PBKS vs KKR, IPL 2023 LIVE:டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ரிசல்ட்.. 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

PBKS vs KKR, IPL 2023 LIVE: kஇங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட் ரைட்ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

Continues below advertisement

LIVE

Background

இந்தியன் பிரீமியர் லீக் 2023 தொடரின் இரண்டாம் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் இன்று மொஹாலியில் உள்ள பிந்த்ரா மைதானத்தில் மாலை 4 மணிக்கு மோதிக்கொள்கின்ரன. 

இளம் கேப்டனாக நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த, அனுபவ வீரராக தவான் பஞ்சாப் அணிக்கு தலைமை தாங்குகிறார். 

இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 20 முறையும், பஞ்சாப் அணி 10 முறையும் வென்றுள்ளது. 

PBKS vs KKR இடையேயான போட்டியில் அதிக ரன்கள்: 

பேட்ஸ்மேன்கள் போட்டிகள் ரன்கள் சராசரி ஸ்ட்ரைக் ரேட் அதிகபட்ச ரன்கள்
கௌதம் கம்பீர் (கேகேஆர்) 15 492 44.72 121.78 72*
விருத்திமான் சாஹா (கிங்ஸ்) 10 322 35.77 143.11 115*

PBKS vs KKR இடையேயான போட்டியில் அதிக விக்கெட்கள்:

பந்துவீச்சாளர்கள் போட்டிகள் விக்கெட்டுகள் சராசரி பொருளாதாரம் பெஸ்ட்
சுனில் நரைன் (கேகேஆர்) 22 32 18.37 6.91 5/19
பியூஷ் சாவ்லா (கிங்ஸ்) 11 10 27.50 7.78 3/18

ஹெட் டூ ஹெட் :

விளையாடிய போட்டிகள்: 30
பஞ்சாப் கிங்ஸ் : 10 வெற்றிகள்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 20 வெற்றிகள் 
கடைசி வெற்றி முடிவுகள்: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
 
கணிக்கப்பட்ட இரு அணி விவரம்:
 
பஞ்சாப் கிங்ஸ்: ஷிகர் தவான்(கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் ப்ரார், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர்
 
இம்பாக்ட் பிளேயர்: ரிஷி தவான்
 

வெங்கடேஷ் ஐயர், என் ஜட்கதீசன், நிதிஷ் ராணா, மந்தீப் சிங், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்கூர், சகரவர்த்தி, வைபவ் அரோரா

இம்பாக்ட் பிளேயர்: டேவிட் வைஸ்

பஞ்சாப் அணி முழு வீரர்கள் பட்டியல்:

ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ் சிங், நாதன் எல்லிஸ் சிங் ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, மோகித் ரதீ, சிவம் சிங்

கொல்கத்தா அணி முழு வீரர்கள் பட்டியல்:

நிதிஷ் ராணா (கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், ரஹ்மானுல்லா குர்பாஸ், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, மந்தீப் சிங், ஷாகிப் சக்ரா ரனாதி, ஹர்ஷித்வர் ரனாதி, வருண்தி , அனுகுல் ராய், ரிங்கு சிங், என் ஜடாதீசன், வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, டேவிட் வைஸ், குல்வந்த் கெஜ்ரோலியா, லிட்டன் தாஸ்

Continues below advertisement
20:00 PM (IST)  •  01 Apr 2023

டக்வொர்த் லீவிஸ் விதிப்படி ரிசல்ட்.. 7 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி..!

டக்வொர்த் லீவிஸ் முறைப்படி பஞ்சாப் அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

19:21 PM (IST)  •  01 Apr 2023

மழையால் தடைப்பட்ட போட்டி..!

கொல்கத்தா பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக தடைபட்டுள்ளது. 

19:17 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 16 ஓவர்கள் முடிவில்..!

16 ஓவர்களில் கொல்கத்தா அணி 146 - 7. 

19:10 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 15 ஓவர்கள் முடிவில்..!

15 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து136 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த ஓவரில் அதிரடி மன்னர் ரஸல் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 

19:02 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 14 ஓவர்கள் முடிவில்..!

14 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த ஓவரில் 2 நோ-பால்கள் வீசப்பட்டது. மொத்தம் இந்த ஓவரில் 18 ரன்கள் சேர்க்கப்பட்டுள்ளது. 

