RCB vs LSG, IPL 2023 LIVE: பெங்களூருவை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கடைசி பந்தில் லக்னோ த்ரில் வெற்றி ..!

IPL 2023, Match 15, RCB vs LSG: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 10 Apr 2023 11:44 PM
RCB vs LSG Live Score: லக்னோ வெற்றி..!

லக்னோ அணி கடைசி பந்தில் பெங்களூரு அணியை ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது. 

RCB vs LSG Live Score: வெற்றிக்கு 5 ரன்கள் தேவை..!

19 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 7 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றிக்கு 5 ரன்கள் தேவை. 

RCB vs LSG Live Score: 18 ஓவர்கள் முடிவில்..!

18 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: பூரான் அவுட்..!

அதிரடியாக ஆடி வந்த பூரான் தனது விக்கெட்டை பறிகொடுத்துள்ளார்.  17 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 6 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: 16 ஓவர்கள் முடிவில்..!

அதிரடியாக ஆடிவரும் லக்னோ அணி 16 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்துள்ளது. 

RCB vs LSG Live Score: அதிவேக அரைசதம்..!

அதிரடியாக ஆடி வரும் லக்னோ அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்துள்ளது. பூரான் 15 பந்துகளில் 51 ரன்கள் குவித்துள்ளார். 

RCB vs LSG Live Score: 14 ஓவர்கள் முடிவில்..!

அதிரடியாக ஆடிவரும் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: 13 ஓவர்கள் முடிவில்..!

மீண்டும் அதிரடிக்கு கியரை மாற்றியுள்ள லக்னோ அணி 13 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 136 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: விக்கெட்..!

கடந்த ஓவரில் ஸ்டாய்ன்ஸ் தனது விக்கெட்டை இழந்த நிலையில் 12வது ஓவரின் முதல் பந்தில் கே.எல். ராகுல் தனது விக்கெட்டை இழந்துள்ளார். 

RCB vs LSG Live Score: ஸ்டாய்னஸ் விக்கெட்..!

அதிரடியாக ஆடி வந்த ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டை இழந்துள்ளார். இவர் 30 பந்தில்க் 65 ரன்கள் சேர்த்து இருந்தார். 

RCB vs LSG Live Score: 10 ஓவர்கள் முடிவில்..!

10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 91 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: ஸ்டாய்னஸ் அரைசதம்..!

அதிரடியாக ஆடிவரும் ஸ்டாய்னஸ் 25 பந்துகளில் 52 ரன்கள் குவித்துள்ளார். 

RCB vs LSG Live Score: மிரட்டும் ஸ்டாய்னஸ்..!

9 ஓவரிலும் தனது அதிரடி ஆட்டத்தினை ஸ்டாய்னஸ் தொடர்ந்துள்ளார். இதனால் ல்க்னோ அணி 9 ஓவர்கள் முடிவில் 76 -3.

RCB vs LSG Live Score: அதிரடி ஆட்டம்..!

8வது ஓவரில் மட்டும் ஸ்டாய்னஸ் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் பறக்கவிட்டார். இந்த ஓவர் முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 60 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: பவர்ப்ளே முடிவில் லக்னோ..!

பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி 3 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. 

RCB vs LSG Live Score: 213 ரன்கள் இலக்கு..!

தொடக்கம்  முதல் அதிரடி காட்டிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டை இழந்து 212 ரன்கள் சேர்த்துள்ளது. இதன் மூலம் லக்னோவுக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  

RCB vs LSG Live Score: 200 ரன்கள்..!

அதிரடியாக ஆடி வரும் பெங்களூரு 19 ஓவர்கள் முடிவில் 203 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: மேக்ஸ் வெல் அரைசதம்..!

அதிரடியாக ஆடி வரும் மெக்ஸ் வெல் 24 பந்தில் 52 ரன்கள் குவித்துள்ளார். 

RCB vs LSG Live Score: மேக்ஸ் வெல் அரைசதம்..!

அதிரடியாக ஆடி வரும் மெக்ஸ் வெல் 24 பந்தில் 52 ரன்கள் குவித்துள்ளார். 

