ஐபிஎல் தொடரில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்க உள்ள வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.


ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. புள்ளிப்பட்டியலில் டாப் 4 இடத்திற்குள் நுழைவதற்காக அனைத்து அணிகளும் மும்முரமாக தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், மொகாலியில் இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியும், லக்னோ அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.


லக்னோ - பஞ்சாப்:


புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ள லக்னோ அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணியுடன் மோத உள்ளது. இன்றைய போட்டியின் வெற்றி புள்ளிப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் பஞ்சாப் அணி 5வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அதேசமயம் லக்னோ அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பின்னுக்கு தள்ளி 3வது இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.


டாஸ் விவரம்


இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது. நடப்பு தொடரை பொறுத்தவரையில் பஞ்சாப் அணியை காட்டிலும் லக்னோ அணி வலுவான அணியாகவே உள்ளது. அதேசமயம் அந்த அணி இமாலய இலக்கை எட்டிப்பிடிப்பதும், சொற்ப இலக்கைகூட எட்ட முடியாமல் தோல்வியை தழுவவதும் அந்த அணிக்கு பின்னடைவாக உள்ளது. அதேசமயம் பஞ்சாப் அணியை சாம்கரண் வழி நடத்த தொடங்கிய பிறகு அந்த அணி வலுப்பெற்றுள்ளது.இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்ட ஷிகர் தவான், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.


பஞ்சாப் அணி வீரர்கள்:


தவான், அதர்வா தைடே, சிகந்தர் ராஜா, லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, ஷாருக்கான், சாம் கரன், குர்னூர் ப்ரார், ராகுல் சஹார், ரபாடா, அர்ஷ்தீப் சிங்


இம்பேக்ட் பிளேயர்ஸ்:


பிரப்சிம்ரன் சிங், ரிஷி தவான், மோஹித் ரதி, மேத்யூ ஷார்ட், ஹர்ப்ரீத் ப்ரார்


லக்னோ அணி வீரர்கள்:


கே.எல். ராகுல், கைல் மேயர்ஸ்,  தீபக் ஹீடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், நிகோலஸ் பூரான், ஆயுஷ் பதோனி, க்ருணால் பாண்ட்யா, ஆவேஷ் கான், நவீன் உல்-ஹக், ஒய். தாகூர், ரவி பிஷ்னோய்


இம்பேக் பிளேயர்ஸ்:


கே. கவுதம், டேனியல் சாம்ஸ், மன்கட், அமித் மிஸ்ரா, மார்க் வுட்


லக்னோ பலம், பலவீனம் என்ன?


லக்னோ அணியில் பேட்டிங்கில் மேயர்ஸ், ஸ்டோய்னிஸ், பூரண், ஆயுஷ் பதோனி நம்பிக்கைக்குரிய வீரர்களாக உள்ளனர். பந்துவீச்சில் ஆவேஷ்கான், உனத்கட், மார்க்வுட், கிருஷ்ணப்ப கவுதம், கரண்சர்மா, குருணல்பாண்ட்யா உள்ளனர். இவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே வெற்றியை பெற முடியும்.


பஞ்சாப் பலம் - பலவீனம்:


பஞ்சாப் அணிக்கு பேட்டிங்கில் பிரப்சிம்ரன்சிங், ஷார்ட் நல்ல தொடக்கமாக இருந்து வருகின்றனர். ஹர்பிரீத்சிங் பாட்டியாவும் சிறப்பாக ஆடி வருகிறார். ஜிதேஷ் சர்மா, ஷாரூக்கான் அதிரடியில் மிரட்டுகின்றனர். கேப்டன் சாம்கரண் பேட்டிங்கில் அசத்தி வருகிறார். இதனால், இறுதிக்கட்டத்தில் பஞ்சாப் ரன் ஜெட் வேகத்தில் எகிறி வருகிறது.