MI vs CSK Score Live: ரகானே அதிரடி.. மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 08 Apr 2023 10:57 PM
மும்பை அணிக்கு 2வது தோல்வி..

நடப்பு தொடரில் மும்பை அணி விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியை கண்டுள்ளது.

சென்னை அணி அபார வெற்றி

மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

ஒருவழியாக மும்பை அணிக்கு கிடைத்த விக்கெட்

நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் துபே 28 ரன்களை எடுத்து, கார்த்திகேயா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

சென்னை அணி வெற்றிக்கு 33 ரன்கள் தேவை

சென்னை அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 33 ரன்கள் தேவை. கைவசம் 8 விக்கெட்டுகள் உள்ளன.

தடுமாறும் மும்பை அணி..

இம்பேக்ட் பிளேயர் குமார் கார்த்திகேயா உள்ளிட்ட 3 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியும், விக்கெட் எடுக்க முடியாமல் மும்பை அணி திணறி வருகிறது.

வெற்றிக்கு 50 ரன்கள் தேவை..

சென்னை அணி வெற்றி பெற 50 பந்துகளில் 50 ரன்கள் தேவை

100 ரன்களை எட்டிய சென்னை..

10.4 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 100 ரன்களை எட்டியது

மிரட்டலான ஆட்டம் முடிவுக்கு வந்தது..

அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ரகானே 61 ரன்கள் எடுத்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.

பவர்பிளே முடிந்தது.. சென்னை அணி ஆதிக்கம்

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிந்த நிலையில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 68 ரன்களை சேர்த்துள்ளது.

நடப்பு தொடரின் அரைவேக அரைசதம்..

19 பந்துகளில் அரைசதம் விளாசியதன் மூலம், நடப்பு தொடரில் அதிவேகமாக அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை  ரகானே பெற்றார்.

19 பந்துகளில் அரைசதம்

வெறும் 19 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார் ரகானே

அரைசதம் கடந்த ரகானே - கெய்க்வாட் பார்ட்னர்ஷிப்

தொடக்க வீரர் கான்வே டக்-அவுட் ஆன நிலையில் ரகானே - கெய்க்வாட் ஜோடி 23 பந்துகளில் 50 ரன்களை சேர்த்துள்ளது. இதில் ரகானே மட்டும் 43 ரன்களை சேர்த்துள்ளார்.

அரைசதம் கடந்த சென்னை அணி..

158 ரன்கள் எனும் இலக்கை நோக்கி விளையாடி வரும் சென்னை அணி 4.3 ஓவர் முடிவில் 50 ரன்களை கடந்தது.

மும்பைக்கு பயம் காட்டும் ரகானே..

போட்டியின் நான்காவது ஓவரை எதிர்கொண்ட ரகானே, ஒரு சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகள் உட்பட 23 ரன்களை அடித்து அசத்தினார்.

கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய மும்பை..! 158 ரன்கள் இலக்கை எட்டுமா சென்னை..?

கடைசி கட்டத்தில் மும்பை வீரர் ரித்திக் அதிரடியால் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்துள்ளது. இதனால், சென்னைக்கு 158 ரன்கள் டார்கெட்டாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

மும்பையை சாய்த்த சென்னையின் சுழல்..

மும்பை அணி அதிரடியாக விளையாடி வந்த நிலையில், ஜடேஜா மற்றும் சாண்ட்னர் கூட்டணி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ரன் குவிக்க முடியாமல் கட்டுப்படுத்தியது.

சென்னை அணிக்கு 158 ரன்கள் இலக்கு

20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்களை சேர்த்தது.

கடைசி நம்பிக்கையை இழந்த மும்பை

அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்கள் எடுத்து இருந்தபோது, தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி நம்பிக்கையை இழந்த மும்பை

அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்கள் எடுத்து இருந்தபோது, தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

கடைசி நம்பிக்கையை இழந்த மும்பை

அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்கள் எடுத்து இருந்தபோது, தேஷ்பாண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

7வது விக்கெட்டை இழந்த மும்பை..

5 ரன்கள் எடுத்து இருந்த ஸ்டப்ஸ், மகாலா பந்துவீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்

15 ஓவர்கள் முடிந்தது.. சென்னை அணி ஆதிக்கம்..

15 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 109 ரன்களை சேர்த்துள்ளது.

41 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்..

பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 61 ரன்கள் எடுத்து இருந்த மும்பை அணி, மேலும் 41 ரன்களை சேர்ப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

6வது விக்கெட்டை இழந்த மும்பை..

பொறுப்புடன் விளையாடி வந்த திலக் வர்மா, 22 ரன்களை சேர்த்து ஜடேஜா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

100 ரன்களை எட்டியது மும்பை..

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி, 12.5 ஓவர் முடிவில் 100 ரன்களை எட்டியது

10 ஓவரில் பாதி விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி..

10 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

5வது விக்கெட்டை இழந்த மும்பை...

வெறும் 2 ரன்களை மட்டுமே சேர்த்து அர்ஷ்த் கான், சாண்ட்னர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்தடுத்து சரிந்த விக்கெட்..

ரோகித் 21 ரன்களுக்கும், இஷான் கிஷன் 32 ரன்களுக்கும், சூர்யகுமார் யாதவ் 1 ரன்னிலும், கேமரூன் கிரீன் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

கேமரூன் கிரீன் அவுட்..

ஜடேஜா பந்துவீச்சில்  கேமரூன் கிரீன் ஆட்டமிழந்தார்

சுழலில் தடுமாறும் மும்பை அணி..

பவர்பிளேயில் அதிரடியாக ஆடி 61 ரன்களை சேர்த்த மும்பை அணி, ஜடேஜா, சாண்ட்னர் சுழலில் சிக்கி அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

சரிந்தது மும்பையின் டாப்-ஆர்டர்..

ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ் 

அடுத்த விக்கெட்டை இழந்த மும்பை அணி

அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன், 32 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஜடேஜா பந்துவீச்சில் கேட்ச் முறையில் அவுட்டானார்.

பவர்பிளே முடிந்தது.. யாருக்கு சாதகம்

பவர்-பிளேயின் 6 ஓவர்கள் முடிந்த நிலையில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்களை சேர்த்துள்ளது.

50 ரன்களை கடந்தது மும்பை அணி..

5.2 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 50 ரன்களை கடந்தது.

5 ஓவர்கள் முடிந்தது..

5 ஓவர்கள் முடிவில் மும்பை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 47 ரன்களை சேர்த்துள்ளது.

ரோகித் சர்மா கிளீன் போல்ட்..

மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 21 ரன்கள் எடுத்து இருந்தபோது, தேஷ்பாண்டே பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

சென்னை அணிக்கு மேலும் பின்னடைவு..

பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி இல்லாத சூழலில் காயம் காரணமாக சாஹரும் வெளியேறியுள்ளார். இது சென்னை அணியின் பந்துவீச்சை மேலும் வலுவிழக்கச் செய்துள்ளது.

ஹாட்ரிக் பவுண்டரி..

மூன்றாவது ஓவரில் அடுத்தடுத்து மூன்று பவுண்டரிகளை விளாசினார் இஷான் கிஷான்

தீபக் சாஹர் வெளியேறினார்..

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தீபக் சாஹர் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

ரன் கணக்கை தொடங்கினார் ரோகித் சர்மா

முதல் ஓவரின் மூன்றாவது பந்தை பவுண்டரிக்கு விளாசி ரன் கணக்கை தொடங்கினர் ரோகித்

போட்டியின் முதல் ஓவர்...

போட்டியின் முதல் ஓவரை வீசுகிறார் தீபக் சாஹர்

Background

ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.


 


சென்னை - மும்பை மோதல்:


ஐபிஎல் சீசனின் 12 வது போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. சென்னை அணி தான் விளையாடிய இரண்டாவது லீக் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்தி, புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது. இதனால் சென்னை அணி வெற்றிப்பயணத்தை தொடரவும், மும்பை அணி வெற்றிக்கணக்கை தொடங்கவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அதோடு, ஐபிஎல் தொடரின் ஆயிரமாவது போட்டியில் வென்று வரலாற்றில் இடம்பெற இரு அணிகளும் முனைப்பு காட்டுகின்றன.


சென்னை அணி நிலவரம்


சென்னை அணியை பொருத்தவரையில் டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.  அதேநேரம், கடந்த போடியில் பந்துவீச்சில் அசத்திய மொயீன் அலி பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது.  ஆனால், பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு ம்ற்றும் ரவீந்திர ஜடேஜா,  எம்எஸ் தோனி  மற்றும் ஷிவம் துபே அகியோர்  சிறப்பாக செயல்பட வேண்டியுள்ளது. அதோடு  மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர் மற்றும் துஷார் பாண்டே ஆகியோர் ரன்களை வாரி வழங்குவது சென்னை அணிக்கு பெரும் பிரச்னையாக உள்ளது.


மும்பை அணி நிலவரம்:


மும்பை அணியை பொருத்தவரையில் முதல் போட்டியில் சொதப்பிய கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட்  மற்றும் கேமரூன் கிரீன் இன்றைய போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டி உள்ளது. திலக் வர்மா மற்றும் நேஹல் வதேரா ஆகியோர் மும்பை அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத் கான் அகியோர் கட்டுக்கோப்புடன் செயல்பட வேண்டியது கட்டாயம் அதேநேரம், பந்துவீச்சில் ஏதேனும் புதுவீரர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கபப்டுகிறது.


நேருக்கு நேர்:


மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதும் போட்டி, ஐபிஎல் தொடரில் எல்-கிளாசிகோ என அழைக்கப்படுகின்றன. அந்த வரிசையில் இந்த இரு அணிகளும் இதுவரை 34 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் மும்பை அணி 20 முறையும், சென்னை அணி 14 முறையும் வெற்றி பெற்றுள்ளன.


மும்பை வான்கடே மைதானம்:


வான்கடே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதிலும் 7 வெற்றியுடன் மும்பை அணியே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. வான்கடே ஸ்டேடியத்தில் சென்னைக்கு எதிரான போட்டிகளில் மும்பை 70% வெற்றி சாதனை படைத்துள்ளது. 


விளையாடிய போட்டிகள் - 10
மும்பை இந்தியன்ஸ் வென்ற போட்டிகள் - 7
சென்னை சூப்பர் கிங்ஸ் வென்ற போட்டிகள் - 3
முடிவு இல்லாத போட்டிகள் - 0



கடந்த 5 மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் போட்டிகள்:


ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. அதில், கடைசி ஐந்து போட்டிகளில் இரண்டு வெற்றிகள் கடைசி பந்தில் கிடைத்தது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.