LSG Vs RCB, IPL 2022 LIVE: 18 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்திய ஆர்சிபி அணி !
LSG Vs RCB, IPL 2022 LIVE: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்.. !
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வீழ்த்தியுள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 10 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
6 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 2 விக்கெட் இழப்பிற்கு 44 ரன்கள் எடுத்துள்ளது.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் 6 ரன்களில் லக்னோ வீரர் மணீஷ் பாண்டே ஆட்டமிழந்துள்ளார்.
ஆர்சிபி அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ 3 ஓவர்களின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிக் காகின் விக்கெட்டை ஹெசல்வூட் எடுத்துள்ளார்.
பெங்களூரு அணிக்கு எதிராக முதல் 2 ஓவர்களின் முடிவில் லக்னோ அணி 14 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது முறையாக 96 ரன்களுக்கு டூபிளசிஸ் ஆட்டமிழந்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 19 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 19 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 17 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி தன்னுடைய 5ஆவது விக்கெட்டை இழந்துள்ளது. 15.2 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளசிஸ் 40 பந்துகளில் 50 ரன்கள் எடுத்துள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 13 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 9 ஓவர்களின் முடிவில் ஆர்சிபி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 79 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பிரபுதேசாய் 10 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மேக்ஸ்வேல் 11 பந்துகளில் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணியின் மேக்ஸ்வேல் அதிரடியை தொடங்கியுள்ளார்.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 2 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்துள்ளார்.
இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ மற்றும் பெங்களூரு அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இரண்டு அணிகளும் கடந்த போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்குகின்றனர்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் போட்டிகளில் கிளன் மேக்ஸ்வேல் பந்துவீச்சில் கே.எல்.ராகுல் இதுவரை 4 இன்னிங்ஸில் விளையாடி 20 ரன்கள் மட்டுமே எடுத்து 2 முறை ஆட்டமிழந்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் எடுத்த ரன்கள்:
32*(14)vs பஞ்சாப்
14*(7) vs கொல்கத்தா
44*(23)vs ராஜஸ்தான்
7*(2)vs மும்பை
34(14)vs சென்னை
66*(34)vs டெல்லி
பெங்களூரு அணி 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி 2 தோல்விகளுடன் 4வது இடத்திலும் உள்ளது
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக கே.எல்.ராகுல் கடைசியாக விளையாடிய 5 போட்டிகளில்
39(35), 91*(57), 61*(49), 132*(69) ஆகிய ரன்களை எடுத்துள்ளார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 6 போட்டிகளில் ஆடி 4 வெற்றி 2 தோல்வியுடன் 3வது இடத்தில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கே.எல்.ராகுல் தன்னுடைய சொந்த ஊர் அணியான பெங்களூருவிற்கு எதிராக இன்று களமிறங்குகிறார்.
Background
15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளனர். இந்த தொடரில் இரு அணிகளும் பலம் மிகுந்த அணியாகவே வலம் வருகின்றன.
ஐ.பி.எல். தொடருக்கு அறிமுக அணியாக லக்னோ அணி இருந்தாலும் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. கடந்த போட்டியில் பெற்ற வெற்றி அந்த அணிக்கு உத்வேகத்தை அளிக்கும். கடந்த போட்டியில் சதமடித்த கே.எல்.ராகுல் லக்னோ அணியின் பேட்டிங்கிற்கு மிகுந்த பக்கபலமாக உள்ளார். குயின்டின் டி காக்கும் தொடக்க வீரராக அசத்த உள்ளார்.
மிடில் ஆர்டரில் மணீஷ் பாண்டே, தீபக்ஹூடா பேட்டிங்கில் அசத்தினால் மிகப்பெரிய ஸ்கோரை லக்னோ குவிக்கலாம். இளம் வீரர் ஆயுஷ் பதோனியும் பேட்டிங்கில் அசத்துவார் என்று நம்பப்படுகிறது. கடைசி கட்டத்தில் பேட்டிங்கில் அதிரடி காட்ட மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளார். இவர்களுடன் ஆல்ரவுண்டராக ஜேசன் ஹோல்டரும், குருணல் பாண்ட்யாவும் உள்ளனர். பந்துவீச்சில் ஆவேஷ்கான், ரவிபிஷ்னோய் சிறப்பாக வீசினால் பெங்களூர் ரன் குவிக்க சிரமம் ஏற்படும்.
பெங்களூர் அணியைப் பொறுத்தவரை இந்த தொடர் தொடங்கியது முதல் சிறப்பாக ஆடி வருகிறது. பேட்டிங், பந்துவீச்சு, பவுலிங் என்று அனைத்து துறைகளிலும் பெங்களூர் அணி சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. அந்த அணியின் கேப்டனும், அதிரடி வீரருமான பாப் டுப்ளிசிஸ் விளாசினால் பெங்களூர் ஸ்கோர் ஜெட் வேகத்தில் ஏறும். அவருக்கு இளம் வீரர் அனுஜ் ராவத் தொடக்கத்தில் அசத்துவார் என்று நம்பலாம். விராட் கோலியும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -