மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மும்பை அணிக்கு திரும்பினார். திரும்பிய கையோடு அங்கிருந்த கடவுளின் படத்திற்கு மாலையிட்டு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


கடந்த 2021ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து நட்சத்திர ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விடுவிக்கப்பட்டார். இதன்பிறகு, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா, 2022ல் குஜராத் அணி ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தார்.  தொடர்ந்து, அடுத்த வருடமே, கடந்த 2023ல் சிஎஸ்கே அணிக்கு எதிராக குஜராத் தோல்வியை சந்தித்து இரண்டாம் இடம் பிடித்தது. இதன் பிறகு, மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் 2024 க்கு முன் ஹர்திக்கை வர்த்தகம் செய்தது. ரோஹித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து ஹர்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்த இரண்டு வெற்றிகரமான ஐபிஎல் பயணத்திற்கு பிறகு, வரவிருக்கும் ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக களமிறங்க இருக்கிறார். 






மும்பை ரசிகர்கள் கோபம்: 


ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை. ரோஹித் சர்மா இந்திய அணிக்காக ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட்டபோதிலும், அவரை ஏன் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலக்கப்பட்டாட் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். இந்தநிலையில், சீசன் தொடங்க இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நேரமே இருக்கும் நிலையில், மும்பையில் இன்று முதல் சீசன் முகாமில் பயிற்சியை தொடங்கினார் ஹர்திக் பாண்டியா. இதற்கு முன்னதாக, கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் பயிற்சியாளரும் ஒருவரையொருவர் கட்டித்தழுவிக்கொண்ட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.






இனி வரும் காலங்களில் ஹர்திக் பாண்டியாவுக்கு ஒரு பெரிய பணி உள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியை ஐந்து ஐபிஎல் பட்டங்களை வென்ற ரோஹித் சர்மாவின் மாபெரும் இடத்தை நிரப்புவதுதான். இதன்மூலம், கேப்டன் ஹர்திக் பாண்டியா தனது உறுதியான முடிவுகளால் கோபமடைந்த ரசிகர்களை சமாதானப்படுத்த வேண்டும். அதற்கு மேல், பாண்டியாவும் தனது தனிப்பட்ட வளர்ச்சிக்கு உழைக்க வேண்டும். கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின்போது அவருக்கு ஏற்பட்ட கணுக்கால் காயம் காரணமாக அவர் விளையாடவில்லை. 


எனவே, ஒரு சிறந்த ஆல்-ரவுண்டராக மட்டுமல்லாமல், ரோஹித் சர்மாவுக்கு பிறகு ஒரு திறமையான தலைவராகவும் தன்னை ஹர்திக் பாண்டியா நிரூபிக்க வேண்டும். 


ஐபிஎல் 2024 சீசனில் மும்பை இந்தியன்ஸ் தனது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சந்திக்கிறது. இந்த போட்டியானது வருகின்ற மார்ச் 24ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.