18:55 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 13 ஓவர்கள் முடிவில்..!

13 ஒவர்களில் 100 ரன்களை கொல்த்தா அணி எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 92 ரன்கள் தேவை, கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளது. 

18:52 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 12 ஓவர்கள் முடிவில்..!

12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 101 ரன்கள் தேவை. 

18:48 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 11 ஓவர்கள் முடிவில்..!

11 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:44 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: விக்கெட்..!

இந்த ஐபிஎல் போட்டியில் ராகுல் சஹார் வீசிய முதல் பந்தில் ரின்கு சிங் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறியுள்ளார்.  

18:43 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 80 - 4. 

18:40 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: விக்கெட்..!

10 வது ஓவரை வீசிய சிகேந்தர் ரஷா ராணாவை வீழ்த்தி அசத்தியுள்ளார். 

18:37 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 9 ஓவர்கள் முடிவில்..!

இந்த ஓவரில் சிறப்பாக 15 ரன்கள் குவித்த கொல்கத்தா அணி ஓவர் முடிவில் 75 -3 என்ற நிலையில் உள்ளது. 

18:32 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 8 ஓவர்கள் முடிவில்..!

8 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:24 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: பவர்ப்ளேவில் கொல்கத்தா..!

பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்களை எடுத்துள்ளது. 

18:20 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 5 ஒவர்கள் முடிவில்.!

 5 ஒவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. 

18:17 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: விக்கெட்..!

ஐந்தாவது ஓவரை வீசிய நாதன் எல்லீஸ்  இரண்டாவது பந்தில் குப்ராஸை க்ளீன் போல்ட் ஆக்கியுள்ளார்.  

18:14 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 4 ஓவர்கள் முடிவில்..!

நிதானமாக ஆடி வரும் கொல்கத்தா அணி 4 ஓவர்கள் முடிவில்  இரண்டு விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:08 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: மூன்று ஓவர்கள் முடிவில்..!

மூன்று ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 24 ரன்கள் சேர்த்துள்ளது. 

18:06 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: களமிறங்கிய இம்பேக்ட் ப்ளேயர்..!

கொல்கத்தா அணியின் இம்பேக்ட் ப்ளேயர் வெங்கடேஷ் ஐயர் களமிறங்கியுள்ளார். 

18:02 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 2 ஓவர்கள் முடிவில்..!

2 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டை இழந்து 17 ரன்கள் சேர்த்துள்ளது. 

17:59 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: விக்கெட்..!

பஞ்சாப் அணியின் அர்ஷ்தீப் வீசிய முதல் பந்தில் கொல்கத்தா அணியின் மந்தீப் சிங்கை சாய்த்துள்ளார். 

17:56 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: முதல் ஓவர் முடிவில்..!

முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் சேர்த்துள்ளது. 

17:53 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: தொடங்கியது போட்டி..!

192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது. 

17:47 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: போட்டி தொடங்குவதில் தாமதம்..!

தொழில்நுட்பக் கோளாறால் மைதானத்தில் உள்ள மின் விளக்குகளில் ஒரு பகுதி இயங்காத காரணத்தினால் போட்டி தொடர்ந்து நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

17:43 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: பஞ்சாப் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்..!

சிறப்பாக பேட்டிங் செய்த ராஜபக்‌ஷாவுக்குப் பதிலாக இம்பேக்ட் ப்ளேயராக ரிஷி தவான் பஞ்சாப் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 

17:13 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 20 ஓவர்கள் முடிவில்..!

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் குவித்துள்ளது. 

17:03 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: விக்கெட்..!

நிதானமாக ஆடிவந்த ராஸ் 13 பந்தில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 18 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 168-5. 

16:59 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 17 ஓவர்கள் முடிவில்..!

17 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:52 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 16 ஓவர்கள் முடிவில்..!

16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 153 - 4. 

16:51 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 150 ரன்கள்..!

விக்கெட்டுகள் விழுந்தாலும் சிறப்பாக ரன்கள் குவிக்கும் பஞ்சாப் அணி 15.4வது ஓவரில் 153 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:47 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 15 ஓவர்கள் முடிவில்..!

15 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:45 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live:விக்கெட்..!

தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக விளையாடி வந்த ஷிகர் தவான் வருண் சக்கரவர்த்தி பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

16:43 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 14 ஓவர்கள் முடிவில்..!

