MI vs GT, IPL 2023 Qualifier 2 LIVE: மும்பையை தட்டித் தூக்கி இறுதிப் போட்டிக்கு முன்னேறிய குஜராத் டைட்டன்ஸ்..!

IPL 2023, GT vs MI: 16வது சீசன் ஐபிஎல் தொடரின் குவாலிஃபையர் 2 போட்டியில் மோதும் மும்பை குஜராத் அணிகளுக்கு இடையிலாக போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்.

Continues below advertisement

LIVE

Background

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை அணியுடன் மோதப்போகும் அணி யார் என்பதை தீர்மானிக்கும் 2வது தகுதிச்சுற்று போட்டி இன்று நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகிறது. 

பரபரப்பான ஐபிஎல் தொடர் நாளை மறுநாளுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் திருவிழா கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடந்த ஒன்றரை மாதங்களாக கொண்டாட்டமாக இருந்தது. 10 அணிகள் பங்கேற்ற ஐபிஎல் தொடரில் குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குள் சென்றது. 

இதில் மே 23 ஆம் தேதி நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் குஜராத் அணியை சென்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றது. இதனைத் தொடர்ந்து மே 24 ஆம் தேதி நடந்த எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை மும்பை அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2வது தகுதிச்சுற்று போட்டிக்கு தகுதிப் பெற்றது.  இந்த போட்டியில் மும்பை அணி, முதல் தகுதிச்சுற்று  போட்டியில் தோற்ற குஜராத் அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத் மைதானத்தில் நடைபெறுகிறது. 

இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர்: 

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி கடந்தாண்டு அறிமுகமாகி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதேசமயம் 5 முறை சாம்பியனான மும்பை கடந்த இரு சீசன்களாகவே தட்டுதடுமாறி வருகிறது. இப்படியான நிலையில் இரு அணிகளும் 2 சீசன்களையும் சேர்த்து 3 ஆட்டங்களில் மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் 2 ஆட்டங்களில் மும்பை அணி வெற்றி பெற்றுள்ளது. நடப்பு சீசனிலும் 2 லீக் ஆட்டங்களில் குஜராத், மும்பை அணிகள் மோதி தலா ஒரு வெற்றியைப் பெற்றது. 

சம பலத்தில் வீரர்கள் 

குஜராத் அணியை பொறுத்தவரை லீக் போட்டியில் கெத்தாக முதலிடம் பிடித்து முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்தது. ஆனால் முதல் தகுதிச்சுற்று போட்டியில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் அந்த அணி தோல்வியை தழுவியது. குறிப்பாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் குஜராத் அணி வலுவாக உள்ளது. தொடக்க வீரர் சுப்மன் கில் ரன் குவிக்கும் மிஷினாகவே மாறி விட்டார். பந்துவீச்சில் முகம்மது ஷமி, மோகித் ஷர்மா, ரஷித்கான் என மிரட்ட காத்திருக்கின்றனர். உள்ளூர் மைதானம் என்பதால் குஜராத் அணிக்கு இப்போட்டி சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அதேசமயம் லீக் ஆட்டங்களில் சரியான நேரத்தில் எழுச்சி பெற்ற மும்பை அணி கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியது. இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றால் 16 சீசன்களில் 7வது முறையாக இறுதிப் போட்டிக்கு செல்லும். நடப்பு சாம்பியானா? முன்னாள் சாம்பியானா? எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் என்ற கேள்வி ரசிகர்களிடத்தில் எழுந்துள்ளது. இந்த போட்டி ஸ்டார்ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா செயலியில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

Continues below advertisement
00:18 AM (IST)  •  27 May 2023

MI vs GT Live Score: இரண்டாவது முறையாக இறுதிப் போட்டி..!

குஜராத் டைட்டன்ஸ் அணி தான் அறிமுகமான முதல் இரண்டு ஆண்டுகளும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

00:16 AM (IST)  •  27 May 2023

MI vs GT Live Score: குஜராத் வெற்றி..!

 மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளைடும் இழந்து 171 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

23:45 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: இறுதி நம்பிக்கை காலி..!

டிம் டேவிட் 2 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

23:40 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 15 ஓவர்கள் முடிவில்..!

6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் மும்பை அணி 15 ஓவர்களில் 156 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளது. 

23:39 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: விஷ்ணு வினோத் அவுட்..!

இஷன் கிஷனுக்கு பதிலாக களமிறங்கிய விஷ்ணு வினோத் 7 பந்தில் 5 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

23:37 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: சூர்யகுமார் யாதவ் அவுட்..!

அதிரடியாகவும் பொறுப்பாகவும் ஆடிவந்த சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

23:36 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 150 ரன்களைக் கடந்த மும்பை..!

14.2 ஓவர்களில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்கள் சேர்த்துள்ளது. 

23:32 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: சூர்யகுமார் யாதவ் அரைசதம்..!

சிறப்பாக ஆடிவரும் சூர்யகுமார் யாதவ் 33 பந்தில் தனது அரைசதத்தினை எட்டியுள்ளார். 

23:16 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: கேமரூன் க்ரீன் அவுட்.!

தத்தளித்து வரும் மும்பை அணியை மீட்பார் என நம்பப்பட்ட கேமரூன் க்ரீன் ஜோஸ்வா லிட்டில் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

23:06 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: பாதி ஆட்டம் முடிந்தது..!

234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள மும்பை அணி 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 110 ரன்கள் சேர்த்துள்ளது. 

23:04 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 100 ரன்களைக் கடந்த மும்பை இந்தியன்ஸ்..!

9.2 ஓவரில் மும்பை அணி 101 ரன்கள் சேர்த்துள்ளது. 

23:02 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 9 ஓவர்கள் முடிவில்..!

9 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 95 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:53 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: களத்துக்கு வந்த க்ரீன்..!

காயம் காரணமாக வெளியேறிய கேமரூன் க்ரீன் திலக் வர்மா ஆட்டமிழந்த பின் பேட்டிங் செய்ய வந்துள்ளார். 

22:49 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: திலக் வர்மா அவுட்..!

அதிரடியாக ஆடி வந்த திலக் வர்மா பவர்ப்ளேவின் இறுதிப் பந்தில் ரஷித் கானின் பந்து வீச்சில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். 

22:45 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: ஒரே ஓவரில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸர்..!

போட்டியின் 5வது ஓவரை முகமது ஷமி வீச அந்த ஓவரில் திலக் வர்மா 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி அசத்தினார். 

22:42 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 50 ரன்களைக் கடந்த மும்பை..!

4.3 ஓவர்களில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 53 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:38 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 1,100 சிக்ஸர்கள்..!

போட்டியின் 4வது ஓவரில் திலக் வர்மா அடித்த சிக்ஸர் இந்த சீசனின் 1,100வது சிக்ஸராக பதிவாகியுள்ளது. 

22:35 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: மூன்று ஓவர்கள் முடிந்தது..!

மூன்று ஓவர்கள் முடிவில் மும்பை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் சேர்த்துள்ளது. 

22:30 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: ரோகித் சர்மா அவுட்..!

போட்டியின் மூன்றாவது ஓவரில் ரோகித் சர்மா 7 பந்தில் 8 ரன்கள் மட்டும் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

22:28 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: வெளியேறிய கிரீன்..!

போட்டியின் இரண்டாவது ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியா வீசிய பந்து கேமரூன் கிரீன் இடது கையில் பலமாக பட, அவர் தற்போது ஆடுகளத்தில் இருந்து வெளியேறினார். தற்போது சூர்யகுமார் யாதவ் களமிறங்கியுள்ளார். 

22:26 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: இலக்கைத் துரத்தும் மும்பை..!

234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி மும்பை அணி ஆடி வருகிறது. 

21:40 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 200 ரன்களைத் தொட்ட குஜராத்..!

17.4 ஓவர்களில் குஜராத் அணி 2 விக்கெட்டை மட்டும் இழந்து 200 ரன்கள் சேர்த்துள்ளது. 

21:37 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: கில் அவுட் - மூச்சு விட்ட மும்பை..!

அதிரடியாக ஆடிவந்த கில் மாத்வால் பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். கில் 60 பந்தில் 129 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 

21:17 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: மூன்றாவது சதம் விளாசிய கில்..!

அதிரடியாக ஆடிவரும் கில் 49 பந்தில் தனது சதத்தினை எட்டியுள்ளார். இந்த சீசனில் இவரது மூன்றாவது சதம் ஆகும். 

