ஐ.பி.எல் சீசன் 17:


ஐ.பி.எல் 2024 இன் 58வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.


பெங்களூரு - பஞ்சாப்:


ஐபிஎல் 2024ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி இரு அணிகளும் தலா 4 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன. பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற, அடுத்த மூன்று போட்டிகளில் இரு அணிகளும் கட்டாய வெற்றியினை பதிவு செய்ய வேண்டும். ஆனால் இன்றைய போட்டியில் எந்த அணி தோற்கிறதோ அந்த அணி வெளியேற்றப்பட உள்ளது. ஏனெனில் இன்று தோல்வியடைந்த அணி அடுத்த 2 போட்டிகளில் வெற்றி பெற்றாலும் 12 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.


சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் தற்போது 12 புள்ளிகளைப் பெற்றிருந்தாலும், லக்னோ மற்றும் டெல்லி இடையே இன்னும் ஒரு போட்டி உள்ளது. இதன் காரணமாக அவற்றில் ஒன்று நிச்சயமாக 14 புள்ளிகளை எட்டி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை தக்க வைக்கும். 


 டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ்:


ஐபிஎல் 2024 தொடங்கப்பட்டபோது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 8 போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்தது. ஆனால், அதன்பிறகு ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி படை கடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றிகளை குவித்துள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் என்ற நம்பிக்கையை அந்த அணி தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், அடுத்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றாக வேண்டும்.


கடந்த 3 ஆட்டங்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ஒரு முறையும், குஜராத் டைட்டன்ஸ் அணியை இரண்டு முறையும் தோற்கடித்துள்ளது. இந்நிலையில் தான் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி முதலில் பேட்டிங்க் செய்யும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மெகா இலக்கை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு நிர்ணயிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.



ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்)


 விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ்(கேப்டன்), வில் ஜாக்ஸ், ரஜத் படிதார், மஹிபால் லோம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), ஸ்வப்னில் சிங், கர்ன் சர்மா, முகமது சிராஜ், லாக்கி பெர்குசன்


பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்)


ஜானி பேர்ஸ்டோவ்(விக்கெட் கீப்பர்), பிரப்சிம்ரன் சிங், ரிலீ ரோசோவ், ஷஷாங்க் சிங், சாம் குர்ரன்(கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், அசுதோஷ் சர்மா, ஹர்ஷல் படேல், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், வித்வத் கவேரப்பா