ஐபிஎல் தொடரின் 57வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் தொடங்குகிறது. 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்வதால் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான கடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமாக சேஸ் செய்தது. கடந்த இரண்டு வாரங்களில் மும்பை அணியின் பேட்டிங் ஃபார்ம் சிறப்பாக இருந்தாலும், பவுலிங்கில் மட்டும் முன்னேற்றம் கண்டால் வெற்றி உறுதியாகும். அதேவேளையில், இந்த சீசனில் குஜராத் டைட்டன்ஸ் அணி அபாயகரமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.
MI vs GT போட்டி விவரங்கள்:
மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மேட்ச் 57
இடம்: வான்கடே ஸ்டேடியம், மும்பை
தேதி & நேரம்: வெள்ளி, மே 12, 7:30 மணி
டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
வான்கடே ஸ்டேடியம் பிட்ச் அறிக்கை:
வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள பிட்ச் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் நடந்த கடைசி போட்டியில் மும்பை அணி 3 ஓவர்கள் மீதம் வைத்து 200 ரன்களை வெற்றிகரமாக சேஸ் செய்தது. இன்றைய போட்டியிலும் இரண்டு இன்னிங்ஸ்களையும் சேர்த்து 400 ரன்களை எதிர்பார்க்கலாம்.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ):
ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்.), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹல் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஆகாஷ் மத்வால், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்
குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி):
விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் சர்மா, நூர் அகமது, முகமது ஷமி
சிறந்த பேட்ஸ்மேனாக யார் இருப்பார்..?
டி20 வடிவத்தில் உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேனா சூர்யகுமார் யாதவ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார். இந்த போட்டியிலும் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறந்த பந்துவீச்சாளராக யார் இருப்பார்..?
ஐபிஎல் தொடரின் 16 வது சீசனில் மறுபிறவி எடுத்துள்ளார் மோஹித் சர்மா. சிறப்பாக பந்துவீசி வரும் இவர், கடைசியாக நடந்த போட்டியில் 29 ரன்கள் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். மும்பை அணிக்கு எதிரான போட்டியிலும் சிறப்பாக பந்துவீசுவார் என எதிர்பார்க்கலாம்.
இன்றைய போட்டியின் கணிப்பு: இரண்டாவதாக பேட்டிங் செய்யும் அணி வெற்றிபெறும்.