21:12 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 150ஐ நெருங்கும் குஜராத்..!

14 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 147 ரன்கள் சேர்த்துள்ளது.

21:06 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: சதத்தை நெருங்கும் கில்..!

13 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி ஒரு விக்கெட்டை இழந்து 139 ரன்கள் சேர்த்துள்ளது. அதில் கில் மட்டும் 98 ரன்கள் சேர்த்துள்ளார்.

21:00 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: மிரட்டலாக பறக்கவிடப்பட்ட மூன்று சிக்ஸர்..!

12வது ஓவரில் சுப்மன் கில் மூன்று சிக்ஸர்கள் பறக்கவிட்டு மிரட்டியுள்ளார். 

20:57 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 100 ரன்களைக் கடந்த குஜராத்..!

அதிரடியாக ஆடிவரும் குஜராத் அணி 11.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 100 ரன்களைக் கடந்துள்ளது. 

20:51 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: வழுவான நிலையில் குஜராத்..!

அதிரடியாக ஆடி வரும் குஜராத் அணி 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:48 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: கில் அரைசதம்..!

அதிரடியாக ஆடிவரும் கில் 32 பந்தில் அரைசதம் விளாசினார். 

20:44 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 80 ரன்களைத் தொட்ட குஜராத்..!

குஜராத் அணி 9 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 80 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:42 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: கியரை மாற்றிய கில்..!

பியூஷ் சாவ்லா வீசிய 9வது ஓவரில் கில் ஒரு சிக்ஸர் விளாசி அதகளப்படுத்தியுள்ளார். 

20:37 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: நிதான ஆட்டம்..!

7வது ஓவரில் விக்கெட்டை இழந்தாலும் 9 ரன்கள் சேர்த்துள்ளது குஜராத் அணி. 

20:33 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: முதல் விக்கெட்..!

7வது ஓவரை வீசிய பியூஷ் சாவ்லா பந்து வீச்சில் விரத்திமான் சாஹா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

20:29 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 50 ரன்களைத் தொட்ட குஜராத்..!

சிறப்பாக ஆடி வரும் குஜராத் அணி பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 50 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:21 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: 4 ஓவர்கள் முடிவில்..!

4 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 27 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:15 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live Score: பாதி முடிந்த பவர்ப்ளே..!

3 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் சேர்த்துள்ளது. 

20:06 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live: நிதான தொடக்கம்..!

நிதானமான தொடக்கத்தினால் குஜராத் அணி முதல் ஓவரில் மூன்று ரன்கள் சேர்த்துள்ளது. 

20:05 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live: டாஸ் வென்ற மும்பை அணி..!

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

19:24 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live: டாஸ்..!

மழை காரணமாக டாஸ் 7.45 மணிக்கு போடப்படும் எனவும், 8 மணிக்கு போட்டி நடைபெறும் எனவும் ஐபிஎல் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

19:08 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live: போட்டி நடக்கவில்லை என்றால் என்ன ஆகும்..!

மழை தொடர்ந்து பெய்து வந்து போட்டி நடக்கவில்லை என்றால் புள்ளிப்பட்டியலில் மும்பை அணியை விட முன்னிலை வகித்த குஜராத் அணி இறுதிப் போட்டிக்கு தயாராகும். 

18:54 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live: மழை..!

போட்டி நடைபெறவுள்ள அகமாதாபாதில் கனமழை பெய்து வருகிறது. 

18:37 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live: குஜராத் அணிக்கு சாதகமான சூழல்..!

இன்று களமிறங்கும் அணிகளில் குஜராத் மற்றும் மும்பை அணிகளில், குஜராத் அணிக்கு சொந்த மைதானம் என்பாதல், குஜராத் அணிக்கு சாதகமான சூழல் அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

18:35 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live: இன்றைய நாளில் முதல் கோப்பை..!

2013ஆம் ஆண்டு இதே நாளில் தான் அதாவது மே மாதம் 26ஆம் தேதி மும்பை அணி தனது முதல் ஐபிஎல் கோப்பையை ரோகித் சர்மா தலைமையில் வென்றது. 

18:30 PM (IST)  •  26 May 2023

MI vs GT Live: வென்றால்..!

இன்றைய போட்டியில் வெல்லும் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியை எதிர்கொள்ளும்.