ஐபிஎல் போட்டித்தொடர் நேற்று அதாவது மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. போட்டித்தொடரின் இரண்டாவது போட்டியில், இன்னும் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 2012 மற்றும் 2014ஆம் ஆண்டு சீசன்களில் கோப்பையை வென்ற கொல்கத்தா அணியும் மொஹாலியில் மோதிக் கொள்கின்றன. இந்த தொடரின் இரண்டாவது போட்டியான இதில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் ராணா பந்து வீச முடிவு செய்துள்ளார். இதன் படி, பஞ்சாப் அணி பேட்டிங் செய்யவுள்ளது. மொத்தம் 10 அணிகள் களமிறங்கும் இந்த தொடரில் கொல்கத்தா 'A' பிரிவுலும் பஞ்சாப் 'B' பிரிவிலும் இடம் பெற்றுள்ளது. 

 

இன்று களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி:


பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): ஷிகர் தவான்(கேட்ச்), பிரப்சிம்ரன் சிங்(வ), பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், சாம் குர்ரன், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்  


பஞ்சாப் கிங்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்: 


 ரிஷி தவான், டைட், மாட் ஷார்ட், பாட்டியா மற்றும் ரதி.


இன்றைய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (பிளேயிங் லெவன்): ரஹ்மானுல்லா குர்பாஸ்(w), மன்தீப் சிங், நிதிஷ் ராணா(கேட்ச்), ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி


கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்: 


சுயாஷ், அரோரா, ஜெகதீசன், வெங்கடேஷ் ஐயர் மற்றும் வைஸ்


இளம் கேப்டனாக நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வழிநடத்த, அனுபவ வீரராக தவான் பஞ்சாப் அணிக்கு தலைமை தாங்குகிறார். 


இரு அணிகளும் இதுவரை 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி அதிகபட்சமாக 20 முறையும், பஞ்சாப் அணி 10 முறையும் வென்றுள்ளது.