MI vs RR, IPL 2023: 1000வது போட்டியில் வரலாறு படைத்த மும்பை.. ராஜஸ்தானை வீழ்த்தி த்ரில் வெற்றி

ஐபிஎல் தொடரின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 30 Apr 2023 11:54 PM
மும்பை அணி த்ரில் வெற்றி

19.3 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி மும்பை அணி அபார வெற்றி பெற்றது

கடைசி ஓவர்...

மும்பை அணி வெற்றி பெற கடைசி ஓவரில் 17 ரன்கள் அவசியம்

14 ரன்கள் தேவை

மும்பை அணி வெற்றி பெற மீதமுள்ள 3 ஓவர்களிலும் தலா 14 ரன்கள் தேவை

மும்பை வெற்றி பெற 50 ரன்கள் தேவை

மும்பை அணி வெற்றி பெற 21 பந்துகளில் 50 ரன்கள் அவசியம்

சூர்யகுமார் யாதவ் அவுட்...

அதிரடியாக விளையாடி வந்த சூர்யகுமார் யாதவ், 55 ரன்கள் எடுத்தபோது போல்ட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

150 ரன்களை எட்டிய மும்பை..

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 150 ரன்களை எட்டியது

சூர்யகுமார் யாதவ் அரைசதம்

அதிரடியாக விளையாடி வரும் சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் அரைசதம் கடந்தார்

6 ஓவர்கள் மட்டுமே மிச்சம்

14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 141  ரன்களை எடுத்துள்ளது

சூர்யகுமார் யாதவ் அசத்தல்

போட்டியின் 13வது ஓவரில் மும்பை அணி 20 ரன்களை சேர்த்தது. அதில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே 19 ரன்களை குவித்தார்

109 ரன்கள் தேவை..

மும்பை அணி வெற்றி பெற 8 ஓவர்களில் 109 ரன்கள் தேவை

அதிரடி ஆட்டக்காரரை இழந்தது மும்பை..

அதிரடியாக விளையாடி வந்த கேமரூன் கிரீன், 44 ரன்கள் எடுத்து இருந்தபோது அஷ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

100 ரன்களை எட்டிய மும்பை

10.3 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது

மும்பையின் பாதியாட்டம் முடிந்தது..

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை சேர்த்துள்ளது.

நடையை கட்டினார் இஷான் கிஷான்..

நிதானமாக விளையாடி வந்த இஷான் கிஷன் 28 ரன்களில், அஷ்வின்பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

8 ஓவர்கள் முடிந்தது..

மும்பை அணி 8 ஓவர்கள் முடிவில் 75 ரன்களை சேர்த்துள்ளது

எகிறும் ரன் - ரேட்..

மும்பை அணியின் நிதான ஆட்டத்தால் தேவையான ரன் ரேட் 12 ரன்களை கடந்துள்ளது

முடிந்தது பவர்-பிளே

பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 58 ரன்களை சேர்த்துள்ளது.

அரைசதம் க்டந்த மும்பை

5.1 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 50 ரன்களை கடந்துள்ளது

மும்பை அணி நிதான ஆட்டம்...

5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களை சேர்த்துள்ளது.

3 ஓவர்கள் முடிந்தது..

3 ஓவர்கள் முடிவில் மும்பை 29 அணி ரன்களை சேர்த்துள்ளது.

ரோகித்தை இழந்த மும்பை

கேப்டன் ரோகித் சர்மா வெறும் 3 ரன்களில் ஆட்டமிழந்தார்

212 ரன்களை குவித்த ராஜஸ்தான்

20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை குவித்தது

மும்பையில் சிக்சர் மழை

19 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 196 ரன்களை குவித்துள்ளது. ஜெய்ஷ்வால் மட்டும் 8 சிக்சர்களை விளாசியுள்ளார்.

அபார சதம் அடித்து அசத்தினார் ஜெய்ஷ்வால்

53 பந்துகளில் 100 ரன்களை அடித்து அசத்தினார் ஜெய்ஷ்வால் 

முக்கிய விக்கெட்டை இழந்த ராஜஸ்தான்...

அதிரடி ஆட்டக்காரரான ஜுரெல் வெறும் 2 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்

100 ரன்களை நெருங்கும் ஜெய்ஷ்வால்..

அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஷ்வால் 50 பந்துகளில் 92 ரன்களை குவித்துள்ளார்.

ஹெட்மேயரை இழந்த ராஜஸ்தான்..

ஹெட்மேயர் விக்கெட்டை எடுத்த அர்ஷத் கான்

150 ரன்களை கடந்த ராஜஸ்தான்...

16 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 153 ரன்களை சேர்த்துள்ளது. 

30 பந்துகளே மிச்சம்..

15 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை சேர்த்துள்ளது.

