இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்எஸ் தோனி, வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2026) போட்டிக்காக பயிற்சி செய்யத் தொடங்கிய வீடியோ சமூல வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
JSCA வெளியிட்ட வீடியோ
ஜார்கண்ட் மாநில கிரிக்கெட் சங்கத்தின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் எம்.எஸ். தோனி பயிற்சி செய்யும் வீடியோ பகிரப்பட்டுள்ளது, மேலும் சவுரப் திவாரியும் அவருடன் உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரப் திவாரி தற்போது JSCA இன் செயலாளராக பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஐபிஎல்லில் தோனியுடன் விளையாடியுள்ளார்.
ஐபிஎல் 2026-க்கான பயிற்சியை தொடங்கிய எம்எஸ் தோனி
எம்எஸ் தோனி தனது தலைமையின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஐந்து சாம்பியன்ஷிப்புகளுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவர் இரண்டு முறை கேப்டன் பதவியை துறந்தார், ஆனால் பல்வேறு காரணங்களால் மீண்டும் அணிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. தற்போது, ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக உள்ளார், மேலும் இந்த முறை சிஎஸ்கெ அணி டிரெடிங் மூலம் சஞ்சு சாம்சனையும் அணியில் சேர்த்துள்ளது. சஞ்சு தோனி பிறகு அணியின் கீப்பராக செயல்படுவார் என சொல்லப்படுகிறது எனவே ஐபிஎல் 2026 இல் தோனி இம்பெக்ட் வீரராக விளையாடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2026
அன்ஷுல் காம்போஜ் , குர்ஜப்னீத் சிங் , ஜேமி ஓவர்டன், எம்.எஸ். தோனி , முகேஷ் சவுத்ரி , நாதன் எல்லிஸ் , நூர் அகமது , ராமகிருஷ்ணா கோஷ், சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் , சிவம் துபே, ஆயுஷ் மத்ரே,டெவால்ட் பிரவிஸ் , உர்வில் படேல், கலீல் அகமது,ஷ்ரேயாஸ் கோபால், அகீல் ஹொசைன் , பிரசாந்த் வீர் , கார்த்திக் சர்மா, மேத்யூ ஷார்ட் , அமன் கான், சர்பராஸ் கான், மேட் ஹென்றி, ராகுல் சாஹர் , சாக் ஃபோல்க்ஸ்
