அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டியில் ஹர்திக் தலைமையிலான குஜராத் அணி, நான்கு முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றியை பெற்றது. 


இம்பாக்ட் ப்ளேயர் விதி:


சென்னை அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய ருதுராஜ் கெய்க்வார் 92 ரன்கள் எடுத்து மிரட்டினார். இதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 179 ரன்கள் இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயித்தது. 


அதன்பிறகு, 180 என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணிக்கு கில் பக்கபலமாக இருந்தார். ஷுப்மான் கில்லின் 63 ரன்கள், ரஷித் கான் மற்றும் ராகுல் திவேதியா ஆகியோரின் கடைசி நேர அதிரடியால் குஜராத் வெற்றியை ருசித்தது. 


துஷார் பாண்டே:


ஐபிஎல் தொடரில் முதல் இம்பாக்ட் பிளேயராக துஷார் பாண்டே உள்ளே வந்தார். வந்ததும் பார்மில் இருந்த கில்லை வெளியேற்றினாலும், 50 ரன்களுக்கு மேல் விட்டுகொடுத்தார். இதனாலும் சென்னை ஒரு வழியில் தோல்வி பாதைக்கு சென்றது. அதேபோல், குஜராத்தின் சாய் சுதர்சன் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக களமிறங்கி நிதான ஆட்டத்தை வெளிபடுத்தினார். 


கடினம்:


இம்பாக்ட் பிளேயர் விதி எனது வேலையை கடினமாக்குகிறது என ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசுகையில், “ உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இந்த இம்பாக்ட் பிளேயர் விதி எனது கேப்டன் வேலை கடினமாக்குகிறது. ஏனென்றால், உங்களிடம் அதிகபடியான வீரர்கள் இருக்கும்போது, நீங்கள் சரியான நேரத்தில் யாரை தேர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும். 


எனது உள்ளுணர்வு சொல்வதை கேட்பேன். அது மூலமாகவே கடினமான தூரத்தையும், எளிதாக கடந்து வந்தேன். அது போட்டியிலும் பலனளித்தது. ஒரு சில பந்துவிச்சாளர்கள் லேட்டாக உள்ளே வந்தாலும், அவர்களது வேலையை சரியாக செய்தனர். ” என தெரிவித்தார். 


கேப்டன்கள் கருத்து:


மேலும், இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்து ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் எடுத்து குஜராத் வெற்றியில் முக்கிய பங்கு வகித்த ஆப்கானிஸ்தானின் ரஷித் ஆட்ட நாயகனாக தேர்வு குறித்தும் பாண்டியா தனது பாராட்டுகளை தெரிவித்தார். 


அப்போது பேசிய அவர், “ உங்கள் அணியில் ரஷித் கான் இருந்தால், உங்களுக்கு நிம்மதி பெருமூச்சு விடும் அளிவிற்கு அவரது செயல்பாடு இருக்கும். ரஷித் கான் பந்துவீச வந்து தேவையாக விக்கெட்களை வீழ்த்துவார். போட்டியின் முடிவில் ரன்கள் தேவைப்பட்டால் அதையும் அடித்து கொடுத்து நமது வேலையை எளிதாக்குவார்” என்றார். 


தோல்விக்கு பிறகு பேசிய எம்.எஸ். தோனி, “இன்னும் 15-20 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கொஞ்சம் பனி இருக்கும் என்று நாங்கள் அனைவரும் அறிவோம். 14 ஓவர்களுக்கு பிறகு நாங்கள் இன்னும் கொஞ்சம் ரன்களை சேர்த்திருக்கலாம்.” என்றார்.