RCB vs LSG Live Score: வானவேடிக்கை..!

18 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட்டை இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது. 

RCB vs LSG Live Score: 17 ஓவர்கள் முடிவில்.!

சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு அணி 16 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் சேர்த்துள்ளது.

RCB vs LSG Live Score: 16 ஓவர்கள் முடிவில்..!

அதிரடியாக ஆடி வரும் பெங்களூரு அணி  16 ஓவர்கள் முடிவில் 146 - 1 என்ற நிலையில் உள்ளது. 

RCB vs LSG Live Score: டூ ப்ளஸி அரை சதம்..!

அதிரடியாக ஆடிவரும் டூ ப்ளஸி 35 பந்தில் தனது அரைசத்தினைன் கடந்துள்ளார். 

RCB vs LSG Live Score: 115 மீட்டர் சிக்ஸ்..!

15வது ஓவரில் டூ ப்ளஸி இரண்டு சிக்ஸர்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர் 115 மீட்டருக்கு விளாசப்பட்டது. 15 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: நிதான ஆட்டம்..!

பெங்களூரு அணி 13 ஓவர்கள் முடிவில் 117- 1 .

RCB vs LSG Live Score: 100 ரன்கள்..!

அட்டகாசமாக ஆடி வரும் பெங்களூரு அணி 13 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: 12 ஓவர்கள் முடிவில்..!

சிறப்பாக விளையாடி வரும் பெங்களூரு அணி 12 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் சேர்த்துள்ளது.

RCB vs LSG Live Score: விக்கெட்..!

அதிரடியாக ஆடிவந்த விராட் கோலி 44 பந்தில் 61 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை அமித் மிஸ்ரா பந்து வீச்சில் பறிகொடுத்தார். பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 96 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: 11 ஓவர்கள் முடிவில்..!

11 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 94 - 0. 

RCB vs LSG Live Score: 10 ஓவர்கள் முடிவில்..!

சிறப்பாக ஆடிவரும் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்கள் தங்களது விக்கெட்டை இழக்காமல் அதிரடியாக ஆடி வருகின்றனர். 10 ஓவர்கள் முடிவில் பெங்களூரு  அணி 87 ரன்கள் குவித்துள்ளது. 

RCB vs LSG Live Score: விராட் கோலி அரைசதம்..!

அதிரடியாக ஆடி வரும் விராட் கோலி 35 பந்தில் தனது அரை சதத்தினை கடந்துள்ளார். 9 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 74 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: நிதான ஆட்டம்..!

அதிரடியாக ஆடிவந்த பெங்களூரு அணி பவர்ப்ளேவிற்குப் பிறகு நிதானமாக ஆடி வருகிறது. 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள் சேர்த்துள்ளது.  

RCB vs LSG Live Score: 7 ஓவர்கள் முடிவில்..!

7 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 62 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: 50 ரன்கள்..!

அதிரடியாக ஆடிவரும் விராட் கோலியால் பெங்களூரு அணி பவ்ர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: 5 ஓவர்கள் முடிவில்..!

5 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: கியரை மாற்றும் விராட்..!

கடந்த மூன்று ஓவர்களாகவே விராட் கோலி அதிரடியாக ஆடி வருகிறார். நான்கு ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: மூன்று ஓவர்கள் முடிவில்..!

சிறப்பாக ஆடி வரும் பெங்களூரு அணி 3 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: சிக்ஸர் பறக்கவிட்ட விராட்..!

இரண்டாவது ஓவரில் பெங்களூரு அணியின் முதல் சிக்ஸர் மற்றும் முதல் பவுண்டரியை விளாசியுள்ளார். இந்த ஓவர் முடிவில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் சேர்த்துள்ளது. 

RCB vs LSG Live Score: நிதான தொடக்கம்..!

லக்னோவுக்கு எதிராக பேட்டிங்கைத் தொடங்கிய பெங்களூரு அணியின் டூ பிளசிஸ் மற்றும் விராட் கோலி நிதானமாக தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். முதல் ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் சேர்த்துள்ளனர். 

