MI vs CSK LIVE Score: ரோகித் சர்மா சதம் வீண்; மும்பை அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய சென்னை!

IPL 2024, MI vs CSK LIVE Score: மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த உடனடி தகவல்களை நமது ஏபிபி நாடு தளத்தில் காணலாம்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 14 Apr 2024 11:33 PM
MI vs CSK LIVE Score: ரோகித் சர்மா சதம் வீண்; மும்பை அணியை சொந்த மண்ணில் வீழ்த்திய சென்னை!

மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா இறுதிவரை களத்தில் தனது விக்கெடினை இழக்காமல், 63 பந்துகளைச் சந்தித்து 11 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட மொத்தம் 105 ரன்கள் சேர்த்திருந்தார். 


 

MI vs CSK LIVE Score: 6வது விக்கெட்டினை இழந்த மும்பை - ஷெப்பர்ட் அவுட்!

மும்பை அணி தனது 6வது விக்கெட்டினை இழந்துள்ளது. ஷெப்பர்ட் ஒரு ரன்னில் வெளியேறினார். 

MI vs CSK LIVE Score: 17 ஓவர்கள் முடிந்தது!

17 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs CSK LIVE Score: அடுத்தடுத்து சிக்ஸர் விளாசிய டிம் டேவிட் அவுட்!

ஆட்டத்தின் 17வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விளாசிய டிம் டேவிட் மூன்றாவது பந்தில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். 

MI vs CSK LIVE Score: 16 ஓவர்கள் முடிந்தது!

16 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்து விளையாடி வருகின்றது. மும்பை வெற்றி பெற அடுத்த 4 ஓவர்களில் 72 ரன்கள் தேவைப்படுகின்றது. 

MI vs CSK LIVE Score: ஹர்திக் பாண்டியா அவுட்!

ஹர்திக் பாண்டியா தனது விக்கெட்டினை 6 பந்துகளில் 2 ரன்கள் எடுத்து தேஷ்பாண்டே பந்தில் வெளியேறினார். 

MI vs CSK LIVE Score: நெருக்கடியில் மும்பை!

15வது ஒவரில் மும்பை அணி இரண்டு ரன்கள் மட்டும் எடுத்ததால், அணியின் ஸ்கோர் தற்போது 132 ரன்களாக உள்ளது. வெற்றிக்கு இன்னும் 5 ஓவர்களில் 75 ரன்கள் தேவைப்படுகின்றது. 

MI vs CSK LIVE Score: பரபரப்பை கிளப்பும் எல்கிளாசிக்கோ மோதல்; வெற்றி யாருக்கு?

14 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 130 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs CSK LIVE Score: திலக் வர்மா அவுட்!

20 பந்தில் 31 ரன்கள் சேர்த்திருந்த திலக் வர்மா தனது விக்கெட்டினை பத்திரானா பந்தில் இழந்து வெளியேறினார். 

MI vs CSK LIVE Score: 50 ரன்கள் கூட்டணி!

ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா கூட்டணி 31 பந்தில் 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றனர். 

MI vs CSK LIVE Score: 12 ஓவர்கள் முடிந்தது!

12 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 118 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: 11 ஓவர்கள் முடிந்தது!

11 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: ரோகித் சர்மா - 500 சிக்ஸர்கள்

ரோகித் சர்மா தனது டி20 கிரிக்கெட்டில் 500 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். 

MI vs CSK LIVE Score: மும்பை இந்தியன்ஸ் 100!

10.2 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: 10 ஓவர்கள் முடிவில் மும்பை!

10 ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs CSK LIVE Score: ரோகித் சர்மா அரைசதம்!

ரோகித் சர்மா தனது அரைசதத்தினை 30 பந்தில் எட்டினார். 

MI vs CSK LIVE Score: சூர்யகுமார் யாதவ் டக் அவுட்!

சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டினை ரன் ஏதும் எடுக்காமல் பத்திரானா பந்தில் வெளியேறினார். 

MI vs CSK LIVE Score: இஷான் கிஷன் அவுட்!

மும்பை அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் தனது விக்கெட்டினை 15 ரன்னில் 23 ரன்கள் சேர்த்த நிலையில் பத்திரானா பந்தில் வெளியேறினார். 

MI vs CSK LIVE Score: பவர்ப்ளே முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 63 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. பவர்ப்ளேவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

MI vs CSK LIVE Score: ஐந்து ஓவர்கள் முடிந்தது!

ஐந்து ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் இழப்பின்றி 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: சிக்ஸர் கணக்கைத் தொடங்கிய ரோகித்!

போட்டியின் மூன்றாவது ஓவரின் ஐந்தாவது பந்தினை சிக்ஸர் விளாசி ரோகித் சர்மா தனது சிக்ஸர் கணக்கைத் தொடங்கியுள்ளார். 

MI vs CSK LIVE Score: இரண்டு ஓவர்கள் முடிந்தது!

இரண்டு ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 13 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs CSK LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிவில் மும்பை அணி விக்கெட் இழப்பின்றி 5 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் முதல் ஓவரில் ஒரு பவுண்டரி விளாசி இருந்தார். 

MI vs CSK LIVE Score: இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை!

207 ரன்கள் இலக்கை நோக்கி மும்பை அணியின் இன்னிங்ஸை ரோகித் சர்மாவும் - இஷான் கிஷனும் தொடங்கினர். 

MI vs CSK LIVE Score: ஹாட்ரிக் சிக்ஸ் விளாசிய தோனி!

போட்டியின் கடைசி ஓவரில் தோனி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். 

MI vs CSK LIVE Score: மும்பையில் சரவெடி; ஹாட்ரிக் சிக்ஸ் விளாசிய தோனி; மும்பைக்கு 207 ரன்கள் இலக்கு!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டினை இழந்து 206 ரன்கள் சேர்த்தது. இதனால் மும்பை அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

MI vs CSK LIVE Score: 18 ஓவர்கள் முடிந்தது!

18 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: 10 ஓவர்கள் முடிந்தது!

10 ஓவர்கள் முடிவில் சென்னை அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 80 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: ரச்சின் ரவீந்திரா அவுட்!

ரச்சின் ரவீந்திரா தனது விக்கெட்டினை 16 பந்தில் 21 ரன்கள் சேர்த்து வெளியேறினார். இவரது விக்கெட்டினை ஸ்ரேயாஸ் கோபால் கைப்பற்றினார். 

MI vs CSK LIVE Score: ரச்சின் ரவீந்திரா சிக்ஸர்!

ரச்சின் ரவீந்திரா ஆட்டத்தின் 8வது ஓவரில் சிக்ஸர் விளாசி தனது சிக்ஸர் கணக்கைத் தொடங்கியுள்ளார். 

MI vs CSK LIVE Score: 6 ஓவர்கள் முடிந்தது!

பவர்ப்ளே முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: 5 ஓவர்கள் முடிந்தது!

5 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 38 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: 4 ஓவர்கள் முடிந்தது!

4 ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 24 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: மூன்று ஓவர்கள் முடிந்தது!

மூன்று ஓவர்கள் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 18 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs CSK LIVE Score: இரண்டு ஓவர்கள் முடிந்தது!

இரண்டு ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட்டினை இழந்து 9 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது. 

MI vs CSK LIVE Score: முதல் விக்கெட்டினை இழந்த சென்னை - ரஹானே அவுட்!

8 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்த ரஹானே தனது விக்கெட்டினை கோட்ஸீ பந்தில் இழந்து வெளியேறினார். 

MI vs CSK LIVE Score: முதல் ஓவர் முடிந்தது!

முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்துள்ளது. 

MI vs CSK LIVE Score: களமிறங்கிய சென்னை!

மும்பை அணிக்கு எதிராக சென்னை அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. 

MI vs CSK LIVE Score: தொடங்கிய எல்கிளாசிக்கோ! டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!

டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் இன்று (ஏப்ரல் 13) இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இன்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணிகளுக்கு இடையே ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இரண்டாவது போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ் (எம்ஐ) மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் மோதுகின்றன. 


புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் ஏழாவது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளன. நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை அணி 5 போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஐந்து போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி பெற்றுள்ளது. 


இரு அணிகளும் ஐபிஎல்லில் எப்படி..? 


ஐபிஎல் வரலாற்றில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் டாப் அணிகளாக பார்க்கப்படுகிறது. இரு அணிகளும் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளது. ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறை ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவும், எம்.எஸ். தோனிக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்டும் தலைமை தாங்குகின்றனர்.


இதுவரை இரு அணிகளுக்கு நேருக்குநேர்: 


ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் இதுவரை 36 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணி 20 போட்டிகளிலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 16 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. 


மும்பை - சென்னை இடையேயான இன்றைய போட்டியில் அனைவரது பார்வையும் மகேந்திர சிங் தோனி மற்றும் ரோஹித் சர்மா மீதுதான் உள்ளது. தோனியின் கேப்டன்சி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் விளையாடுவது இதுவே முதல்முறை. 42 வயதிலும் தோனி மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். 


பிட்ச் ரிப்போர்ட்: 


மும்பை வான்கடே ஸ்டேடியத்தின் ஆடுகளம் எப்போதும் பேட்ஸ்மேன்களில் சொர்க்கமாக பார்க்கப்படுகிறது. அவுட் பீல்ட் சூப்பராக உள்ள நிலையில், பந்து பேட்டில் பட்டவுடன் எல்லையை நோக்கி பறக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியின் தொடக்கத்தில் விக்கெட்களை வீழ்த்தவும் வாய்ப்பு அதிகம். வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை 112 ஐபிஎல் போட்டிகள் நடந்துள்ளன. இதில், 61 போட்டிகள் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி வெற்றிபெற்றது. இன்றைய போட்டியில் முதலில் டாஸ் வெல்லும் அணி பேட்டிங்கை மட்டுமே தேர்வு செய்யலாம். 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:


சென்னை சூப்பர் கிங்ஸ்:


1. ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), 2. ரச்சின் ரவீந்திரா, 3. டேரில் மிட்செல், 4. ஷிவம் துபே, 5. எம்.எஸ். தோனி (விக்கெட் கீப்பர்), 6. அஜிங்க்யா ரஹானே, 7. சமீர் ரிஸ்வி, 8. ஜடேஜா, 9. ஷர்துல் தாக்கூர், 10. முஸ்தாபிசுர் ரஹ்மான், 11. துஷார் தேஷ்பாண்டே.


மும்பை இந்தியன்ஸ்:


1. இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), 2. ரோகித் சர்மா, 3. சூர்யகுமார் யாதவ், 4. ஹர்திக் பாண்டியா (கேப்டன்), 5. திலக் வர்மா, 6. டிம் டேவிட், 7. ரொமாரியோ ஷெப்பர்ட், 8. முகமது நபி , 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. ஜஸ்பிரிட் பும்ரா, 11. ஜெரால்ட் கோட்ஸி.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.