MI vs RR, IPL 2022 Live: மும்பை இந்தியன்ஸ் தோல்வி - ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

MI vs RR IPL 2022 Live: மும்பை-ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்...

ABP NADU Last Updated: 02 Apr 2022 07:32 PM
மும்பை இந்தியான்ஸ் தோல்வி - ராஜஸ்தான் அசத்தல் வெற்றி

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 8 விக்கெட்டை இழந்து 170 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி  அடைந்தது.

கடைசி கட்டத்தில் சொதப்பும் மும்பை

கடைசி கட்டத்தில் சொதப்பும் மும்பை. அடுத்தடுத்து விக்கெட்டை எடுத்தும் அசத்தும் ராஜஸ்தான்

அதிரடியாக ஆடி வந்த திலக் வர்மா போல்ட் ஆக்கிய அஸ்வின்

அதிரடியாக ஆடி வந்த திலக் வர்மா போல்ட் ஆக்கிய அஸ்வின். 39 பந்துகளில் 59 ரன்கள் அடித்தால் மும்பை வெற்றி

அரைசதம் அடித்த உடனேயே களத்தில் இருந்து வெளியேறிய இஷான்..!

50 ரன்கள் அடித்த இஷான் கிசன் அவுட், திலக் 49 ரன்களுடன் களத்தில் இருக்கிறார்.

மும்பை 100 ரன்கள் அடித்தது

10 ஓவர் முடிவில் மும்பை அணி 100 ரன்கள் அடித்தது. இஷான் கிசன் 44, திலக் வர்மா 40 ரன்களுடன் களத்தில் இருக்கின்றனர்.

மும்பை இந்தியன்ஸ் 50 ரன்கள் அடித்தது

மும்பை அணி 50 ரன்கள் அடித்தது. 6 ஓவர் முடிவில் 61 ரன்கள் அடித்துள்ளது. இஷான் கிசன், திலக் வர்மா களத்தில் உள்ளனர்

மும்பை இரண்டாவது விக்கெட்டை இழந்தது - சைனி அசத்தல் பந்துவீச்சு

மும்பை இரண்டாவது விக்கெட்டை இழந்தது- 3.5 ஓவரில் 40 ரன்கள் எடுத்தது. அன்மோல்ப்ரீத் சிங் விக்கெட்டை இழந்தார்.

முதல் விக்கெட்டை இழந்தது மும்பை - ரோகித் சர்மா அவுட்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி முதல் விக்கெட்டை இழந்தது. ரோகித் சர்மா ஆட்டமிழந்தார்.

மும்பை முதல் ஓவர் முடிவில் 4 ரன்கள்

மும்பை முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது.

மும்பை அணிக்கு 194 ரன்கள் இலக்கு...!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. இதனால், மும்பை அணிக்கு 194 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சதமடித்த உடனே அவுட்டாகிய ஜோஸ் பட்லர்..!

ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக ஆடிய ஜோஸ் பட்லர் சதமடித்த உடனே பும்ரா பந்தில் போல்டாகி வெளியேறினார். 

சதமடித்தார் ஜோஸ் பட்லர்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடக்க வீரராக களமிறங்கியது முதல் அதிரடியாக ஆடி வரும் ஜோஸ் பட்லர் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவர் 66 பந்தில் 11 பவுண்டரி 5 சிக்ஸருடன் சதத்தை பூர்த்தி செய்தார். ராஜஸ்தான் அணி 18.2 ஓவர்களில் 183 ரன்களை எடுத்துள்ளது.


 

ராஜஸ்தான் அணி 17 ஓவர்களில் 170 ரன்கள்...!

ராஜஸ்தான் அணியின் ஹெட்மயர் அதிரடியாக ஆடி வருவதால் அந்த அணி 17 ஓவர்களில் 170 ரன்களை எட்டியுள்ளது. 

அதிரடி காட்டும் ஹெட்மயர்..!

4 விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹெட்மயர் அதிரடியாக ஆடி வருகிறார், அவர் தற்போது வரை 5 பந்தில் 2 சிக்ஸருடன் 15 ரன்களை எடுத்துள்ளார்.

சதமடிப்பாரா ஜோஸ் பட்லர்..! ரசிகர்கள் எதிர்பார்ப்பு..!

