மும்பை அணிக்கு எதிரான லக்னோ ஏகானா மைதானத்தில் நடந்தி போட்டியில் 204 ரன்களை இலக்காக நிர்ணயித்தது சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி
ஐபிஎல் 2025 மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் லக்னோ ஏகானா மைதானத்தில் பலப்பரீட்சை நடத்தி வருகிறது. இந்த போட்டியில் டாஸை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்து வீசியது மும்பை அணியில் முழங்காலில் ஏற்ப்பட்ட காயம் காரணமாக ரோகித் சர்மா இந்தப் போட்டியில் விளையாடவில்லை.
மார்ஷ் அதிரடி:
லக்னோ அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்சேல் மார்ஷ் மற்றும் மார்க்ரம் களமிறங்கினர், பவுல்ட் மற்றும் சாஹர் தொடங்கினர், மார்க்ரம் அடக்கி வாசிக்க மிட்செல் மார்ஷ் அதிரடியாக விளையாடினர், பவர் பிளே முடிவதற்குள் மிட்செல் மார்ஷ் தனது அதிரடி மூலம் அரைசதம் அடித்தார். மார்ஷ் 31 பந்துகளில் 60 ரன்களில் விக்னேஷ் புத்தூர் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மீண்டும் சொதப்பிய பந்த்:
அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் அதிரடியாக தொடங்கினாலும் ஹர்திக் பாண்டிய பந்துவீச்சில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த கேப்டன் ரிஷப் பந்த் மீண்டும் ஒரு சொதப்பினார், அவர் 2 ரன்களுக்கு பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
லக்னோ 203:
அடுத்து களமிறங்கிய பதோனி, மார்க்ரமுடன் இணைந்து அதிரடியாக விளையாடி 4 விக்கெட்டுக்கு 50 ரன்கள் சேர்த்தது, பதோனி முப்பது ரன்களுக்கு ஆட்டமிழக்க, மார்க்ரம்- டேவிட் மில்லருடன் இணைந்து அதிரடியாக விளையாடி தனது அரைசதத்தை கடந்து ஆட்டமிழந்ந்தார். என்னத்தான் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் லக்னோ பேட்டர்கள் தங்கள் அதிரடியை தொடர்ந்தனர்.
இறுதியில் லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 203 ரன்களை எடுத்தது.மும்பை அணியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.