ஐ.பி.எல். தொடரின் நேற்றைய லீக் போட்டிகளின் முடிவில், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களை பிடித்துள்ளன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் சீசன்:
16வது ஐ.பி.எல். சீசன் கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.பி.எல். அணிகள் தங்களது சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடி வருகின்றன. இதனால் போட்டிகளை காண மைதானங்களில் மட்டுமின்றி தொலைக்காட்சி முன்னிலையிலும் மற்றும் ஆன்லைன் ஸ்டிரீமிங் தளங்களிலும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற அடிப்படையான புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களை பிடிப்பதற்காக 10 அணிகளும் முட்டி மோதி வருகின்றன.
நேற்றைய போட்டி:
வான்கடே மைதானத்தில் நடைபெற்ற நேற்றைய முதல் லீக் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி ராணா தலைமையிலான கொல்கத்தா அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதனால் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்றொரு லீக் போட்டியில் வலுவான குஜராத் அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. இதனால், புள்ளிப்பட்டியலில் எந்தெந்த அணிகள் எந்தெந்த இடங்களுக்கு மாற்றம் கண்டுள்ளன உள்ளன என்பதை தற்போது அறியலாம்.
புள்ளிப்பட்டியல்:
அணிகள் | போட்டி | வெற்றி | தோல்வி | புள்ளி |
ராஜஸ்தான் | 5 | 4 | 1 | 8 |
லக்னோ | 5 | 3 | 2 | 6 |
குஜராத் | 5 | 3 | 2 | 6 |
பஞ்சாப் | 5 | 3 | 2 | 6 |
கொல்கத்தா | 5 | 2 | 3 | 4 |
சென்னை | 4 | 2 | 2 | 4 |
பெங்களூரு | 4 | 2 | 2 | 4 |
மும்பை | 4 | 2 | 2 | 4 |
ஐதராபாத் | 4 | 2 | 2 | 4 |
டெல்லி | 5 | 0 | 5 | 0 |
முதல் நான்கு இடங்களில் யார்?
ராஜஸ்தான் அணி இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வென்று 8 புள்ளிகளுடன் தொடர்ந்து புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அதேநேரம், லக்னோ, குஜராத் மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 5 போட்டிகளில் விளையாடி அதில் 3 வெற்றிகளையும், 2 தோல்விகளையும் பெற்றுள்ளன. இருந்தாலும் ரன் ரேட் அடிப்படையில் இந்த அணிகள் முறையே 2 முதல் 4வது இடங்களை பிடித்துள்ளன. கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, மும்பை மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் தலா இரண்டு வெற்றிகள் பெற்று, ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் முறையே 5 முதல் 9வது இடங்களில் உள்ளன. டெல்லி அணி விளையாடிய 5 போட்டிகளிலும் தோல்வியையும் பதிவு செய்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
இன்றைய போட்டி:
இன்று பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெறும் லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் நேரடியாக 3வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதேநேரம் பெங்களூரு வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறும்.