MI-W vs RCB-W LIVE: பெங்களூரு அணி 155  ரன்களுக்கு ஆல் அவுட்

MI-W vs RCB-W WPL 2023 LIVE Score: மும்பை - பெங்களூரு அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ஜான்சி ராணி Last Updated: 06 Mar 2023 09:49 PM
MI-W vs RCB-W LIVE: முதல் விக்கெட்டை இழந்த மும்பை இந்தியன்ஸ்!

மும்பை இந்தியன்ஸ் அணி முதல் விக்கெட்டை இழந்துள்ளது. யஷ்திக்கா பாட்டியா அவுட் ஆனார். 45 ரன்கள் எடுத்துள்ளது.

MI-W vs RCB-W LIVE: பெங்களூரு அணி 155  ரன்களுக்கு ஆல் அவுட்

பெங்களூரு அணி 155  ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ... மும்பை அணிக்கு 156 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

MI-W vs RCB-W LIVE: 7 விக்கெட்டை இழந்தது பெங்களூரு அணி - மீண்டும் ஓங்கிய மும்பை அணியின் கை..!

 பெங்களூரு அணி 112 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது. ரிச்சா கோஷ் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். 

MI-W vs RCB-W LIVE: 100 ரன்களை தாண்டியது பெங்களூரு அணி - திருப்பி கொடுக்கும் வீரர்கள்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 100 ரன்களை கடந்தது. 5 விக்கெட்டுகளை இழந்த அணி 12 ஓவர்களில் 100 ரன்களை கடந்துள்ளது. 

MI-W vs RCB-W LIVE: 5 விக்கெட்டை இழந்தது பெங்களூரு அணி - 100 ரன்களை தாண்டுமா?

பெங்களூரு அணி வீரர் எல்லீஸ் பெர்ரி 13 ரன்களில் ரன் அவுட்டானார். அந்த அணி 8.1 ஓவர்களில் 71 ரன்களை குவித்துள்ளது

MI-W vs RCB-W LIVE: தொடரும் மும்பை அணியின் விக்கெட் வேட்டை - பதறும் பெங்களூரு அணி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி வந்த பெங்களூரு  அணி விக்கெட்டுகளை இழந்து திணறல் - 43 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது

MI-W vs RCB-W LIVE: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது பெங்களூரு அணி 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி வந்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர் சோபி டெவின் 16  ரன்களிலும், தொடர்ந்து வந்த ரிஷா கசாத் ரன் ஏதும் எடுக்காமலும் மும்பை அணி வீராங்கனை சைகா இஷாக் பந்து வீச்சில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 5 ஓவர்களில்  2 விக்கெட் இழப்புக்கு 43 ரன்கள் எடுத்துள்ளது. 

MI-W vs RCB-W LIVE: டாஸ் வென்றது பெங்களூரு அணி - பேட்டிங் செய்வதாக அறிவிப்பு

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

MI-W vs RCB-W LIVE: முதல் வெற்றியை பெறும் முனைப்பில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மகளிர் அணி...!

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் முதல் வெற்றியை பெறும் முனைப்பில் பெங்களூரு அணி, மும்பை அணியை எதிர்கொள்கிறது. 

Background

மகளிர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதன் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. டி.வொய். பட்டீல் மைதானத்தில் இன்றிரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 


அணி விவரம்:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு :


ஸ்மிர்தி மந்தனா (கேப்டன்), திஷா கசாட், ஷோபனா ஆஷா, டேன் வான் நியீகெர்க், எல்சி, பெர்ரி, எரின் பர்ன்ஸ், ஹீதர் நைட், கனிகா அஹுஜூவா, பூனம் கேஹ்ம்னார், ஸ்ரெய்ங்கா படீல், சோபியா டிவைன், இந்திரானி ராய, ரிச்சா கோஷ், கோமல் சான்சாட், மேகன் ஸ்கூட், ப்ரீதி போஸ், ரேணுகா சிங், சஹானா பவார்.


