Vikram Audio Launch LIVE: ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்ட என் நண்பர் - விக்ரம் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் கமல்
Vikram Movie Audio Launch LIVE Updates: விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள..
ஸ்டாலின் அரசியலுக்கு அப்பாற்பட்ட என் நண்பர். ஏன் இருக்க கூடாதா.. நானும் ரஜினியும் போட்டியாளர்களா இருக்கவில்லை.
இந்தி சுமாரத்தான் பேசுவேன். தமிழ் மொழிக்கு இடைஞ்சல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் எதிர்ப்பேன். இந்தி ஒழிக என்று சொல்ல மாட்டேன். ஆனால், தமிழை விட்டு கொடுத்து விடாதீர்கள்.
இறைவனுக்கு வணக்கம்னு பேச்சை ஆரம்பிப்பேன்.. ஆனா ஆண்டவரே இங்க இருக்காரு. மலையாலத்துல ஃபகத் இருக்குற மாதிரி தமிழுக்கு விஜய் சேதுபதி இருக்காரு - சிம்பு
இந்தியன் தாமதமானது வருத்தமா இருந்து. அப்பதான் விக்ரம் வந்துச்சு. லோகேஷோட ஃபேன் பாய் சம்பவம் தான் விக்ரம் - அனிருத்
கமல் சாரோட டைரக்ஷனில் நடிக்கணும் - மேடையில் கமலிடம் கோரிக்கை வைத்த விஜய் சேதுபதி
உங்கள் நடிப்பை பார்த்து வளர்ந்தவன் நான். அரசியலுக்கு வந்திட்டிங்க. ஆனா வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க என்று நடிகர் கமல்ஹாசனுக்கு உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
கமல் சாரோட ஒரே பேன் அப்படிங்கிற தகுதி யோட நான் சினிமாவுக்கு வந்தேன். கேன் திரைப்பட விழாவில் விக்ரமுடன் என்னுடைய இரவின் நிழல் படம் ரிலீஸ் ஆவது ஜென்ம சாபல்யம். அதை விட பெரிய ஆஸ்கர் எனக்கில்லை என நடிகரும், இயக்குநரான பார்த்திபன் பேசியுள்ளார்.
ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி உங்களோட பேனா தான் என்ன இங்க கூட்டி வந்துருக்கு கமல் சார் என்று விக்ரம் ஆடியோ வெளியீட்டு விழாவில் கிடாரி இயக்குநர் தர்புர்கா சிவா பேசியுள்ளார்.
”ஹாட் பீட் கொஞ்சம் பாஸ்டா அடிக்குது. நான் சினிமாவுக்கு வந்ததுக்கு காரணம் கமல் சார். கமல் சார் பக்கத்துல பல வருஷமா 200 மீட்டருக்குள்ளையே இருக்கேன். கமல் புல் பார்ம் இன் விக்ரம்” - நரேன்
மதுரையில் கமலை வைத்து சம்பவம் செய்ய வேண்டும் என்று ஆசை - பா.ரஞ்சித்
சிலம் பரசனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் - பா. ரஞ்சித் விருப்பம்
விக்ரம், இசை மற்றும் ட்ரெயிலர் விழாவுக்கு ரஜினிகாந்த் வருகை தரலாம் என தகவல்
விழா அரங்கத்துக்குள் வருகை தந்த லோகேஷ் கனகராஜ்
நிகழ்ச்சியில் பா. ரஞ்சித், மகேந்திரன், ரோபா ஷங்கர், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் பங்கேற்பு
விக்ரம் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழா : கமலுக்கு இளையராஜா வீடியோ வழியாக வாழ்த்து..
களைகட்டும் விக்ரம் பட இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி!
Background
Vikram Movie Audio Launch LIVE Updates
விக்ரம் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெற இருக்கிறது. இதற்கான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் வரும் ஜூன் 3-ஆம் தேதி வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் ”பத்தல பத்தல” பாடல் வெளியாகி யூ-ட்யூப்பில் ட்ரெண்டாகி வருகிறது. விக்ரம் படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் நடித்துள்ளனர். பழைய விக்ரம் படத்தில் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த படத்திலும் கமல்ஹாசன் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -