ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட்  கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் வீசிய முதல் ஓவரில் பவர்ப்ளேயில் 22 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 


ஐ.பி.எல் சீசன் 17:



ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் டி20 சீசன் 17. இதில் இதுவரை நான்கு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. அந்தவகையில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. 


பவர்ப்ளேயில் கலக்கிய டிரெண்ட் போல்ட்:


முன்னதாக இன்று (மார்ச் 24) நடைபெற்ற 4 வது லீக் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதில். இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியின் பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் சாதனை ஒன்றை செய்துள்ளார்.


 


கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வருகிறார்.  இதில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் தான் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தியேலே விக்கெட் எடுத்து அசத்தி இருக்கிறார் போல்ட். அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு முதல் அவர் வீசிய முதல் ஓவரில் பவர்ப்ளேயில் மட்டும் 22 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். 






அதேபோல் இதுவரை 89 போட்டிகளில் விளையாடி உள்ள இவர் 107 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். முக்கியமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியில் 15 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும், 2022 ஆம் ஆண்டு 16 போட்டிகள் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்து எதிரணி வீரர்களை மிரட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. 






முகமது ஷமி இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் தான் வீசிய முதல் ஓவர்களில் மொத்தம் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். அதேபோல், புவனேஷ்வர் குமாரும் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.  முன்னதாக இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: RR Vs LSG Innings Highlights: சரவெடியாய் வெடித்த சஞ்சு சாம்சன் - லக்னோவிற்கு 194 ரன்கள் இலக்கு!


மேலும் படிக்க: IPL 2024: கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐ.பி.எல் பேட்டர்கள்... ஆதிக்கம் செலுத்திய கோலி! அடுத்த இடத்தில் யார்?