14 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்கள் குவித்துள்ளது. 

16:40 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: விக்கெட்..!

அதிரடியாக சிக்ஸர்களை பறக்கவிட்ட ஜிதேஷ் டிம் சவுதியிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 

16:36 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 13 ஓவர்கள் முடிவில்..!

13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 129 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:32 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 12 ஓவர்கள் முடிவில்..!

12 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 121 - 2. 

16:27 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: ராஜபக்‌ஷா அரைசதம் - விக்கெட்..!

சிறப்பாக ஆடி வந்த ராஜபக்‌ஷா 32 பந்துகளில் அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார். 11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் 109-2.

16:21 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 10 ஓவர்கள் முடிவில்...!

அதிரடியாக ரன்கள் குவிக்கும் ராஜபக்‌ஷா ஷிகர் தவான் ஜோடியால் பஞ்சாப் அணி 10 ஓவர்கள் முடிவில் 100 ரன்கள் எட்டியது. 

16:17 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 9 ஓவர்கள் முடிவில்.!

9 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி ஒரு விக்கெட்டை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது. 

16:15 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: நோ-பால்..!

9வது ஓவரின் 3வது பந்து நோபால வீச அதனை பவுண்டரிக்கு விரட்டிய ஷிகர் தவான் ப்ரீகிட் பந்தில் ரன் ஏதும் எடுக்கவில்லை. 

16:10 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 8 ஓவர்கள் முடிவில்..!

ஓவருக்கு குறையாமல் ஒரு பவுண்டரி விளாசும் ராஜபக்சாவின் அதிரடியால் 8 ஓவர்களில் பஞ்சாப் 77 - 1. 

16:03 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 7 ஓவர்கள் முடிவில்..!

சிறப்பாக விளையாடி வரும் பஞ்சாப் அணி 7 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் சேர்த்துள்ளது. 

15:57 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: பவர்ப்ளே முடிவில்..!

சிறப்பாக ரன்கள் குவித்து வரும் பஞ்சாப் அணி பவர்ப்ளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 56 ரன்கள் குவித்துள்ளது. 

15:53 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: 5 ஓவர்கள் முடிவில்..!

சிறப்பாக ரன்கள் குவித்து வரும் பஞ்சாப் அணி 5 ஓவர்கள் முடிவில்  ஒரு விக்கெட்டை இழந்து 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

15:49 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: நான்கு ஓவர்கள் முடிவில்..!

4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 36 - 1.

15:45 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: மூன்று ஓவர்கள் முடிவில்..!

இந்த ஓவரினை சிறப்பாக வீசிய யுமேஷ் யாதவ் ஒரு ரன்மட்டுமே வழங்கினார். பஞ்சாப் அனி ஒரு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. 

15:39 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live:விக்கெட்..!

இரண்டு ஓவர்கள்  முழுமையாக பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின் பிராப் சிம்ரன் 23 ரன்கள் குவித்து அவுட் ஆகியுள்ளார். 

15:34 PM (IST)  •  01 Apr 2023

முதல் ஓவர் முடிவில்..!

முதல் ஓவர் முடிவில் பஞ்சாப் அணி விக்கெட் இழப்பின்றி 9 ரன்கள் சேர்த்துள்ளது. 

15:31 PM (IST)  •  01 Apr 2023

தொடங்கியது போட்டி..!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி தொடங்கியுள்ளது. 

15:15 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: இன்று களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி..!

இன்று களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி:

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்):  ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் 

15:14 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): ரஹ்மானுல்லா குர்பாஸ், மன்தீப் சிங், நிதிஷ் ராணா,  ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி

15:12 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி

இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:

வெங்கடேஷ் ஐயர், ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), நிதிஷ் ராணா (கேப்டன்), ரிங்கு சிங், என் ஜெகதீசன், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், வருண் சக்கரவர்த்தி, உமேஷ் யாதவ், டேவிட் வைஸ், மன்தீப், மன்தீப் அனுகுல் ராய், குல்வந்த் கெஜ்ரோலியா, வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, சுயாஷ் சர்மா

15:03 PM (IST)  •  01 Apr 2023

PBKS vs KKR Score Live: டாஸ் வென்ற கொல்கத்தா அணி..!

டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.