ஐபிஎல் 2023 சீசனில் 64வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச கிரிக்கெட் அசோசியேஷன் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7. 30 மணிக்கு தொடங்குகிறது.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஷிகர் தவானும், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு டேவிட் வார்னரும் தலைமை தாங்குகின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இன்னும் தக்க வைத்துள்ளது. இந்த அணியில் பிரப்சிம்ரன் சிங் மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோ சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்து வருகின்றனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணியை பொறுத்தவரை பிளே ஆஃப்களுக்கான பந்தயத்தில் இருந்து வெளியேறினாலும், கடந்த சில போட்டிகளில் சிறந்த பார்மில் விளையாடி வருகின்றன. இன்றைய போட்டியில் டெல்லி அணி வெற்றிபெற்றால், பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு கலையும்.
போட்டி விவரங்கள்:
- பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேபிடல்ஸ், மேட்ச் 64
- இடம்: இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம், தர்மசாலா
- தேதி & நேரம்: புதன், மே 17, மாலை 7:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
பிட்ச் அறிக்கை:
தரம்சாலாவில் உள்ள பிட்ச் எப்போதும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக பிட்சாகவே பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் பனி முக்கிய பங்கு வகிக்க வாய்ப்புள்ளது. டாஸ் வென்ற கேப்டன் முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகள் விவரம்:
பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்):
பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ரிஷி தவான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்
டெல்லி தலைநகரங்கள் (டிசி):
டேவிட் வார்னர் (கேப்டன்), பிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், மணீஷ் பாண்டே, அக்சர் படேல், பிரவீன் துபே, குல்தீப் யாதவ், இஷாந்த் சர்மா, கலீல் அகமது, முகேஷ் குமார்
சிறந்த வீரர்களாக யார் இருப்பார்கள்?
டேவிட் வார்னர்:
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு டேவிர் வார்னர் 12 போட்டிகளில் விளையாடி 384 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 5 அரைசதங்களும் அடங்கும். பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியிலும் டேவிட் வார்னர் தனது பார்மை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அர்ஷ்தீப் சிங்:
இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் 12 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்கலை வீழ்த்தியுள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் இவர் யார்க்கர் பேசலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியின் கணிப்பு : சேஸிங் செய்யும் அணி வெற்றிபெறும்.