சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ததுள்ளது.

Continues below advertisement

மும்பை vs சென்னை

ஐபிஎல்லின் El-Classico போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி போட்டி என்றலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது, ஆனால் நடப்பு சீசன் இரு அணிகளுக்கும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை, சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 10 வது இடத்திலும் மும்பை அணி 7வது இடத்திலும் உள்ளது. ஆனால் கடைசி இரண்டு போட்டிகளில் மும்பை அணி வெற்றி பெற்று நல்ல ஃபார்மில் உள்ளது. 

மறுப்புறம் சென்னை அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ளது, ஆனால் இன்றைய போட்டி மிக முக்கியமான போட்டியாக உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்க முடியும்.

Continues below advertisement

சென்னை பேட்டிங்: 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைப்பெறும் இந்தப்போட்டியில் டாசில் வெற்றி மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீசுவதாக அறிவித்தார், மும்பை அணியில் கரண் சர்மாவுக்கு பதிலாக அஸ்வினி குமார் சேர்க்கப்பட்டுள்ளார்., அதேப்போல் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ் தோனி முதலில் பந்து வீசுவதையே தானும் விரும்பியதாக தெரிவித்தார், சென்னை அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டு ராகுல் த்ரிப்பாதிக்கு பதிலாக 17வது இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே சேர்க்கப்பட்டுள்ளார்

அணி விவரம்: 

மும்பை இந்தியன்ஸ் : ரியான் ரிக்கல்டன் (WK), சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (சி), நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கர்ண் சர்மா

இம்பேக்ட் வீரர்: ரோஹித் சர்மா

சென்னை சூப்பர் கிங்ஸ்: ஷேக் ரஷீத், ரச்சின் ரவீந்திரா, ஆயுஷ் மத்ரே, விஜய் சங்கர், ரவீந்திர ஜடேஜா, ஜேமி ஓவர்டன், எம்எஸ் தோனி (சி & டபிள்யூ கே), அன்ஷுல் கம்போஜ், நூர் அகமது, கலீல் அகமது, மதீஷா பத்திரனா

இம்பேக்ட் வீரர்:  சிவம் துபே