IPL 2022, MI vs RCB Score Live :பெங்களூர் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி...! மும்பை அணிக்கு 4வது தோல்வி..!

IPL 2022, MI vs RCB Score Live : பெங்களூர் - மும்பை அணிகள் இடையேயான போட்டியின் ஸ்கோர் நிலரவங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 09 Apr 2022 11:21 PM
பெங்களூர் அணிக்கு ஹாட்ரிக் வெற்றி...! மும்பை அணிக்கு 4வது தோல்வி..!

மும்பை நிர்ணயித்த 152 ரன்கள் இலக்கை பெங்களூர் அணி 18.3 ஓவர்களில் எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

அதிரடி காட்டிய அனுஜ் ராவத் ரன் அவுட்...!

பெங்களூர் வீரர் ராவத் 47 பந்தில் 2 பவுண்டரி 6 சிக்ஸருடன் 66 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டாகி வெளியேறினார். 

கடைசி 5 ஓவர்களில் 41 ரன்கள் தேவை..! களத்தில் கோலி - ராவத்..!

பெங்களூர் அணியின் வெற்றிக்கு கடைசி 5 ஓவர்களில் 41 ரன்கள் தேவைப்படுகிறது. களத்தில் விராட்கோலி 38 ரன்களுடனும், ராவத் 52 ரன்களுடனும் உள்ளனர். 

கோலியின் கேட்ச்சை கோட்டை விட்ட மும்பை...!

பெங்களூர் அணியின் முன்னாள் கேப்டனும், டேஞ்சர் பேட்ஸ்மேனுமாகிய விராட்கோலி அளித்த எளிதான கேட்ச்சை மும்பை வீரர்  கோட்டை விட்டுள்ளார்.

அதிரடி காட்டும் ராவத் - கோலி..! 12 ஓவர்களில் 82 ரன்கள்..!

பெங்களூர் அணியின் விராட்கோலியும், ராவத்தும் அதிரடியாக ஆடி வருவதால் பெங்களூர் 12 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்களை எடுத்துள்ளது. 

பெங்களூர் 10 ஓவர்களில் 62 ரன்கள்..!

பெங்களூர் அணி 10 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் எடுத்துள்ளது. கோலியும், ராவத்தும் களத்தில் உள்ளனர்.

பெங்களூர் கேப்டன் டுப்ளிசிஸ் அவுட்...!

பெங்களூர் அணியின் கேப்டன் டுப்ளிசிஸ் 24 பந்தில் 16 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

மும்பை கட்டுக்கோப்பான பந்துவீச்சு..! பவர்ப்ளேவில் பெங்களூர் 30 ரன்கள்..!

பெங்களூர் அணி பவர்ப்ளேவான 6 ஓவர்கள் முடிவில் 30 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

பெங்களூர் நிதான தொடக்கம்...! 3 ஓவர்களில் 21 ரன்கள்..!

152 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் பெங்களூர் அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்களை எடுத்துள்ளது. 

சூர்யகுமார் அபார ஆட்டம்...! பெங்களூர் அணிக்கு 152 ரன்கள் இலக்கு..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ்வின் அதிரடியால் மும்பை 20 ஓவர்களில் 151 ரன்கள் எடுத்தது. இதனால், பெங்களூர் அணிக்கு 152 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மும்பை இந்தியன்ஸ் சூர்யகுமார் யாதவ் அதிரடி அரைசதம்..!

மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் தனி ஆளாக போராடி வரும் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார்.

மும்பையை காப்பாற்றுவாரா சூர்யகுமார் யாதவ்..?

மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் களத்தில் இருப்பதால் அவர் மும்பை அணிக்காக நல்ல ஸ்கோரை அடித்து தருவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 

டேஞ்சர் மேன் பொல்லார்ட் அவுட்..! 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்..!

மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கீரன் பொல்லார்ட் ஹசரங்கா பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார். இதனால், மும்பை அணி 62 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

ஒரே ஓவரில் இஷான்கிஷான், திலக் வர்மா அவுட்..! அதிர்ச்சியில் மும்பை ரசிகர்கள்..!

மும்பை அணியின் அதிரடி வீரரான இஷான்கிஷான் ஆகாஷ்தீப் வீசிய பந்தில் முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து 26 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் 28 பந்துகளில் 3 பவுண்டரி அடித்திருந்தார். இந்த நிலையில் அதே ஓவரில் மும்பை அணியின் இளம் வீரர் திலக் வர்மா மேக்ஸ்வெல்லால் ரன் அவுட் செய்யப்பட்டார். இதனால், மும்பை அணி தடுமாறி வருகிறது.

2வது விக்கெட்டை இழந்தது மும்பை...!

மும்பை அணியின் டேவல்ட் ப்ரெவிஸ்  8 ரன்கள் எடுத்த நிலையில ஹசரங்கா பந்தில் 8 ரன்களே எடுத்த நிலையில் எல்.பி.டபுள்யூ ஆகி வெளியேறினார். இதனால், மும்பை அணி 8.3 ஓவர்களில் 60 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

மும்பை கேப்டன் ரோகித்சர்மா அவுட்..!

மும்பை அணியின் கேப்டனும், டேஞ்சர் பேட்ஸ்மேனுமாகிய ரோகித்சர்மா ஹர்ஷல் படேல் பந்தில் 15 பந்துகளில் 4 பவுண்டரி 1 சிக்ஸருடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் அவரிடமே கேட்ச் கொடுத்த ஆட்டமிழந்தார். 

மும்பை அணி 5 ஓவர்களில் 42 ரன்கள்...!

பெங்களூர் அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் மும்பை அணி 5 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 20 ரன்களுடனும், இஷான் கிஷான் 21 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Background

மும்பையில் உள்ள புனே மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இன்று நேருக்கு நேர் மோத உள்ளன. புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், புள்ளிப்பட்டியலில் உள்ள 9வது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடரில் இதுவரை வெற்றியே பெறாத மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் வெற்றிக்காகவும், தொடர்ந்து சிறப்பாக ஆடி வரும் பெங்களூர் அணி தங்களது அடுத்த வெற்றிக்காகவும் களமிறங்குகின்றனர்.  


இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் டுப்ளிசிஸ் முதலில் பந்துவீசுவதாக கூறினார். இதன்படி, மும்பை அணி முதலில் பேட் செய்ய உள்ளது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.