கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ரோகித் சர்மா விளையாட போகிறார் என்கிற வதந்தி பரவிய நிலையில் சூரியன் நாளை உதிக்கும் ஆனால் இரவில் மற்றும் கடினம் என மும்பை இந்தியன்ஸ் அணி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
KKR-ல் ஹிட் மேன்?
மும்பை அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டனான ரோகித் சர்மா அந்த அணிக்காக 5 ஐபிஎல் கோப்பைகளை பெற்றுத்தந்துள்ளார். தற்போது அவர் மும்பை அணியில் ஒரு வீரராகவே தொடர்ந்து வருகிறார்
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KRR) அணியின் தலைமை பயிற்சியாளராக அபிஷேக் நாயர் நியமிக்கப்பட்டதிலிருந்து மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான ரோகித் சர்மா இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் பரவ தொடங்கின, கொல்கத்தா அணிக்கு ஒரு புதிய கேப்டன் தேவைப்படுகிறார், அதனால் ரோகித் கேப்டனாக வர வாய்ப்பு இருப்பதாக தகவல் பரவியது.
மும்பை இந்தியன்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ X ஹேண்டில் வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அந்த பதிவில் சூரியன் உதிப்பது உறுதி செய்யப்பட்டது, ஆனால்[(K)night} இரவில்... இது கடினம் மட்டுமல்ல, சாத்தியமற்றதும் கூட! என்று பதிவிட்டுள்ளது.
ஐபிஎல்லில் ரோகித்:
2008 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டதிலிருந்து ரோகித் விளையாடி வருகிறார். 2010 ஆம் ஆண்டு வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். அதன் பின் 2011 ஆம் ஆண்டில், அவர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஆரம்பித்தார் 2013-ல் கேப்டனாக பொறுப்பேற்று 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்தார். 272 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ரோஹித் 640 பவுண்டரிகள் மற்றும் 302 சிக்ஸர்கள் உட்பட 7,046 ரன்கள் எடுத்துள்ளார். அவரது தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் 109 ஆகும்.
ஐசிசி நம்பர் 1 பேட்ஸ்மேன்:
ஐசிசியின் சமீபத்திய தரவரிசையில் ரோஹித் சர்மா ஐசிசியின் ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தார்.
சமீபத்தில் நடந்த இந்தியா vs ஆஸ்திரேலியா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் ஒரு அரைசதம் மற்றும் ஒரு சதத்துடன் தொடர்நாயகன் விருதையும் வென்றார். ரோஹித் முதல் இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும், அதிக வயதில் ஐசிசி நம்பர் பேட்ஸ்மேன் என்கிற சாதனையையும் ரோகித் படைத்தார்