MI Vs LSG,IPL 2022 LIVE: 8 போட்டிகளில் 8 தோல்வி.. தொடரும் மும்பையின் வேதனை..லக்னோ அசத்தல் வெற்றி !
MI Vs LSG,IPL 2022 LIVE: மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்.. !
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
18 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
14 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
12 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் சூர்யகுமார் யாதவ் 7 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் டிவால்ட் பிரேவிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற மும்பை அணிக்கு 72 பந்துகளில் 115 ரன்கள் தேவைப்படுகிறது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை வீரர் இஷான் கிஷன் 20 பந்துகளில் 8 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 6 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 5 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 31 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 2 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 12 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் மும்பை அணி 11 ரன்கள் குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக சதம் அடித்த வீரர்கள்:
6- கெயில் (141 இன்னிங்ஸ்)
5-விராட் கோலி (207 இன்னிங்ஸ்)
4- பட்லர் (71 இன்னிங்ஸ்)
4- கே.எல்.ராகுல் (93 இன்னிங்ஸ்)
4-ஷேன் வாட்சன் (141 இன்னிங்ஸ்)
4-டேவிட் வார்னர் (155இன்னிங்ஸ்)
சிறப்பாக ஆடிய கேப்டன் கே.எல்.ராகுல் 61 பந்துகளில் 102 ரன்கள் அடித்து அசத்தினார். இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கு எதிராக 2ஆவது முறையாக சதம் கடந்து அசத்தினார்.
மும்பை அணிக்கு எதிராக முதலில் பேட் செய்து வரும் லக்னோ அணி 5வது விக்கெட்டை இழந்துள்ளது. தீபக்ஹூடா 10 ரன்களில் அவுட்டானார்.
14 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட் இழப்பிற்கு 108 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் க்ரூணல் பாண்ட்யா ஒரு ரன்னில் ஆட்டமிழந்துள்ளார்.
லக்னோ அணியின் வீரர் மார்கஸ் ஸ்டையோனிஸ் விக்கெட்டை மும்பை வீரர் டேனியல் சாம்ஸ் எடுத்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் 50 ரன்கள் அடித்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 8 ஓவர்களின் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி 7 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 1 விக்கெட் இழப்பிற்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிகாக் 10 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்துள்ளது.
முதல் ஓவரின் முடிவில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றம் இல்லை. சென்னை அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அதே வீரர்களே இந்தப் போட்டியிலும் களமிறங்குகின்றனர்.
வான்கடே மைதானத்தில் விளையாடியுள்ள ஐபிஎல் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணி 63% போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் அவேஷ் கான் இடம்பெறவில்லை.
சுமார் 1000 நாட்களுக்கு பிறகு மும்பை இந்தியன்ஸ் அணி வான்கடே மைதானத்தில் தன்னுடைய முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடுகிறது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்று மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
Background
ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யும் அளவிற்கு போட்டிகள் நெருங்கிவிட்டன. இதனால், ஒவ்வொரு அணியும் தங்களது அடுத்தடுத்த போட்டிகளில் வென்று ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்ய காத்திருக்கின்றன.
இந்த நிலையில், மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. 5 முறை ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு இந்த தொடர் மறக்கப்பட வேண்டிய தொடராக அமைந்துள்ளது. 7 போட்டிகளில் ஆடி 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
அதேசமயம் புதிய அணியாக ஐ.பி.எல். தொடரில் அடியெடுத்து வைத்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சிறப்பாக ஆடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ள லக்னோ முயற்சிக்கும். லக்னோ அணியை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அசத்தலான பார்மில் உள்ளார். குயின்டின் டி காக், மணீஷ் பாண்டே அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் அவர்களது ஸ்கோர் எகிறும். தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி மிடில் வரிசையில் அசத்த காத்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -