MI vs GT, IPL 2022 Live: கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்ற மும்பை-குஜராத் பரிதாப தோல்வி !
MI vs GT, IPL 2022 Live: மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்..
குஜராத் டைட்டன்ஸ் அணியை கடைசி ஓவரில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அசத்தியுள்ளது.
16 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 138 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் அணியின் வீரர் சுப்மன் கில் 36 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்துள்ளார்.
மும்பைக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் சுப்மன் கில் அரைசதம் கடந்து அசத்தியுளார்.
9 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் எடுத்துள்ளது.
5 ஓவர்களின் முடிவில் குஜராத் அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி 3 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 29 ரன்கள் எடுத்துள்ளது.
20 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
19 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மா 21 ரன்களுக்கு ரன் அவுட்டாகினார்.
17 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்துள்ளது.
15 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் பொல்லார்டு விக்கெட்டை ரஷீத் கான் எடுத்துள்ளார்.
13 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்துள்ளது.
13 ரன்கள் எடுத்திருந்தபோது தூக்கி அடித்த சூர்யகுமார் யாதவ், கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.
43 ரன்கள் எடுத்து ரோஹித் அவுட்டாகியதை அடுத்து, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் விளையாடி வருகின்றனர். 10 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 97/1
6 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் எடுத்துள்ளது.
4 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 40 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணி 2 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தமிழ்நாட்டு வீரர் முருகன் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா நடப்புத் தொடரில் குஜராத் டைடன்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார்.
ஐபிஎல் புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 வெற்றி பெற்று தற்போது முதலிடத்தில் உள்ளது.
9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. ஆகவே இனி வரும் போட்டிகளில் ஆறுதல் வெற்றி பெற்று தொடரை சிறப்பாக நிறைவு செய்யும் முனைப்பில் மும்பை இந்தியன்ஸ் அணி உள்ளது.
குஜராத் டைட்டன்ஸ் அணி இந்தத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி தற்போது வரை விளையாடியுள்ள 10 போட்டிகளில் 8 வெற்றி மற்றும் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. தற்போது புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பேட்டிங் மற்றும் க்ரூணல், ஷமி ஆகியோரின் பந்துவீச்சு அணிக்கு கூடுதல் பலம் சேர்த்து வருகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை கடந்த போட்டியில் அந்த அணியின் சூர்யகுமார் யாதவ் அசத்தினார். எனினும் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோரின் ஃபார்ம் மிகவும் மோசமாக உள்ளது அந்த அணியின் பின்னடைவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. திலக் வர்மா மட்டும் அந்த அணிக்கு நல்ல எதிர்கால வீரராக உருவெடுத்துள்ளார். மற்றப்படி இந்தத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஒரு மிகவும் மோசமான தொடராகவே அமைந்துள்ளது. கடைசி 4 போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா ஃபார்மிற்கு திரும்பவாரா என்று மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது கிட்டதட்ட உறுதியாகிவிடும். ஆகவே அந்த அணியும் இன்று வெற்றி பெற்று தன்னுடைய ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை உறுதி செய்ய தீவிரமாக போராடும் என்பதால் இன்றைய போட்டியில் கூடுதல் சுறுசுறுப்பாக இருக்கும். முதல் முறையாக களமிறங்கியுள்ள குஜராத் அணி முதல் தொடரிலேயே ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி அசத்தும் வாய்ப்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -