LSG vs DC IPL2023 LIVE: அட்டகாசமாக பந்து வீசி 5 விக்கெட்கள் எடுத்த மார்க் வுட்; டெல்லியை 50 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய லக்னோ அசத்தல் வெற்றி..!
LSG vs DC IPL2023 LIVE: லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
லக்னோ அணியின் மார்க் வுட் 20வது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இது இந்த போட்டியில் அவர் வீழ்த்திய 5வது விக்கெட் ஆகும். இந்த சீசனில் 5 விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் இவர் தான்.
20வது ஓவரின் முதல் பந்தில் அக்ஷர் பட்டேல் அவுட் ஆகியுள்ளார். இந்த ஓவரை மார்க் வுட் வீசி வருகிறார்.
19 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் டெல்லி அனி 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
போட்டியில் மாற்றத்தினை ஏற்படுத்துவார் என டெல்லி அணியால் நம்பப்பட்டு இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்பட்ட அமன் கமீம் கான் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆவேஷ் கான் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
15 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது.
14 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 5 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் சேர்த்துள்ளது.
நிலைத்து ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ராவ்மன் பவல் ஒரு ரன் சேர்த்த நிலையில் ரவி பிஷ்னாய் பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.
13 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகளை இழந்து 86 ரன்கள் சேர்த்துள்ளது.
இந்த ஓவரில் டெல்லி அணி 17 ரன்கள் சேர்த்தது. இதனால் 10 ஓவர்களில் 75 - 3 என்ற நிலையில் டெல்லி உள்ளது.
9 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள்இல் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்துள்ளது.
7வது ஓவரின் கடைசி பந்தில் சர்ஃப்ரஸ் கான் தனது விக்கெட்டை மார்க் வுட் பந்து வீச்சில் பறிகொடுத்தார். ஓவர் முடிவில் 48 -3.
பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்கள் சேர்த்துள்ளது.
5 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் சேர்த்துள்ளது.
டெல்லி அணியின் மிட்ஷெல் மார்ஷ் மார்க் வுட் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியெறியுள்ளார்.
சிறப்பாக விளையாடி வந்த ப்ரித்வி ஷா மார்க் வுட் பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறியுள்ளார்.
4 ஓவர்களில் டெல்லி அணி 40 - 0.
2 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் சேர்த்துள்ளது.
2 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் டெல்லி அணி விக்கெட் இழப்பின்றி 7 ரன்கள் சேர்த்துள்ளது.
194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.
20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் குவித்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் எடுத்துள்ளது.
போட்டியின் 18.3வது ஓவரில் நிக்கோலஸ் பூரன் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார்.
இந்த தொடரின் 50வது சிக்ஸரை லக்னோ அணியின் நிக்கோலஸ் பூரன் அடித்துள்ளார்.
18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் சேர்த்துள்ளது.
17 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 150 ரன்களை சேர்த்துள்ளது
16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்கள் சேர்த்துள்ளது.
அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் லக்னோ அணி 15 ஓவர்கள் முடிவில் 127-4.
நிலையான ஆட்டம் ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்டாய்னஸ் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் ஆகி வெளியேறியுள்ளார்.
14 ஓவர்கள் முடிவில் லக்னோ 117 -3.
13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 112 ரன்கள் சேர்த்துள்ளது.
அதிரடியாக ஆடிவரும் லக்னோ அணி 12 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 101 ரன்கள் சேர்த்துள்ளது.
11.3வது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த மேயர்ஸ் 38 பந்தில் 73 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.
11 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2வது விக்கெட்டை இழந்து 98 ரன்கள் குவித்துள்ளது.
11 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 2வது விக்கெட்டை இழந்து 98 ரன்கள் குவித்துள்ளது.
10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்து 89 ரன்கள் சேர்த்துள்ளது.
கைல் மேயர்ஸின் எளிமையான கேட்ச் உட்பட 4 முறை டெல்லி வீரர்கள் பீல்டிங்கில் கோட்டை விட்டுள்ளனர்.
தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய மேயர்ஸ் அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி, 2 பவுண்டரிகள் உடன் 25 பந்துகளில் 42 ரன்களை சேர்த்துள்ளார்.
முகேஷ் குமார் வீசிய போட்டியின் 7வது ஓவரின் 2 மற்றும் 5வது பந்துகளை அடுத்தடுத்து சிக்சருக்கு விளாசி கைல் மேயர்ஸ் அதககளப்படுத்தினார்.
பவர்பிளே முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 30 ரன்களை சேர்த்தது.
சகாரிய பந்துவீச்சில் கைல் மேயர்ஸ் அடித்து பந்து நேராக கைகளுக்கு கேட்சாக வர, அந்த எளிய வாய்ப்பை கலீல் அகமது தவறவிட்டார்.
5 ஓவர் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 25 ரன்களை எடுத்துள்ளது.
8 ரன்கள் எடுத்திருந்த கே.எல். ராகுல், சகாரியா வீசியா நான்காவது ஓவரின் கடைசி பந்தில் கேட்ச் முறையில் அவுட்டானார்.
போட்டியின் முதல் சிக்சரை விளாசினார் ராகுல். போட்டியின் 4வது ஓவரின் நான்காவது பந்தை சிக்சருக்கு விரட்டினார்.
3 ஓவர்கள் முடிவில் 12 ரன்களை சேர்த்தது லக்னோ அணி. கைல் மேயர்ஸ் - ராகுல் ஜோடி நிதான ஆட்டம்
2 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி ஒரு ரன் சேர்த்துள்ளது.
டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச முடிவு செய்துள்ளது.
Background
லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் இரவு 7.30 மணிக்கு மோத இருக்கின்றன. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அறிமுகமான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி, கே.எல் ராகுல் தலைமையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இவர்கள் விளையாடிய 14 போட்டிகளில் 9ல் வெற்றிபெற்று, கெத்தாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்று அசத்தியது. ஆனால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் தோல்வியை சந்தித்து வெளியேறியது.
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் 2 முறை மட்டும் மோதியுள்ளன. இதில், இரண்டிலும் லக்னோ அணியே வென்றுள்ளது. இந்தநிலையில், இரு அணிகளும் முதல் முறையாக லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன.
ஹெட் டூ ஹெட் ரெக்காட்ர்ஸ்:
இன்னிங்ஸ் | லக்னா வெற்றி | டெல்லி வெற்றி |
முதல் பேட்டிங் | 1 | 0 |
இரண்டாவது பேட்டிங் | 1 | 0 |
சிறந்த வீரர்களின் புள்ளிவிவரங்கள்:
புள்ளிவிவரங்கள் | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | டெல்லி கேபிடல்ஸ் |
அதிகபட்ச தனிநபர் மதிப்பெண் | குயின்டன் டி காக்- 80 | பிருத்வி ஷா- 61 |
சிறந்த பேட்டிங் சராசரி | குயின்டன் டி காக்- 51.50 | ரிஷப் பந்த்- 83.0 |
அதிக ரன்கள் | குயின்டன் டி காக்- 103 | ரிஷப் பந்த் - 83 |
சிறந்த எகானமி | அக்சர் படேல்- 6.0 | மொஹ்சின் கான்- 4.0 |
அதிக விக்கெட்டுகள் | மொஹ்சின் கான்- 4 | ஷர்துல் தாக்கூர் - 4 |
சிறந்த பந்துவீச்சு புள்ளிகள் | மொஹ்சின் கான்- 4/16 | ஷர்துல் தாக்கூர்- 3/40 |
லக்னோவின் வெற்றி பதிவு:
தேதி | வெற்றி | வெற்றி வித்தியாசம் | இடம் |
07/04/2022 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 6 விக்கெட்டுகள் | நவி மும்பை |
01/05/2022 | லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் | 6 ரன்கள் | மும்பை |
LSG vs DC இடையேயான போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்:
பேட்ஸ்மேன் | ரன்கள் |
குயின்டன் டி காக் | 103 |
கேஎல் ராகுல் | 101 |
ரிஷாப் பந்த் | 83 |
பிருத்வி ஷா | 66 |
தீபக் ஹூடா | 63 |
LSG vs DC இடையேயான போட்டியில் அதிக ரன்கள் எடுத்த பந்து வீச்சாளர்கள்:
பந்து வீச்சாளர்கள் | விக்கெட்டுகள் |
ஷர்துல் தாக்கூர் | 4 |
மொஹ்சின் கான் | 4 |
ரவி பிஷ்னோய் | 3 |
குல்தீப் யாதவ் | 2 |
கிருஷ்ணப்பா கவுதம் | 2 |
டெல்லி கேபிடல்ஸ் முழு அணி:
டேவிட் வார்னர் (கேப்டன்), மணீஷ் பாண்டே, மிட்செல் மார்ஷ், சர்ஃபராஸ் கான், அபிஷேக் போரல், பிருத்வி ஷா, ரிலீ ரோசோவ், ரோவ்மன் பவல், யாஷ் துல், அக்சர் படேல், லலித் யாதவ், அமன் கான், அன்ரிச் நார்ட்ஜே, முஸ்தாபிசுர் ரஹ்மான், லுங்கி என்கிடி, இஷாந்த் சர்மா, குல்தீப் யாதவ், பில் சால்ட், கலீல் அகமது, முகேஷ் குமார், சேத்தன் சகாரியா, கமலேஷ் நாகர்கோடி, பிரவின் துபே, விக்கி ஓஸ்ட்வால்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முழு அணி:
கேஎல் ராகுல் (கேப்டன்), ரவி பிஷ்னோய், ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, குயின்டன் டி காக், மனன் வோஹ்ரா, மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், நவீன்-உல்-ஹக், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், யுத்வீர் சரக், ஸ்வப்னில் சிங், பிரேராக் மன்கட், அமித் மிஸ்ரா, டேனியல் சாம்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், நிக்கோலஸ் பூரன்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -