ஐபிஎல் 18வது சீசனில் முதல் 7 ஆட்டங்கள் ஏற்கெனவே முடிவுற்ற நிலையில் அடுத்த எழு ஆட்டங்கள் நடைப்பெற உள்ளது. அதன்படி இன்று சண்டிகரில் நடக்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 

Continues below advertisement

கடந்தப்போட்டியில் வெற்றி:

மழையால் குறுக்கப்பட்ட கடந்த போட்டியில் 14 ஓவர்களாக நடைப்பெற்றது. அந்தப்போட்டியில் ஆர்சிபி அணி மோசமான் பேட்டிங் சரிவை சந்தித்தது. டிம் டேவிட் அரை சதம் அடித்து 96 ரன்கள் எடுக்க  உதவினார். சேஸிங் செய்த பஞ்சாப் அணி, நேஹல் வதேராவின் அபார ஆட்டத்தின் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற் RCB: 

இந்த நிலையில் இப்போட்டியில் டாசில் வெற்றிப்பெற்ற ஆர்சிபி அணி கேப்டன் ரஜத் படிதார் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். ஆர்சிபி அணியில் இன்றைய போட்டிக்காக ஓரே ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து சொதப்பி வரும் லிவிங்ஸ்டனுக்கு பதிலாக ரொமாரியோ ஷெப்பர்ட் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளார். 

Continues below advertisement

மறுப்பக்கம் பஞ்சாப் அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 

பழதீர்க்குமா? வெற்றி நடை தொடருமா?

மொத்தத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று ஆர்சிபி பஞ்சாப்பை பழிதீர்க்குமா? அல்லது பஞ்சாப் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முன்னேறுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்

‘அணிகள் விவரம்: 

பஞ்சாப் கிங்ஸ் (பிளேயிங் லெவன்): பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர்(கேட்ச்), ஜோஷ் இங்கிலிஸ்(வ), நேஹால் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், மார்கோ ஜான்சன், சேவியர் பார்ட்லெட், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (பிளேயிங் லெவன்): பிலிப் சால்ட், விராட் கோலி, ரஜத் படிதார் (கேட்ச்), ஜிதேஷ் சர்மா (வ), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட் , புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்