MI vs DC IPL 2022 LIVE : மும்பை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி கேபிடல்ஸ் !
ஐ.பி.எல். 2022ம் ஆண்டிற்கான இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் நவிமும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் மோதுகின்றன
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை அணிக்கு எதிராக இமாலய இலக்கை நோக்கி ஆடி வரும் டெல்லி அணி 6வது விக்கெட்டையும் இழந்துள்ளது. டெல்லி அணி 13 ஓவர்களில் 104 ரன்கள் எடுத்த நிலையில் 6வது விக்கெட்டை இழந்துள்ளது.
10 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 77 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் மும்பை வீரர் பசில் தம்பி 2 விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார். ரோவ்மேன் பவலின் விக்கெட்டை தம்பி எடுத்துள்ளார்.
டெல்லி அணியின் வீரர் பிருத்வி ஷாவின் விக்கெட்டை மும்பை இந்தியன்ஸ் அணியின் பசில் தம்பி வீழ்த்தியுள்ளார். பிருத்வி ஷா 38 ரன்களுடன் ஆட்டமிழந்துள்ளார். டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 40 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்துள்ளது.
டெல்லி அணியின் வீரர் மன் தீப் சிங் முருகன் அஸ்வினின் சுழலில் ஆட்டமிழந்துள்ளார்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிம் சைஃபெர்ட்டின் விக்கெட்டை முருகன் அஸ்வின் வீழ்த்தியுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் 3 ஓவர்களின் முடிவில் டெல்லி அணி 30 ரன்கள் விளாசியுள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் டெல்லி அணி 12 ரன்கள் எடுத்துள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 177 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 82 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
டெல்லி அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 17 ஓவர்களின் முடிவில் 137 ரன்கள் எடுத்தது.
14 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணியின் வீரர் அன்மோல் ப்ரீத் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மும்பை அணி 11 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 41 ரன்களில் குல்தீப் யாதவ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் 6 ஓவர்களின் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 33 ரன்களுடனும், இஷான் கிஷன் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் 6 ஓவர்களின் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 33 ரன்களுடனும், இஷான் கிஷன் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு ஓவரில் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் அடித்துள்ளது. ரோஹித் 14 ரன்களுடனும், கிஷன் 18 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
டெல்லி அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக தொடங்கியுள்ளது. கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களுடனும், இஷான்கிஷன் 5 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
ஷர்துல் தாகூர் வீசிய முதல் ஓவரில் ரோஹித் ஒரு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து இன்னிங்சை தொடங்கி வைத்தார்.
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி சார்பில் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் களமிறங்கியுள்ளனர்.
மும்பைக்கு அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்துள்ளது.
Background
15வது ஐ.பி.எல். போட்டியில் நவி மும்பையில் ப்ராபோர்ன் மைதானத்தில் உள்ள ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும் இன்று மாலை 4 மணியளவில் நேருக்கு நேர் மோதுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -