லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கே.எல்.ராகுலுக்கு ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக, அதாவது குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி ஒரு ஓவரை முடிக்காமல் இருந்ததற்காக ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் நேற்றைய ஆட்டத்தில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு  எதிரான போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.


நேற்றைய போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி மெதுவாக பந்து வீசியதற்காக (ஸ்லோ ஓவர் ரேட்) கே.எல்.ராகுலுக்கு ரூ. 24 லட்சம் அபராத தொகை செலுத்த வேண்டும். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆடிய லக்னோ அணி வீரர்களுக்கு ரூ.6 லட்சம் அல்லது அவர்களின் போட்டிக் ஊதியத்தில் 25 சதவீதத்தை செலுத்த வேண்டும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் அதிகாரப்பூரிவமாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.






இந்த சீசனில், ஏற்கனவே பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக கே.எல் ராகுலுக்கு கடந்த போட்டியின் போது அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






மேலும், மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோஹித் ஷர்மா ஸ்லோ ஓவர் ரேட் விதிமீறலுக்காக ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளார்.


ஐ.பில்.எல். விதிமுறைகளை மீறி இன்னும் ஒரு முறை கே.எல்.ராகுல் நடந்துகொண்டால், நடப்பு ஐ.பி.எல். சீசனில் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண