டெல்லி த்ரில் வெற்றி:

திங்களன்று நடைபெற்ற ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்எஸ்ஜி) அணி டெல்லி கேபிடல்ஸ் (டிசி) அணியிடம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. போட்டியின் பெரும்பகுதி எல்எஸ்ஜி அணிக்கு சாதகமாகத் தோன்றினாலும், 210 ரன்கள் இலக்கை நிர்ணயித்து டெல்லி  அணியை 65/5 என தடுமாற வைத்தது.

ஆனால் இம்பாக்ட் மாற்று வீரர் அசுதோஷ் சர்மா , போட்டியின் இறுதி ஓவரில் ஆட்டமிழக்காமல் 66 ரன்கள் எடுத்து டெல்லி  அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். போட்டிக்குப் பிறகு, எல்எஸ்ஜி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், தலைமை பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுடன் உற்சாகமாகப் பேசுவதைக் காண முடிந்தது

கோட்டை விட்ட பண்ட்:

டெல்லி அணியின்  சேசிங்கில் கடைசி ஓவரில், பண்ட் தனது அணிக்காக ஆட்டத்தை வெல்லும் வாய்ப்பு கிடைத்தும் கோட்டைவிட்டார்,  மோஹித் சர்மாவை ஸ்டம்ப் செய்யும் நல்ல வாய்ப்பை அவர் தவறவிட்டார், ஆனால் டிஆர்எஸ் பயன்படுத்தி எல்பிடபிள்யூ அப்பீல் செய்தார். ரிவியூவில் பந்து ஸ்டம்பை தவறவிட்டது, இதனால் கேபிடல்ஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டது

அடுத்த பந்தே, மோஹித் சர்மா ஒரு சிங்கிள் எடுத்துக்கொடுக்க, அசுதோஷ் சர்மாசிக்ஸரை அடித்து டெல்லி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்

ராகுல் vs கோயங்கா:

கோயங்காவுடன் பண்ட் பேசியதை வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் பறந்தது, இதற்கு காரணம் என்னவென்றால் கடந்த ஆண்டு  கே.எல் ராகுல் கேப்டனாக இருந்த போது சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படுதோல்வி அடைந்தது, அப்போது கோயங்கா மைதானத்திலே ராகுலுடன் கடிந்து கொண்டு பேசிய இணையத்தளங்களில் வைரலாகி பேசும் பொருளானது. 

டிரஸ்சிங் ரூமில் நடந்தது என்ன? 

இருப்பினும், "ஏமாற்றமளிக்கும் தோல்வி"க்குப் பிறகு கோயங்கா வீரர்களுக்கு உற்சாகமான பேச்சு கொடுப்பதைக் காணக்கூடிய ஒரு வீடியோவை LSG இப்போது பகிர்ந்துள்ளது, அந்த வீடியோவில்  அவர் அணியை ஊக்கப்படுத்துவதாகக் காணப்பட்டது.

"இந்த ஆட்டத்தில் இருந்து பேட்டிங், பந்துவீச்சு என நிறைய நேர்மறையான விஷயங்களை நான் எடுத்துக்கொள்கிறேன்" என்று கோயங்கா LSG பகிர்ந்து கொண்ட வீடியோவில் கூறினார்.

"பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் பவர்பிளே சிறப்பாக இருந்தது. நாங்கள் ஒரு இளம் அணி. நாளை முதல் நேர்மறையான அம்சங்களைப் பார்ப்போம்  27 ஆம் தேதி நடைப்பெறும் போட்டியில் சிறந்த முடிவைப் பெறுவோம் என்று நம்புகிறோம். ஏமாற்றமளிக்கும் முடிவு ஆனால் சிறந்த ஆட்டம். எனவே, சிறப்பாகச் செய்தோம்," என்று கோயங்கா கூறினார்.