LSG vs RCB LIVE: அரை சதம் அடித்தார் கேப்டன் கேஎல் ராகுல்..
LSG vs RCB, IPL 2022 LIVE Updates: ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் 43 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தி வருகிறார்.
பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணி 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 102 ரன்கள் எடுத்துள்ளது.
பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் லக்னோ அணி 9 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்துள்ளது.
20 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் அடித்து லக்னோ அணிக்கு 208 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் வீரர் ரஜத் பட்டிதார் 49 பந்துகளில் 100 ரன்கள் அடித்து விளையாடி வருகிறார்.
ரவி பிஸ்னோய் வீசிய16 வது ஓவரில் மூன்று சிக்ஸர், 2 பௌண்டரி அடித்து 27 ரன்களை திரட்டினார் ரஜத் பட்டிதார்.
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணி 14 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்துள்ளது.
அடித்து ஆடிய பட்டிதார் 50 ரன்கள் அடித்து பெங்களூர் அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக திகழ, மறுமுனையில் இருந்த மேக்ஸ்வல் 9 ரன்களில் அவுட்டானார்.
ஆவேஷ் கான் வீசிய 9 வது ஓவரில் தூக்கி அடிக்க பார்த்த விராட் கோலி, மொஷின் கானிடம் கேட்ச் கொடுத்து 25 ரன்களில் வெளியேறினார்.
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணி 8 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது.
குர்னால் பாண்டியா வீசிய 6வது ஓவரில் ஒரு சிக்ஸர், 3 பௌண்டரிகளை விரட்டினார். 6 ஓவர் முடிவில் பெங்களூர் அணி 52 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணி 5 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் பெங்களூர் அணி 3 ஓவர் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 20 ரன்கள் எடுத்துள்ளது.
லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஷின் கான் வீசிய 4 வது பந்தில் கோலி 3 ரன்கள் எடுக்க, அடுத்த பந்தே கேப்டன் டுபிளிசி ரன் எதுவும் எடுக்காமல் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
பெங்களூர் அணிக்கு எதிரான எலிமினேட்டர் சுற்றில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
டி20 கிரிக்கெட் தொடர்களில் தினேஷ் கார்த்திக் '6000' ரன்கள் எடுக்க இன்னும் 1 ரன் தேவையாக உள்ளது.
பெங்களூர் - லக்னோ அணிகள் மோதும் எலிமினேடர் சுற்றில் மைதானத்தில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் டாஸ் போட தாமதம் ஆகிறது.
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்று போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி ராஜஸ்தான் அணியுடன் குவாலிஃபையர் 2 போட்டியில் விளையாடும். தோல்வி பெறும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிவிடும். ஆகவே இந்தப் போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பொறுத்தவரை ஏற்கெனவே அந்த அணி ஆர்சிபி அணியிடம் லீக் போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஆகவே அதற்கு இந்த எலிமினேட்டர் போட்டியில் பழிவாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -