MI vs RCB, IPL 2023 LIVE: பெங்களூரு பந்து வீச்சை துவம்சம் செய்த மும்பை.. 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி..!

IPL 2023, Match 54, MI vs RCB: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 09 May 2023 11:18 PM
MI vs RCB Live: மும்பை வெற்றி..!

அதிரடியாக ஆடி வந்த மும்பை அணி 16.3 ஓவர்களில் 200 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 

MI vs RCB Live: 150 ரன்களைக் கடந்த மும்பை..!

அதிரடியாக ஆடி வரும் மும்பை அணி 14 ஓவர்கள் முடிவில் 150 ரன்களைக் கடந்துள்ளது. 

MI vs RCB Live: 99 ரன்கள்..!

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: ப்வர்ப்ளே முடிவில்..!

பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: ரோகித் சர்மா அவுட்..!

நிதானமாக ஆடி வந்த ரோகித் சர்மா 7 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார். 

MI vs RCB Live: இஷான் கிஷான் அவுட்..!

அதிரடியாக ஆடி வந்த இஷான் கிஷான் 21 பந்தில் 42 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs RCB Live: 50 ரன்களை எட்டிய மும்பை..!

4.3 ஓவர்களில் மும்பை அணி 51 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: சிக்ஸர் மழை பொழியும் இஷான் கிஷான்..!

200 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள மும்பை அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 34 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை..!

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியுள்ளது. 

MI vs RCB Live: 200 ரன்கள் இலக்கு..!

அதிரடியாக ஆடிய பெங்களூரு அணி மும்பை அணிக்கு 200 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. 

MI vs RCB Live: தினேஷ் கார்த்திக் அவுட்..!

அதிரடியாக ஆடி வந்த தினேஷ் கார்த்திக் 19வது ஓவரின் முதல் பந்தில் தனது விக்கெட்டை இழந்தார். 

MI vs RCB Live: 150 ரன்களைக் கடந்த ஆர்.சி.பி..!

15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: நிம்மதி பெரு மூச்சு விட்ட மும்பை..!

பெங்களூரு அணியின் டூ பிளசிஸ் தனது விக்கெட்டை கேமரூன் க்ரீன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார். 

MI vs RCB Live: லோம்ரோர் அவுட்..!

சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட லோம்ரோர் ஒரு ரன் மட்டும் சேர்த்த நிலையில் கார்த்திகேயா பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். 

MI vs RCB Live: 13 ஓவர்கள் முடிவில்..!

13 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 3 விக்கெட்டுகளை இழந்து 140 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: ருத்ரதாண்டவ ஆட்டம் முடிவுக்கு வந்தது..!

13வது ஓவரின் மூன்றாவது பந்தில் மேக்ஸ்வெல் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs RCB Live: டூ பிளசிஸ் அரைசதம்..!

அதிரடியாக ஆடி வரும் டூ பிளசிஸ் 30 பந்தில் தனது அரைசதத்தினை எட்டினார்.

MI vs RCB Live: 10 ஓவர்கள் முடிந்தது..!

அதிரடியாக பவுண்டரிகள் விளாசும்  பெங்களூரு அணி 10 ஓவர்கள் முடிவில் 2  விக்கெட்டை மட்டும் இழந்து 104 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: 100 ரன்களை எட்டிய பெங்களூரு..!

அதிரடியாக ஆடி வரும் பெங்களூரு 9.3 ஓவர்களில் 101 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: மேக்ஸ் வெல் அரைசதம்..!

25 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார் மேக்ஸ்வெல். 

MI vs RCB Live: 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்..!

டூ பிளசிஸ் மற்றும் மேக்ஸ் வெல் இருவரும் 25 பந்தில் தங்களது கூட்டணியில் 50 ரன்களைக் கடந்துள்ளனர். 

MI vs RCB Live: பவர்ப்ளேவில் 50 ரன்களைக் கடந்த பெங்களூரு..!

பவர்ப்ளே முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 56 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: 5 ஓவர்கள் முடிவில்..!

5 ஒவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் சேர்த்துள்ளார். 

MI vs RCB Live: பவர்ப்ளே பாதி முடிந்தது..!

மூன்று ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 2 விக்கெட்டுகளை இழந்து 20 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs RCB Live: மீண்டும் விக்கெட் வீழ்த்திய பெஹரண்டார்ப்..!

மூன்றாவது ஓவரின் இரண்டாவது பந்தில் பெங்களூரு அணியின் ராவத் தனது விக்கெட்டை பெஹரண்டார்ப் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs RCB Live: அடுத்தடுத்து பவுண்டரியை தட்டி விட்ட டூபிளஸி..!

இரண்டாவது ஓவரின் நான்காவது மற்றும் ஐந்தாவது பந்தில் டூபிளஸி பவுண்டரிகளை விரட்டி அதளப்படுத்தியுள்ளார். 

MI vs RCB Live: முதல் ஓவரில் வெளியேறிய விராட் கோலி..!

முதல் ஓவரின் 5வது பந்தில் விராட் கோலி ஒரு ரன் மட்டுமே சேர்த்த நிலையில் பெஹரண்டர்ப் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

MI vs RCB Live: தொடங்கியது போட்டி..!

மும்பை அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் விராட் கோலி மற்றும் டூ பிளசிஸ் களமிறங்கியுள்ளனர். 

MI vs RCB Live: டாஸ் வென்ற மும்பை..!

பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது.


ஐபிஎல் சீசன்:


ஐபிஎல் தொடரின் 16வது சீசன் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய நிலையில், விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. குஜராத் அணிக்கு பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில், மற்ற 3 அணிகள் யார் என்பது இன்னும் இழுபறியாகவே உள்ளது. அந்த இடங்களுக்காக மீதமுள்ள 9 அணிகளுமே கடுமையாக போராடி வருகின்றன. முன்பு எப்போது இல்லாத அளவிற்கு அணிகளின் ரன்-ரேட்டும் நடப்பு டொடரில் பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மும்பை - பெங்களூரு மோதல்:


இந்த சூழலில் தான் இன்று நடைபெறும் லீக் போட்டியில் டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில், மாலை 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது. அதற்கு பழிவாங்கும் நோக்கில் மும்பை இந்தியன்ஸ் அணி இன்று களமிறங்குகிறது. அதேநேரம், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்பதால், இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போட்டியின் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு மகிழலாம்.


பெங்களூரு அணி நிலவரம்:


நடப்பு தொடரில் பெங்களூரு அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி, 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கோலி, டூப்ளெசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் தூண்களாக உள்ளனர். அவர்களை தவிர அந்த அணியை சேர்ந்த வேறு எந்தவொரு பேட்ஸ்மேனும் நடப்பு தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை. அதேநேரம், பந்துவீச்சிலும் முகமது சிராஜை தவிர மற்ற வீரர்கள் மோசமான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர். இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் ஹர்ஷல் படேல் கூட ரன்களை வாரி வழங்கி வருகிறார். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் டெல்லி அணிக்கு எதிராக தோல்வியுற்றதால், இந்த போட்டியின் மூலம் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப பெங்களூரு முனைப்பு காட்டி வருகிறது.


மும்பை அணி நிலவரம்:


மும்பை அணியும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6ல் வெற்றி பெற்று இருந்தாலும், ரன் ரேட் அடிப்படையில் புள்ளிப்பட்டியலில் 8வது இடத்தில் உள்ளது. பேட்டிங்கை பொறுத்தவரை எல்லா போட்டியிலும் யாரேனும் ஒருவர் அதிரடியாக விளையாடி கொடுத்து விடுகின்றனர். ஆனால், பந்துவீச்சு தான் அந்த அணியின் பெரும் பிரச்னையாக உள்ளது. ஆர்ச்சர் போன்றோர் ரன்களை வாரிக்கொடுத்து வருகின்றனர். பியுஷ் சாவ்லா மட்டுமே ரோகித்தின் நம்பிக்கை அஸ்திரமாக உள்ளார். இன்றைய போட்டியில் வெல்ல மும்பை அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்படுவது மிகவும் முக்கியம். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வியுற்றதை அடுத்து, இன்றைய போட்டியில் வெல்ல மும்பை அணியும் தீவிரம் காட்டி வருகிறது.


கணிப்பு:


சிறந்த பேட்ஸ்-மேன்: டூப்ளெசிஸ்


சிறந்த பந்துவீச்சாளர்: ஹசரங்கா


மும்பை இந்தியன்ஸ் அணி:


ரோஹித் சர்மா (கேட்ச்), இஷான் கிஷன் (வி.கே.), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், நெஹால் வதேரா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், அர்ஷத் கான், ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி:


விராட் கோலி, டூப்ளெசிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், வனிந்து ஹசரங்க, கர்ண் ஷர்மா, முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்


 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.