மும்பை இந்தியன்ஸ்


தாரா குஜார், அமெலியா கெர், சோலே டைரான், ஹர்மன்ப்ரீதி கவுர் (கேப்டன்), ஹெலே மேத்யூஸ், ஹீதர் கிராஹாம், ஹுயுமேரியா காஸி, இஸி வாங்க், ஜிந்திமனி கலிட்டா, நாட் ஸ்வியர் பண்ட், நீலம் பிஷ்த், பூஜா வஸ்ட்கர், பிரியங்கா பாலா, யஷ்திகா பாட்டியா, சைகா இஷாக், சோனம் முகேஷ் யாதவ். 


மகளிர் ஐ.பி.எல். ரவுண்டப்: 


இதுவரை நடந்துள்ள போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் புள்ளிப்பட்டியலில்  முதலிடத்தில் உள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம், பெங்களூரு, குஜ்ராத் உள்ளிட்டவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. 


பந்தாடிய ஹர்மன்பிரீத்:


முதல் போட்டியில்  மும்பை இந்தியன்ஸ் அணியும் குஜராத் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.


கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார்.  30 பந்துகளில் 65 ரன்களை அடித்து குஜராத் அணியை பந்தாடினார்.பின்னர், ஸ்னே ரானா வீசிய பந்தில் அவுட் ஆகி பெவிலியனுக்கு திரும்பினார். அவருடன் பார்டனர்ஷிப் சேர்ந்த அமெலியா கெரும் தன்னுடை பங்கிற்கு பந்துகளை விரட்டி அடித்தார். இறுதிவரை, ஆட்டம் இழக்காத அவர் 24 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார்.


அசத்திய ஷெபாலி வர்மா, லேனிங் ஜோடி:


இரண்டாது போட்டியில் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.


டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் ஸ்மிர்தி மந்தனா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷெபாலி வர்மா மற்றும் கேப்டன் மேக் லேனிங் ஆகியோர் களம் இறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். 


14 ஃபோர்களை பறக்கவிட்ட லேனிங், 72 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதேபோல, மறுமுனையில் பட்டையை கிளப்பிய ஷெபாலி வர்மா, 4 சிக்சர்களும் 10 ஃபோர்களும் அடித்து பெங்களூரு அணியை திணறடித்தார். இருப்பினும், சதத்தை தவறவிட்ட ஷெபாலி 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார்.


தாரா நோரிஸ் மிரட்டல்:


4 ஓவர்கள் வீசி, 29 ரன்களை விட்டு கொடுத்த 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார் தாரா நோரிஸ். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணியால் 163 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், 60 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.


இதில் குஜராத் அணி - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில்,  மும்பை இந்தியன்ஸ் அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


ஷெபாலி வர்மா, லேனிங் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக ஆடியதால், 14 ஓவர்களில் 150 ரன்களை கடந்து டெல்லி அசத்தியது. பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர்கள் வீசிய பந்தை நாலா புறமும் சிதறடித்தனர். 14 ஃபோர்களை பறக்கவிட்ட லேனிங், 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.


அதேபோல, மறுமுனையில் பட்டையை கிளப்பிய ஷெபாலி வர்மா, 4 சிக்சர்களும் 10 ஃபோர்களும் அடித்து பெங்களூரு அணியை திணறடித்தார். இருப்பினும், சதத்தை தவறவிட்ட ஷெபாலி 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். முதல் பார்ட்னர்ஷிப்பிற்காக இருவரும் சேர்ந்து 162 ரன்களை எடுத்தனர். தொடரின் இரண்டாவது ஆட்டத்திலேயே, மிக பெரிய ரெக்கார்டை இருவரும் சேர்ந்து படைத்துள்ளனர். 20 ஓவர்கள் முடிவில், 2 விக்கெட் இழப்புக்கு டெல்லி 223 ரன்களை எடுத்தது. 


இந்தப் போட்டி ஸ்போர்ட்ஸ் 18, கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகின்றது. 




 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.