ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் ஐபிஎல் 2023 தொடரில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறந்த பார்மில் இருந்து வருகிறார். கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 7) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சிறப்பாக ஆடி 38 பந்துகளில் (4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) 66 ரன்கள் குவித்தார் . இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் 5 சிக்ஸர்களை குவித்ததன் மூலம் சிறப்பு சாதனை ஒன்றை படைத்துள்ளார். 


சஞ்சு சாம்சன்: 


ஐபிஎல்லில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அதிக சிக்ஸர்களை அடித்தவர்கள் பட்டியலில் கேஎல் ராகுலை முந்தினார். இதன்மூலம், டாப் 5 பட்டியலிலும் நுழைந்தார். இந்த பட்டியலில், சஞ்சு 114 சிக்ஸர்களுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார், அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் 109 சிக்ஸர்களுடன் கடைசி இடத்தில் உள்ளார். இது தவிர சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் தோனி 232 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். 


ஐபிஎல்லில் அதிக சிக்ஸர்கள் அடித்த டாப்-5 விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள்:



  1. மகேந்திர சிங் தோனி (சென்னை சூப்பர் கிங்ஸ்) - 232 சிக்ஸர்கள்.

  2. தினேஷ் கார்த்திக் (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்) - 131 சிக்சர்கள்.

  3. ரிஷப் பண்ட் (டெல்லி கேபிடல்ஸ்) - 123 சிக்சர்கள்.

  4. சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்) - 114 சிக்சர்கள்.

  5. கேஎல் ராகுல் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) - 109 சிக்ஸர்கள். 


ஐபிஎல் 2023 சீசனில் சஞ்சு சாம்சன் இதுவரை 11 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 154.77 ஸ்ட்ரைக் ரேட்டில் 308 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 3 அரைசதங்கள் உள்பட 19 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 


6 பந்துகளில் 17 ரன்கள் தேவை: போட்டி சுருக்கம்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடைசி 6 பந்துகளில் 17 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக சந்தீப் சர்மா பந்து வீச வந்தார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக அப்துல் சமத் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் கிரீஸில் இருந்தனர். சந்தீப் சர்மாவின் முதல் 3 பந்துகளில் அப்துல் சமத் மற்றும் மார்கோ ஜோன்சன் 10 ரன்கள் எடுத்தனர். அதாவது கடைசி 3 பந்துகளில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற 7 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் ரசிகர்கள் சந்தீப் சர்மா மீது நம்பிக்கை வைத்திருந்தனர். சந்தீப் சர்மா அந்த ஓவரின் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்துகளை அற்புதமாக வீசினார். இந்த 2 பந்துகளில் பேட்ஸ்மேன் 2 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.


கடைசி பந்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெற்றி பெற ஒரு சிக்சர் தேவைப்பட்டது. அப்போது கடைசி பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்று அப்துல் சமத் அவுட் ஆனார். சந்தீப் ஷர்மா உள்ளிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் வெற்றியைக் கொண்டாடத் தொடங்கினர். நடுவர் அந்த பந்தை நோ பால் என்று கூற, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் அப்துல் சமதுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்தது. இந்த முறை அப்துல் சமத் தயாராக இருந்தார், அவர் எந்த தவறும் செய்யவில்லை… சந்தீப் ஷர்மாவின் பந்தை எல்லைக்கு அப்பால் சிக்ஸருக்கு அனுப்பினார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களும், ரசிகர்களும் மகிழ்ச்சியில் குதித்தனர். அதே சமயம் சந்தீப் சர்மா உள்ளிட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்களால் தங்களது தோல்வியை நம்ப முடியவில்லை. இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அணி தோல்வியடைந்தது.