ஐபிஎல் 16 வது சீசனில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்றாவது அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. ஏற்கனவே பிளே ஆஃப் ரேஸில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் முதல் இரண்டு அணியாக முன்னேறியது. மீதமுள்ள ஒரு அணி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. 


4வது அணியாக உள்ளே செல்ல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. பெங்களூரு அணி இதுவரை 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 14 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் 5வது இடத்தில் உள்ளது. 


ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏற்கனவே பிளே ஆஃப் கனவு மங்கிய நிலையில், இன்றைய லீக் போட்டிகளில் முடிவை பொறுத்தே எந்த அணி 4வதாக பிளே ஆப் செல்லும் என தெரியும்.


மும்பை அணி:


சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். மும்பை இந்தியன்ஸ் அணி 13 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர்கொள்கிறது.


இந்தநிலையில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்று பார்க்கலாம்.



  1. குஜராத் டைட்டன்ஸ்:  13 போட்டிகள் - 9 வெற்றி (பிளே ஆஃப் தகுதி)

  2. சென்னை சூப்பர் கிங்ஸ்: 14 போட்டிகள்- 8 வெற்றி (பிளே ஆஃப் தகுதி)

  3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 14 போட்டிகள்- 8 வெற்றி (பிளே ஆஃப் தகுதி)

  4. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 13 போட்டிகள் - 7 வெற்றி

  5. ராஜஸ்தான் ராயல்ஸ்: 14 போட்டிகள்- 7 வெற்றி

  6. மும்பை இந்தியன்ஸ்: 13 போட்டிகள் - 7 வெற்றி

  7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 14 போட்டிகள் - 6 வெற்றி

  8. பஞ்சாப் கிங்ஸ்: 14 போட்டிகள் - 6 வெற்றி

  9. டெல்லி கேபிடல்ஸ்: 14 போட்டிகள் - 5 வெற்றி

  10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 13 போட்டிகள் - 4 வெற்றி


ஆரஞ்சு கேப்: 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 13 போட்டிகளில் 702 ரன்களுடன் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான சென்னை வீரர் டெவோன் கான்வே 87 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் இவர் இந்த பட்டியலில் 13 போட்டிகளில் 585 ரன்களுடன் 3வது இடத்திற்கு முன்னேறினார். ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் 625 ரன்களுடன் 2வது இடத்தில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில் 576 ரன்களுடன் 4வது இடத்தில் உள்ளார். பெங்களூரு வீரர் விராட் கோலி 538 ரன்களுடன் பந்தயத்தில் 5வது இடத்தில் உள்ளார்.



  1. (ஆர்சிபி) ஃபாஃப் டு பிளெசிஸ் - 702 ரன்கள் (13 போட்டிகள்)

  2. (ஆர்ஆர்) யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 625 ரன்கள் (14 போட்டிகள்)

  3. (சிஎஸ்கே) டெவோன் கான்வே - 585 ரன்கள் (14 போட்டிகள்)

  4. (ஜிடி) ஷுப்மான் கில் - 576 ரன்கள் (13 போட்டிகள்)

  5. (ஆர்சிபி) விராட் கோலி - 538 ரன்கள் (13 போட்டிகள்)


பர்பிள் கேப்: 


பர்பிள் கேப் பந்தயத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 23 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். அதே அணியை சேர்ந்த ரஷித் கான் 23 விக்கெட்களுடன் இரண்டாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் யுஸ்வேந்திர சாஹல் 21 விக்கெட்டுகளுடன் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். மும்பை அணியின் பியூஷ் சாவ்லா 13 ஆட்டங்களில் 20 விக்கெட்டுகளுடன் 4வது இடத்திலும், கொல்கத்தா அணியின் வருண் சக்ரவர்த்தி 20 விக்கெட்டுகளுடன் 5வது இடத்தில் உள்ளார்.



  1. (ஜிடி) முகமது ஷமி - 23 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)

  2. (ஜிடி) ரஷித் கான் - 23 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)

  3. (ஆர்ஆர்) யுஸ்வேந்திர சாஹல் - 21 விக்கெட்டுகள் (14 போட்டிகள்)

  4. (எம்ஐ) பியூஷ் சாவ்லா - 20 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)

  5. (கேகேஆர்) வருண் சக்கரவர்த்தி - 20 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)