கொடுத்த கோடிக்கு வேலையை செய்த ஆர்ச்சர்

ஆர்ச்சர் பந்துவீச்சில் ஜேசன் ஹோல்டர் ஆட்டமிழந்தார்

6 ஓவர்கள் மட்டுமே மிச்சம்..

14 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்களை சேர்த்துள்ளது.

”எல்லா பக்கமும் அடிப்பேன்”

மும்பை பந்துவீச்சை மைதானத்தின் நாலாபக்கமும் ஜெய்ஷவால் பவுண்டரிகளுக்கு விரட்டி வருகிறார்

சாவ்லா சுழலில் சிக்கி தவிக்கும் ராஜஸ்தான்..

தேவ்தத் படிக்கல் வெறும் 2 ரன்களை மட்டும் சேர்த்து சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

100 ரன்களை கடந்த ராஜஸ்தான்

ஜெய்ஷ்வாலின் அதிரடியால் 11வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 100 ரன்களை கடந்தது

தொடரும் ஜெய்ஷ்வால் வேட்டை

அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஷ்வால் 32 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

ராஜஸ்தானின் பாதியாட்டம் முடிந்தது..

10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 97 ரன்களை சேர்த்துள்ளது


 


 

கேப்டனை இழந்த ராஜஸ்தான்..

அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் சஞ்சு சாம்சன், 14 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முடிந்தது 9 ஓவர்கள்

9 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 88 ரன்களை சேர்த்துள்ளது.

மீண்டும் அசத்திய சாவ்லா..

நிதானமாக விளையாடி வந்த பட்லர், சாவ்லா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

தடுமாறும் மும்பை அணி

ஜெய்ஷ்வால் - பட்லரின் கூட்டணியை கட்டுப்படுத்த முடியாமல் மும்பை அணி திணறி வருகிறது

முடிந்தது பவர்பிளே

பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை சேர்த்துள்ளது.

அரைசதம் கடந்த ராஜஸ்தான்..

5 ஓவர்கள் முடிவில்  ராஜஸ்தான் அணி 58 ரன்களை சேர்த்துள்ளது

மும்பையை சோதிக்கும் ஆர்ச்சர்

மும்பை வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தான் வீசிய 2 ஓவர்களில் 21 ரன்களை வாரிக்கொடுத்துள்ளார்

ராஜஸ்தான் அதிரடி...

3 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 26 ரன்களை சேர்த்துள்ளது

கேப்டன் ரோகித் சாதனை...

ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரோகித் இன்று 150வது போட்டியில் களமிறங்கியுள்ளார்

ஆர்ச்சர் தொலைத்த பந்து..

ஆர்ச்சர் பந்துவீச்சில் ஜெய்ஷ்வால் அடித்த பந்து சிக்சருக்கு சென்று கிடைக்காததால் புதிய பந்து வீசப்பட்டது

முடிந்தது முதல் ஓவர்

முதல் ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 8 ரன்களை சேர்த்துள்ளது.

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது

Background

ஐபிஎல் தொடரின் 1000-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.


மும்பை - ராஜஸ்தான் மோதல்:


ஐபிஎல் 16 வது சீசனின் 42 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று இரவு 7 மணிக்கு மோத இருக்கின்றன. இத போட்டியானது மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கட்டாய வெற்றிக்காக போராடும்.


சொதப்பும் மும்பை:


இரண்டு தோல்விகளுடன் ஐபிஎல் தொடரை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் தற்போது இரண்டு தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. கடந்த போட்டியில் தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.


மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருந்தாலும், கடந்த போட்டியில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. நேஹால் வதேரா மற்றும் கடந்த போட்டியில் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சை பொறுத்தவரை பியூஸ் சாவ்லா அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது கடப்பாரை பேட்டிங் வியூகத்தை கையில் எடுத்தால், நிச்சயம் வெற்றிபெறும். 


மிரட்டும் ராஜஸ்தான்:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் இரண்டு தோல்விகளுக்கு பிறகு வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 202 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பரிசளித்தார். பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஆடம் ஜம்பா சிறப்பாக ஆடி வருகின்றனர். 


ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கட்டாய வெற்றிக்காக போராடும். 


MI vs RR: போட்டி விவரங்கள்:


போட்டி – மும்பை இந்தியன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஐபிஎல் 2023, போட்டி 42
தேதி - 30 ஏப்ரல் 2023
நேரம் - மாலை 7:30 மணி
இடம் -   வான்கடே ஸ்டேடியம், மும்பை


வானிலை அறிக்கை:


வெப்பநிலை 27 முதல் 31 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேகமூட்டத்துடன் இருக்கலாம் ஆனால் மழை பெய்ய வாய்ப்பில்லை. 


MI vs RR: பிட்ச் அறிக்கை:


வான்கடே எப்போதுமே ரன் குவிப்பால் பேட்டர்களுக்கு சொர்க்கமாக இருந்து வருகிறது. டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்யும் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.