளது. அந்த அணியினர் 4 ஓவர்கள் முடிவில் 47 ரன்களை எடுத்துள்ளது. ஜேசன் ராய் 29 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 13 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

கோலி, படிக்கல் ஏமாற்றம் - பெங்களூர் தடுமாற்றம்

டெல்லி அணி நிர்ணயித்த 165 ரன்கள் என்ற இலக்குடன் ஆடி வரும் பெங்களூர் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 26 ரன்களை இழந்து ஆடி வருகிறது. விக்கெட் கீப்பர் ஸ்ரீகர் பரத்தும், டிவிலியர்சும் களத்தில் உள்ளனர்.

பெங்களூர் அணிக்கு 165 ரன்கள் இலக்கு

பெங்களூர் அணிக்கு எதிராக பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்களை குவித்துள்ளது.

கடைசி கட்டத்தில் டெல்லியை கட்டுப்படுத்திய பெங்களூர்

டெல்லி கேபிடல்ஸ் அணி 18.4 ஓவர்களில் 156 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் - டெல்லி நிதானம்

பெங்களூர் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் டெல்லி அணி அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகள் விழுந்ததால் 16.5 ஓவர்களில் 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

2 விக்கெட்டுகளுடன் அதிரடியைத் தொடரும் டெல்லி

டெல்லி அணி பெங்களூர் அணிக்கு எதிராக 2 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை எடுத்து ஆடி வருகிறது. ரிஷப்பண்ட் 8 ரன்களுடனும், ஸ்ரேயாஸ் அய்யர் 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

முதல் விக்கெட்டை இழந்தது டெல்லி

பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி தனது முதல் விக்கெட்டை இழந்துள்ளது. ஷிகர் தவான் ஹர்ஷல் படேல் பந்தில் கிறிஸ்டியன் பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 88 ரன்களுக்கு 1 விக்கெட் இழப்பிற்கு டெல்லி ஆடி வருகிறது.

டெல்லி அதிரடி ஆட்டம்

பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் டெல்லி அணி 7.4 ஓவர்களில் 63 ரன்கள் எடுத்துள்ளது. பிரித்வி ஷா 28 ரன்களுடனும், ஷிகர் தவான் 31 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

5.4 ஓவர்களில் 50 ரன்களை கடந்த டெல்லி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக பேட் செய்து வரும் டெல்லி அணி 5.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்களை எடுத்துள்ளது.

100வது வெற்றியை பதிவு செய்யுமா பெங்களூர்?

ஐ.பி.எல். தொடரில் இன்று டெல்லி அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் 100வது வெற்றி ஆகும்.

Background

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் துபாய் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டாஸ் வென்று பீல்டிங்கை தேர்வு செய்தார்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.