ஐபிஎல் தொடரில் நேற்றைய 63வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள ஏகானா ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. 


முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. லக்னோ அணியில் அதிகபட்சமாக ஸ்டொய்னிஸ் 47 பந்துகளில் 89 ரன்களும், க்ருனால் பாண்டியா 42 பந்துகளில் 49 ரன்களும் எடுத்திருந்தனர். 


178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 172 ரன்கள் மட்டுமே தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று லக்னோ பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்து கொண்டது. 


இந்த வெற்றியின்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 13 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது. வருகின்ற சனிக்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிரான கடைசி போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் வெற்றிபெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறும். நேற்றைய போட்டியில் மும்பை அணி தோல்வியுற்றாலும் மீதமுள்ள ஒரு போட்டியில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற வாய்ப்புள்ளது. ஆனால், அதற்கு பெங்களூர் அணி மீதமுள்ள இரண்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியுற வேண்டும். 


இந்தநிலையில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களில் உள்ளது என்று பார்க்கலாம்.



  1. குஜராத் டைட்டன்ஸ்:  13 போட்டிகள் - 9 வெற்றி

  2. சென்னை சூப்பர் கிங்ஸ்: 13 போட்டிகள்- 7 வெற்றி

  3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 13 போட்டிகள்- 7 வெற்றி

  4. மும்பை இந்தியன்ஸ்: 12 போட்டிகள் - 7 வெற்றி

  5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 12 போட்டிகள் - 6 வெற்றி

  6. ராஜஸ்தான் ராயல்ஸ்: 13 போட்டிகள்- 6 வெற்றி

  7. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 13 போட்டிகள் - 6 வெற்றி

  8. பஞ்சாப் கிங்ஸ்: 12 போட்டிகள் - 6 வெற்றி

  9. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 12 போட்டிகள் - 4 வெற்றி

  10. டெல்லி கேபிடல்ஸ்: 12 போட்டிகள் - 4 வெற்றி


ஆரஞ்சு கேப்: 


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் தொடக்க வீரர் 39 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இந்த தொடரில் இது இவரும் 3வது அரைசதமாகும். 13 போட்டிகளில் 425 ரன்களுடன் ஆரஞ்சு கேப் பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் 12 போட்டிகளில் 7 அரைசதங்களுர்டன் 631 ரன்களுடன் ஆரஞ்சு கேப்புடன் முதலிடத்தில் உள்ளார்.குஜராத் அணியின் தொடக்க சுப்மன் கில் 13 போட்டிகளில் 576 ரன்களுடன் 2வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 13 போட்டிகளில் 575 ரன்களுடன் 3வது இடத்தில் இருக்கிறார். 



  1. (ஆர்சிபி) ஃபாஃப் டு பிளெசிஸ் - 631 ரன்கள் (12 போட்டிகள்)

  2. (ஜிடி) ஷுப்மான் கில் - 576 ரன்கள் (13 போட்டிகள்)

  3. (ஆர்ஆர்) யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 575 ரன்கள் (13 போட்டிகள்)

  4. (சிஎஸ்கே) டெவோன் கான்வே - 498 ரன்கள் (13 போட்டிகள்)

  5. (எம்ஐ) சூர்யகுமார் யாதவ் - 486 ரன்கள் (12 போட்டிகள்)


பர்பிள் கேப்:


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை சுழற்பந்து வீச்சாளர் 1 விக்கெட்கள் வீழ்த்தினார். இதன்மூலம், பர்பிள் கேப் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார். சாவ்லா 13 போட்டிகளில் 20 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 23 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். 



  1. (ஜிடி) முகமது ஷமி - 23 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)

  2. (ஜிடி) ரஷித் கான் - 23 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)

  3. (ஆர்ஆர்) யுஸ்வேந்திர சாஹல் - 21 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)

  4. (எம்ஐ) பியூஷ் சாவ்லா - 29 விக்கெட்டுகள் (32 போட்டிகள்)

  5. (கேகேஆர்) வருண் சக்கரவர்த்தி - 19 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)