ராஜஸ்தான் அணி 15 ஓவர்களின் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 96 ரன்களுடனும், ஹெட்மயர் 1 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

சஞ்சு சாம்சன் அவுட்டாக்கினார் பொல்லார்ட்...!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 21 பந்தில் 1 பவுண்டரி, 3 சிக்ஸருடன் 30 ரன்கள் எடுத்த நிலையில் பொல்லார்ட் பந்தில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இமாலய ஸ்கோரை குவிக்கும் நோக்கில் பட்லர்- சாம்சன் ஜோடி அதிரடி...!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக மிகப்பெரிய ஸ்கோரை குவிக்கும் நோக்கத்தில் ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்துள்ள கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி வருகிறார். அவர் இதுவரை 15 பந்தில் 1 பவுண்டரி 3 சிக்ஸருடன் 27 ரன்களை எடுத்துள்ளார்.

100 ரன்களை கடந்த ராஜஸ்தான் ராயல்ஸ்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஸ் பட்லரும், சஞ்சு சாம்சனும் அதிரடியாக ஆடுவதால் அந்த அணி 11 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்களை எடுத்துள்ளது.

ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் 87 ரன்கள்..! அதிரடி காட்டும் ஜோஸ் பட்லர் - சஞ்சு சாம்சன்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 10 ஓவர்களின் முடிவில் 87 ரன்களை எடுத்துள்ளது. ஜோஸ் பட்லர் 64 ரன்களுடனும், சஞ்சு சாம்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

அரைசதம் அடித்த ஜோஸ் பட்லர்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக தொடர்ந்து அதிரடியாக ஆடி வந்த ஜோஸ் பட்லர் 32 பந்தில் 51 ரன்களை எட்டி தனது அரைசதத்தை பூர்த்தி செய்துள்ளார். அவர் 5 பவுண்டரி, 4 சிக்ஸருடன் ஆடி வருகிறார்.

இரண்டாவது விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்..! ஜோடி சேர்ந்த பட்லர் - சஞ்சு சாம்சன்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தேவ்தத் படிக்கல் டைமல் மில்ஸ் பந்தில் 7 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். தற்போது, ஜோஸ் பட்லர் மற்றும் சஞ்சு சாம்சன் ஜோடி ஆடி வருகிறது.

பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் 48-2..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்ப்ளேவான 6 ஓவர்களின் முடிவில் 48 ரன்களை எடுத்துள்ளது. பட்லர் 27 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்ஸருடன் 40 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 7 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

பட்லர் காட்டிய அதிரடியால் 6 ஓவர்களுக்குள் 5 பவுலர்..!

ஜோஸ் பட்லர் காட்டிய அதிரடியால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதல் 6 ஓவர்களுக்குள்ளே ரோகித்சர்மா மும்பை இந்தியன்ஸ் அணியின் 5 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியுள்ளார்.

பாசில் தம்பி ஓவரை பொளந்து கட்டிய ஜோஸ் பட்லர்..! ராஜஸ்தான் 4 ஓவர்களில் 43 ரன்கள்..!

மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லரின் அதிரடியால் 4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 43 ரன்களை குவித்துள்ளது. ஜோஸ் பட்லர் 38 ரன்களுடனும், தேவ்தத் படிக்கல் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.  

முதல் விக்கெட்டை பறிகொடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் அனுபவ வீரர் பும்ராவின் பந்துவீச்சில் டிம் டேவிட்டிடம் கேட்ச் கொடுத்து 1 ரன்னில் வெளியேறினார்.

மும்பைக்கு எதிராக களமிறங்கியுள்ள ட்ரெண்ட் போல்ட்...!

மும்பை இந்தியன்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக களமிறங்கி ஆடி வந்த ட்ரெண்ட் போல்ட் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக களமிறங்கியுள்ளார்.

ஆட்டத்தை தொடங்கிய ஜோஸ் பட்லர் - ஜெய்ஸ்வால் ஜோடி..!

மும்பை அணிக்கு எதிராக பேட்டிங்கிற்கு களமிறங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அனுபவ வீரர் ஜோஸ் பட்லரும், இளம் வீரர் ஜெய்ஸ்வாலும் களமிறங்கியுள்ளனர்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் "மிஸ்ஸிங்"..!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக முதலில் பந்துவீசும் மும்பை இந்தியன்ஸ் அணியில் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ் இன்று களமிறங்கவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு

மும்பையில் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் பேட்டிங் செய்ய இருக்கிறது.

டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ்..! பேட்டிங்கைத் தொடங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ்..!

மும்பையில் இன்று நடைபெறும் முக்கியமான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி இன்று மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.