ஐபிஎல் தொடரின் 1000வது போட்டியில் மும்பை இந்தியன் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.


மும்பை - ராஜஸ்தான் மோதல்:


ஐபிஎல் 16 வது சீசனின் 42 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களமாடும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இத போட்டியானது மும்பை அணியின் சொந்த மைதானமான வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது. ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கட்டாய வெற்றிக்காக போராடும். ஐபிஎல் வரலாற்றில் ஆயிரமாவது போட்டியான இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது


சொதப்பும் மும்பை:


இரண்டு தோல்விகளுடன் ஐபிஎல் தொடரை தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி, தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றது. மீண்டும் தற்போது இரண்டு தோல்விகளுடன் தடுமாறி வருகிறது. கடந்த போட்டியில் தற்போதைய சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 55 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.


மும்பை இந்தியன்ஸ் அணி வலுவான பேட்டிங் ஆர்டரை கொண்டு இருந்தாலும், கடந்த போட்டியில் யாரும் சிறப்பாக செயல்படவில்லை. நேஹால் வதேரா மற்றும் கடந்த போட்டியில் 21 பந்துகளில் 40 ரன்கள் எடுத்தார். பந்து வீச்சை பொறுத்தவரை பியூஸ் சாவ்லா அதிகபட்சமாக 2 விக்கெட்களை வீழ்த்தினார். மும்பை அணியின் பேட்ஸ்மேன்கள் தங்களது கடப்பாரை பேட்டிங் வியூகத்தை கையில் எடுத்தால், நிச்சயம் வெற்றிபெறும். 


மிரட்டும் ராஜஸ்தான்:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர் இரண்டு தோல்விகளுக்கு பிறகு வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 202 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் வெறும் 43 பந்துகளில் 77 ரன்கள் எடுத்து அணிக்கு வெற்றியை பரிசளித்தார். பந்து வீச்சாளர்கள் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் ஆடம் ஜம்பா சிறப்பாக ஆடி வருகின்றனர். 


ராஜஸ்தான் அணி இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மீண்டும் ஐபிஎல் அட்டவணையில் முதலிடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் மும்பை இந்தியன்ஸ் கட்டாய வெற்றிக்காக போராடும். 


நேருக்கு நேர்:


2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் இரு அணிகளும் விளையாடி வருகிறது. இரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளது. அதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் 14 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 6 போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 முறையும் வெற்றி கண்டுள்ளது.  மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 7 முறை மோதியுள்ளது. இதில், 4 முறை மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றியும், 3 முறை தோல்வியும் கண்டுள்ளது.