LSG vs PBKS Score LIVE: பஞ்சாப் அணியை வீழ்த்தி லக்னோ அபாரம்.. புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேற்றம்

ஐ.பி.எல் தொடரில் இன்று நடக்கும் போட்டியில் பஞ்சாப் அணியும் லக்னோ அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

குலசேகரன் முனிரத்தினம் Last Updated: 28 Apr 2023 11:33 PM
பஞ்சாப் ஆல்-அவுட்

19.5 ஓவர்கள் முடிவில் 201 ரன்களை மட்டுமே எடுத்து பஞ்சாப் அணி ஆல்-அவுட் ஆனது


 

லக்னோ அபார வெற்றி

பஞ்சாப் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி அபார வெற்றி

200 ரன்களை எட்டிய பஞ்சாப்

258 ரன்களை துரத்தும் பஞ்சாப் அணி 19.3 ஓவர்கள் முடிவில் 200 ரன்களை எட்டியது


 




9வது விக்கெட்டை இழந்த பஞ்சாப்

ரபாடா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

மீண்டும் மீண்டும் விக்கெட்

ராகுல் சஹார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்

7வது விக்கெட்டும் காலி

அதிரடியாக ஆடி வந்த ஜித்தேஷ் சர்மா ஆட்டமிழந்தார்

விக்கெட்டை இழந்த சுட்டிக்குழந்தை..

21 ரன்கள் எடுத்து இருந்த சாம் கரன், நவின் உல்-ஹக் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

3 ஓவர்கள் தான் மிச்சம்..

பஞ்சாப் அணி வெற்றி பெற 18 பந்துகளில் 80 ரன்கள் அவசியம்

மீண்டும் ஒரு விக்கெட்

பிஷ்னோய் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் லிவிங்ஸ்டோன்

5 ஓவர்களில் 106 ரன்கள்..

பஞ்சாப் அணி வெற்றி பெற 5 ஓவர்களில் 106 ரன்கள் அவசியம்

150 ரன்களை கடந்த பஞ்சாப்

14.4 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 150 ரன்களை கடந்தது

பஞ்பாபின் ஆட்டம் முடிந்ததா?

பஞ்சாப் அணிக்காக சிறப்பாக விளையாடி வந்த அதர்வா, 66 ரன்களில் ஆட்டமிழந்தார்

தனி ஆளாக போராடும் அதர்வா..

சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தாலும், பஞ்சாப் அணிக்காக அதர்வா சிறப்பாக விளையாடி வருகிறார்.

முக்கிய விக்கெட்டை இழந்த பஞ்சாப்..

36 ரன்கள் சேர்த்து இருந்த சிகந்தர் ராஜா, யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்

100 ரன்களை எட்டியது பஞ்சாப்..

11 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 106 ரன்களை சேர்த்துள்ளது.

முடிந்தது 10 ஓவர்கள்.. பஞ்சாப் நிலை என்ன?

10 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்களை சேர்த்துள்ளது.

அரைசதம் விளாசிய அதர்வா..

26 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தியுள்ளார் அதர்வா தைடே

அதர்வா - ராஜா கூட்டணி அசத்தல்

அதர்வா - ராஜா கூட்டணி 50 ரன்களை சேர்த்துள்ளது

8 ஓவர்கள் முடிந்தது

8 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 76 ரன்களை சேர்த்துள்ளது.

முடிந்தது பவர்பிளே..

பவர்பிளே முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 55 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.

அரைசதம் கடந்த பஞ்சாப் அணி..

இமாலய இலக்கை நோக்கி விளையாடி வரும் பஞ்சாப் அணி 5.2 ஓவரில் 50 ரன்களை எட்டியுள்ளது.

5 ஓவர்கள் முடிந்தது..

5 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 47 ரன்களை சேர்த்துள்ளது

மீண்டும் ஒரு விக்கெட்..

ப்ரப்சிம்ரன் சிங் வெறும் 9 ரன்களில் ஆட்டமிழந்தார்

ஸ்டோய்னிஷ் காயம்..

கையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஸ்டோய்னிஷ் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

நிதானமாக ஆடும் பஞ்சாப்..

3 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 26 ரன்களை சேர்த்துள்ளது.

கேப்டனை இழந்த பஞ்சாப்..

இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பஞ்சாபின் கேப்டன் தவான் வெறும் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்

ஐபிஎல் வரலாற்றில் சாதனை..

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியால் எடுக்கப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய ஸ்கோர் இதுவாகும்

258 ரன்கள் இலக்கு...

20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 257 ரன்களை சேர்த்தது லக்னோ அணி

250-ஐ கடந்த லக்னோ..

19.2 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 250 ரன்களை எட்டியது

ஒருவழியாக கிடைத்த விக்கெட்

72 ரன்களை சேர்த்து இருந்தபோது ஸ்டோய்னிஷ் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

அரைசதம் கடந்த ரபாடா...

பஞ்சாப் வீரர் ரபாடா தான் வீசிய 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை எடுத்து 52 ரன்களை விட்டுக்கொடுத்தார்

விடாது கொட்டும் ரன்மழை..

லக்னோ அணி 17 ஓவர்கள் முடிவில் 216 ரன்களை குவித்துள்ளது.

200 ரன்களை கடந்த லக்னோ..

16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி வெறும் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்களை கடந்தது.

அரைசதம் விளாசினார் ஸ்டோய்னிஷ்

ஸ்டோய்னிஷ் 31 பந்துகளில் அரைசதம் விளாசினார்   

15 2ஓவர்களில் இப்படி ஒரு ஸ்கோரா?

15 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 184 ரன்களை குவித்துள்ளது.

ஓயாத லக்னோவின் ரன்வேட்டை..

பூரான் எதிர்கொண்ட முதல் 3 பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டி அசத்தினார்.

ஒருவழியாக பஞ்சாபிற்கு கிடைத்தது விக்கெட்..!

சிறப்பாக விளையாடி வந்த பதோனி 43 ரன்களை சேர்த்து இருந்தபோது, லிவிங்ஸ்டோன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

13 ஓவர்கள் காலி.. மீளுமா பஞ்சாப்?

13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 156 ரன்களை சேர்த்துள்ளது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்துள்ளது.

அதுக்குள்ள 150 ரன்கள்..

லக்னோ 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெறும் 12.2 ஓவரிலேயே லக்னோ அணி 150 ரன்களை கடந்துள்ளது.

10 ஓவர்களிலேயே இப்படி ஒரு ஸ்கோரா..!

10 ஓவர்கள் முடிவிலேயே லக்னோ அணி 128 ரன்களை குவித்துள்ளது

மிரட்டும் பதோனி - ஸ்டோய்னிஷ் கூட்டணி

பதோனி - ஸ்டோய்னிஷ் கூட்டணி அபாரமாக விளையாடி 26 பந்துகளில் 50 ரன்களை சேர்த்துள்ளது.

கட்டுக்கடங்காமல் ஆடும் லக்னோ..

9 ஓவர்கள் முடிவில்  லக்னோ அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 111 ரன்களை குவித்து அதிரடியாக விளையாடி வருகிறது.

100 ரன்களை எட்டியது லக்னோ அணி

வெறும் 74. ஓவர்கள் முடிவிலெயே லக்னோ அணி 100 ரன்களை எட்டியுள்ளது.

”நோ பால்” - களை வாரி வழங்கும் பஞ்சாப்

7.1 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 3 நோ பால்களை வீசியுள்ளது. அதில் இரண்டு சிக்சர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை லக்னோ அணி அடித்துள்ளது. 

முடிந்தது 7 ஓவர்கள்..

7 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 83 ரன்களை சேர்த்துள்ளது

மிரட்டும் ரபாடா - லக்னோவிற்கு பின்னடைவு

அதிரடியாக விளையாடி வந்த லக்னோ தொடக்க வீரர்களான கைல் மேயர்ஸ் மற்றும் ராகுல் ஆகிய இரண்டு பேரையும் அவுட்டாக்கி அசத்தியுள்ளார் ரபாடா 

பவர்பிளே யாருக்கு சாதகம்?

பவர்பிளேயின் 6 ஓவர்கள் முடிவில் லக்னோ 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 74 ரன்களை சேர்த்துள்ளது.

ரபாடா பந்துவீச்சில் மேயர்ஸ் காலி..

அதிரடியாக விளையாடி வந்த மேயர்ஸ் 54 ரன்கள் சேர்த்து இருந்தபோது, ரபாடா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

”எப்படி போட்டாலும் அடிப்பேன்”

பஞ்சாபின் பந்துவீச்சை கைல் மேயர்ஸ் நாலாபுறமும் சிதறடித்து வருகிறார். தற்போது வரை 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் விளாசியுள்ளார்.

அரைசதம் விளாசிய கைல் மேயர்ஸ்

வெறும் 20 பந்துகளில் 50 ரன்கள் அடித்து கைல் மேயர்ஸ் அதிரடி காட்டி வருகிறார்.

பவர்பிளே முடிந்தது - அரைசதம் கடந்த லக்னோ

கைல் மேயர்ஸின் அதிரடி ஆட்டத்தால் 5 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 62 ரன்களை சேர்த்துள்ளது.

அதிவேகமாக ரன் சேர்க்கும் லக்னோ..

4 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்து 45 ரன்களை சேர்த்துள்ளது.

விக்கெட்டை இழந்த ராகுல்

லக்னோ கேப்டன் ராகுல் 12 ரன்களை எடுத்து இருந்தபோது, ரபாடா பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.

கைல் மேயர்ஸ் அட்டகாசம்..

3வது ஓவரின் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 35 ரன்களை சேர்த்துள்ளது. கைல் மேயர்ஸ் 27 ரன்களை சேர்த்துள்ளார்.

நோ பால் வீசிய ப்ரார் - பறக்க விட்ட மேயர்

3வது ஓவரின் 3வது பந்தில் ப்ரார் வீசிய ஃப்ரீ ஹீட் பந்தை, கைல் மேயர்ஸ் 6 அடித்து விளாசினார்.

அர்ஷ்தீப் சிங்கை மிரள விட்ட மேயர்ஸ்..

அர்ஷ்தீப் சிங் வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் மேயர்ஸ் 4 பவுண்டரிகளை அடித்து அதிரடி காட்டினார்.

அடுத்தடுத்து பவுண்டரிகள்..

போட்டியின் இரண்டாவது ஓவரிலேயே மேயர்ஸ் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகளை விளாசினர்.

முடிந்தது முதல் ஓவர்...

முதல் ஓவரின் முடிவில் லக்னோ விக்கெட் இழப்பின்றி 2 ரன்கள் சேர்த்துள்ளது.

முதல் பந்திலேயே சொதப்பிய பஞ்சாப்...

போட்டியின் முதல் பந்திலேயே கே.எல். ராகுல் கொடுத்த கேட்ச் வாய்ப்பை பஞ்சாப் வீரார் அதர்வா தைடே நழுவ விட்டார்.

ஆக்ரோஷம் காட்டுவாரா ராகுல்?

லக்னோ கேப்டன் ராகுல் நடப்பு தொடரில் நிலையாக ஆடினாலும், ஸ்ட்ரைக் ரேட் குறைவாக இருப்பதால் கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.

பழிவாங்குமா லக்னோ?

நடப்பாண்டில் ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் லக்னோ அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

புள்ளிப்பட்டியல் நிலவரம்

நடப்பாண்டு புள்ளிப்பட்டியலில் லக்னோ அணி 4வது இடத்திலும், பஞ்சாப் அணி 6வது இடத்திலும் நீடிக்கின்றன.

