PBKS vs GT Match Highlights: ராகுல் திவாதியா அசத்தல்; பஞ்சாப் அணியை வீழ்த்தியது குஜராத் டைட்டன்ஸ்!

பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி.

Continues below advertisement

ஐ.பி.எல் 2024:

ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 21) சண்டிகர் மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 37 லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் குஜராத் அணிகள் விளையாடி வருகின்றன. 

Continues below advertisement

டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் சாம் கரன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாம் கரன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் களம் இறங்கினார்கள். இருவரும் ஜோடி சேர்ந்து அருமையான தொடக்கத்தை அந்த அணிக்கு அமைத்து கொடுத்தனர். 52 ரன்கள் வரை இவர்கள் ஜோடி அமைத்தனர்.

இதனிடையே அதிரடியாக விளையாடி வந்த பிரப்சிம்ரன் சிங்  விக்கெட்டை பறிகொடித்தார். அந்தவகையில் மொத்தம் 21 பந்துகள் களத்தில் நின்ற அவர் 3 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் என மொத்தம் 35 ரன்கள் எடுத்தார். பின்னர் ரிலீ ரோசோவ் களம் இறங்கினார். 7 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து நூர் அகமது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

பின்னர் வந்த ஜித்தேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டன், ஷஷாங்க் சிங், அசுதோஷ் சர்மா சொற்ப ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். தொடக்கத்தில் வேகமாக ரன்களை சேர்த்த அந்த அணி ஒரு கட்டத்தில் ரன்களை சேர்க்க முடியாமல் திணறியது. அப்போது களத்திற்கு வந்த ஹர்பிரீத் சிங் பாட்டியா மற்றும் ஹர்ப்ரீத் ப்ரார் சிறப்பாக விளையாடினார்கள். இவ்வாறாக 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 142 ரன்களை எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

குஜராத் டைட்டன்ஸ் வெற்றி:

குஜராத் டைட்டன்ஸ் அணி 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது. அந்த வகையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினார்கள். இதில்  விருத்திமான் சாஹா 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.

பின்னர் சுப்மன் கில்லுடன் சாய் சுதர்சன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி குஜராத் அணிக்கு ரன்களை சேர்த்தனர். அப்போது லிவிங்ஸ்டோன் பந்தில் சுப்மன் கில் விக்கெட்டை பறிகொடுத்தார். மொத்தம் 29 பந்துகள் களத்தில் நின்ற அவர் 5 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 35 ரன்களை எடுத்தார். இதனிடையே சாய் சுதர்சனுடன் ஜோடி சேர்ந்தார் டேவிட் மில்லர்.

ராகுல் திவாதியா அசத்தல்:

அப்போது டேவிட் மில்லர் 4 ரன்கள் மட்டுமே எடுத்து லிவிங்ஸ்டோன் பந்தில் விக்கெட்டை இழந்தார். நிதானமாக விளையாடி வந்த சாய் சுதர்சன் 34 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து சாம் கரன் பந்தில் ஆட்டமிழந்தார்.  அடுத்த சில நிமிடங்களிலேயா அஸ்மத்துல்லா உமர்சாய் 13 ரன்களில் நடையைக்கட்ட அடுத்ததாக களம் இறங்கினார் ராகுல் திவாதியா.  அவருடன் ஜோடி சேர்ந்தார் ஷாரு கான். இருவரும் அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இவ்வாறாக 19.1 ஓவர்கள் முடிவில் 146 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தி குஜராத் அணி வெற்றி பெற்றது. கடைசி வரை களத்தில் நின்ற ராகுல் திவாதியா 18 பந்துகளில் 7 பவுண்டரிகள் உட்பட மொத்தம் 36 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola