சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீண்ட காலமாக விளையாடிய ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவை, ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சனுக்காக டிரேடிங் செய்தது. சென்னை அணியின் ரசிகர்கள் தளபதி என்று ஜடேஜா என்று அழைக்கப்படும் ஜடேஜா சென்னை அணிக்காக பல இக்கட்டான நிலைமைகளில் அணிக்காக பல வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளார், அந்த வகையில் சிஎஸ்கே அணிக்காக ஜடேஜா சிறப்பான ஆட்டங்களை குறித்து காணலாம்.
சென்னை அணிக்காக ஜடேஜா செய்த தரமான சம்பவங்கள்
- 2013 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக 10 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டார். அந்த சீசனில் டெக்கான் சார்ஜார்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெறும் 12 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்தார். இது தான் சென்னை அணிக்காக சிறந்த பந்துவீச்சாக உள்ளது.
- 2021 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் ஹர்ஷல் பட்டேலின் ஒரே ஒவரில் 37 ரன்கள் குவித்தார். மேலும் அந்த போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்து சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.
- 2013 ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் 3 விக்கெட்டும், பேட்டிங்கில் 14 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார்.
- 2020 ஆம் ஆண்டு சார்ஜாவில் KKR எதிரான போட்டியில சென்னை அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்தடுத்த இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டு சென்னை அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.
- ஆனால் சென்னை அணி ரசிகர்களால் என்றுமே மறக்க முடியாத ஆட்டம் என்றால் அது 2023 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியாகும், மழை காரணமாக இரண்டு நாள் சென்ற இந்த இறுதிப்போட்டியில் சென்னை அணி வெற்றிப் பெற கடைசி இரண்டுப் பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 5வது கோப்பையை வென்று கொடுத்தார்
தனது பேட்டிங் பவுலிங் ஃபீல்டிங் என மூன்று துறைகளிலும் சிறப்பாக இருக்கக்கூடிய ஜடேஜா சென்னை அணியில் இல்லாவிட்டாலும் தான் எங்கு தனது ஐபிஎல் கேரியரை தொடங்கிய அதே ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.