PBKS vs RR IPL 2023 Playing XI: ராஜஸ்தானுக்கு முக்கிய போட்டி.. ஆனால் அஸ்வின் இல்லை.. இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் இதோ..!

PBKS vs RR IPL 2023 Playing XI: பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் களமிறங்கும் வீரர்கள் யார் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

Continues below advertisement

PBKS vs RR IPL 2023 Playing XI: ஐபிஎல் தொடரின் இறுதிகட்டத்தினை எட்டஎட்ட பரபரப்பும் விறுவிறுப்பும் அதிகமாகிகொண்டே இருக்கிறது. இன்று மோதவுள்ள இரு அணிகளில் ஒரு அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு கொஞ்சம் உள்ளது. மற்றொரு அணிக்கு ப்ளேஆஃப் வாய்ப்பு என்பது அவ்வளவு எளிதில் இல்லை. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 8வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.  

Continues below advertisement

இந்த போட்டி இன்று அதாவது மே 19ஆம் தேதி தொடங்கியுள்ள இந்த போட்டி உலகின் மிக அழகான மைதானங்களில் ஒன்றான தர்மசாலாவில் உள்ள மைதானத்தில் நடைபெறுகிறது. 

இரு அணிகளும் கடந்த போட்டிகளில் தோல்வியை சந்தித்தது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிராக 112 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி படுதோல்வியை சந்தித்தது. அதேபோல், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் கிங்ஸ் அணியும் தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் இரு அணிகளின் பிளே ஆஃப் வாய்ப்புகளும் முடிவுக்கு வந்தன. 

இந்த சீசனில் இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இது இரண்டாவது முறையாகும். முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 34 பந்துகளில் 64 ரன்களும்,  நாதன் எல்லிஸ் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி பஞ்சாப் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார். 

இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறும் போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனில் கடைசி லீக் போட்டி என்பதால் கட்டாயம் இந்த போட்டியினை வெற்றியுடன் முடிக்க தீவிரமாக இருப்பார்கள். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் அதன் ரன்ரேட் அதிகரிக்கும், அப்படி அதிகரிக்கும் ரன்ரேட் பெங்களூரு அணியை விட அதிகமாக இருந்தால் மட்டும் தான் ராஜஸ்தான் அணியால் ப்ளேஆஃப் சுற்றுக்கான போட்டியில் நீடிக்க முடியும். 

பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்:

ஷிகர் தவான்(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், அதர்வா டைடே, லியாம் லிவிங்ஸ்டோன், சாம் குர்ரான், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ராகுல் சாஹர், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங்

ராஜஸ்தான் ராயல்ஸ் பிளேயிங் லெவன்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஆடம் ஜம்பா, டிரென்ட் போல்ட், நவ்தீப் சைனி, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

இம்பேக்ட் ப்ளேயர்கள்: 
 
ராஜஸ்தான் அணி: துருவ் ஜூரல், டோனோவன் ஃபெரீரா, ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் சென், முருகன் அஸ்வின். 
 
பஞ்சாப் அணி: நாதன் எல்லிஸ், சிக்கந்தர் ராசா, ரிஷி தவான், மோஹித் ரதீ, மேத்யூ ஷார்ட் 
Continues below advertisement