லக்னோ அணி வீரர்கள்:

கே.எல். ராகுல், கைல் மேயர்ஸ்,  தீபக் ஹீடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரான், ஆயுஷ் பதோனி, க்ருணால் பாண்ட்யா, ஆவேஷ் கான், நவீன் உல்-ஹக், ஒய். தாகூர், ரவி பிஷ்னோய்

பஞ்சாப் அணி வீரர்கள்:

தவான், அதர்வா தைடே, சிகந்தர் ராஜா, லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், சாம் கரன், குர்னூர் ப்ரார், ராகுல் சஹார், ரபாடா, அர்ஷ்தீப் சிங்

லக்னோ அணி பேட்டிங்

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. 3 போட்டிகளுக்குப் பின் பஞ்சாப் அணி கேப்டன் தவான் அணிக்கு திரும்பியுள்ளார்.

Background

ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், மொகாலியில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும், லக்னோ அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.


பஞ்சாப் - லக்னோ அணிகள் மோதல்:


புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இன்றைய போட்டியின் வெற்றி புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பஞ்சாப் அணி 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதேசமயம் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.


நடப்பு தொடரை பொறுத்தவரையில் பஞ்சாப் அணியை காட்டிலும் லக்னோ அணி வலுவான அணியாகவே உள்ளது. அதேசமயம் அந்த அணி இமாலய இலக்கை எட்டிப்பிடிப்பதும், சொற்ப இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியை தழுவவதும் அந்த அணியில் உள்ள தடுமாற்றத்தை காட்டுகிறது. அதேசமயம் பஞ்சாப் அணியை சாம்கரண் வழி நடத்த தொடங்கிய பிறகு அந்த அணி வலுப்பெற்றுள்ளது.


லக்னோ பலம், பலவீனம் என்ன?


லக்னோ அணியில் பேட்டிங்கில் மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், பூரண், ஆயுஷ் பதோனி நம்பிக்கைக்குரிய வீரர்களாக உள்ளனர். கேப்டன் கே.எல்.ராகுல் களத்தில் நீண்ட நேரம் நின்றாலும் அவரது பழைய அதிரடி பேட்டிங் தற்போது வரை வெளிவராமலே இருப்பது அணிக்கு பெரும் பின்னடைவு ஆகும். கடந்த போட்டியில் லக்னோ அணி குஜராத் அணிக்கு எதிராக தோல்வி அடைந்ததே இதற்கு உதாரணம்.


பந்துவீச்சில் ஆவேஷ்கான், உனத்கட், மார்க்வுட், கிருஷ்ணப்ப கவுதம், கரண்சர்மா, குருணல் பாண்ட்யா உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே வெற்றியை பெற முடியும். பஞ்சாப் அணி தொடக்கத்தில் பெற்ற இரண்டு வெற்றிகளுக்குப் பிறகு சிறிய தடுமாற்றத்தை எதிர்கொண்டாலும், தற்போது 4 வெற்றிகளை பெற்று அவர்களும் சிறப்பாக ஆடி வருகின்றனர். குறிப்பாக, சாம் கரண் கேப்டன்சிக்கு பிறகு பஞ்சாப் பேட்டிங், பவுலிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


பஞ்சாப் பலம் - பலவீனம்:


பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங், ஷார்ட் நல்ல தொடக்கமாக இருந்து வருகின்றனர். ஹர்பிரீத்சிங் பாட்டியாவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஜிதேஷ் சர்மா, ஷாரூக்கான் அதிரடியில் மிரட்டுகின்றனர். கேப்டன் சாம்கரண் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். இதனால், இறுதிக்கட்டத்தில் பஞ்சாப் ரன் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது.


பந்துவீச்சை பொறுத்தவரையில் சாம்கரண், ரபாடா, நாதல் எல்லீஸ், ராகுல் சாஹர் இன்றைய போட்டியில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நம்பலாம். கடந்த சில போட்டிகளில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் பஞ்சாப்பும், புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள லக்னோ அணியும் மோதுவதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்று நம்பலாம்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.