RCB vs LSG Live Score: லக்னோ அணியின் ப்ளேயிங் லெவன்

 


கே.எல். ராகுல் (கேப்டன்), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஜெய்தேவ் உனட்கட், அமித் மிஸ்ரா, அவேஷ் கான், மார்க் வூட், ரவி பிஷ்னாய்

RCB vs LSG Live Score: பெங்களூரு அணியின் ப்ளேயிங் லெவன்

 


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), அனுஜ் ராவத், டேவிட் வில்லி, வெய்ன் பார்னல், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்

RCB vs LSG Live Score: டாஸ்..!

டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

பாப் டூ பிளிசி தலைமையிலான  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.  இரு அணிகளும் மோதும் இன்றைய போட்டியானது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 


ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு அறிமுகமான லக்னோ அணி, ப்ளே ஆப் வரை சென்று அசத்தியது. அப்போது, எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணியிடம் வீழ்ந்தே லக்னோ அணி தொடரில் இருந்து வெளியேறியது. 


இந்த சீசனில், பெங்களூரு அணி தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் வலம் வருகின்றது. லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் இருக்கின்றது. 


இந்தநிலையில், இந்த இரு அணிகளும் கடந்த சீசனில் இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் சந்தித்தது. அந்த இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணியே வெற்றி பெற்றது. கடந்த சீசனில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி 19 ஏப்ரல் 2022 அன்று மும்பை டாக்டர் DY பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமியில் நடந்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி லக்னோ அணிக்கு 181 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அடுத்து களமிறங்கிய லக்னோ தொடக்க விக்கெட்களை இழந்தாலும், க்ருனால் பாண்டியா (42), மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் (24) ஆகியோரின் அற்புதமான ஆட்டத்தின் உதவியுடன் 163 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. 


இரண்டாவது போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. ராயல் சேலஞ்சர்ஸ் மீண்டும் சூப்பர் ஜெயன்ட் அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 54 பந்துகளில் 112 ரன்கள் குவித்த ரஜத் படிதாருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.


RCB vs LSG புள்ளிவிவரங்கள்:



  • பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக அதிக ரன்கள்: ரஜத் படிதார் -112

  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அதிக ரன்கள் : கேஎல் ராகுல் -109

  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்காக அதிக விக்கெட்டுகள்: ஜோஷ் ஹேசில்வுட்-7

  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக அதிக விக்கெட்டுகள்: க்ருனால் பாண்டியா -2


கடந்த 2 போட்டிகளில் வெற்றி விவரங்கள்: 























தேதிவெற்றிவித்தியாச வெற்றிஇடம்
25 மே 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்14 ரன்கள்ஈடன் கார்டன்ஸ், கொல்கத்தா
19 ஏப்ரல் 2022ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்18 ரன்கள்டாக்டர் டிஒய் பாட்டீல் ஸ்டேடியம், மும்பை

கணிக்கப்பட்ட அணி விவரங்கள்:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி):


விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), க்ளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், மைக்கேல் பிரேஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG):


கேஎல் ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக், கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), க்ருனால் பாண்டியா, அமித் மிஸ்ரா, மார்க் வூட், யாஷ் தாக்கூர், ஜெய்தேவ் உனத்கட், ரவி பிஷ்னாய்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முழு அணி:


ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஹர்சல் படேல், வனிந்து ஹசரங்கா, தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அஹமத், ரஜத் படிதார், அனுஜ் ராவத், ஆகாஷ் தீப், ஜோஷ் ஹேசில்வுட், மஹிபால் லோம்ரோர், ஃபின், சுயாஷ் பிரபுட்ஸ், சுயாஷ் பிரபுட்ஸ் சர்மா, சித்தார்த் கவுல், டேவிட் வில்லி, ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, மனோஜ் பந்தேஜ், ராஜன் குமார், அவினாஷ் சிங், சோனு யாதவ், மைக்கேல் பிரேஸ்வெல்.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முழு அணி:


கேஎல் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வூட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னாய், நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனத்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன் உல் ஹக், யுத்வீர் சரக்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.