KKR vs SRH LIVE Score: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கொல்கத்தா; 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் SRH தோல்வி!
IPL 2024 Qualifier 1, KKR vs SRH Live Score: நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளை இங்கு காணலாம்.
13.4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் முதல் அணியாக 2024ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்கு கொல்கத்தா முன்னேறியுள்ளது. அதேபோல், கொல்கத்தா அணி தனது இறுதிப் போட்டியில் குலிஃபையர் 2-இல் வெற்றி பெறும் அணியுடன் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 26ஆம் தேதி மோதும்.
களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் தனது அரைசதத்தினை எட்டினார்.
10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 107 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
9 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 96 ரன்கள் சேர்த்து வெற்றி இலக்கை நோக்கி முன்னேறிக்கொண்டு உள்ளது.
கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் தந்து விக்கெட்டினை, போட்டியின் 7வது ஓவரை வீசிய பேட் கம்மின்ஸ் ஓவரில் இழந்து வெளியேறினார்.
பவர்ப்ளே முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 63 ரன்கள் சேர்த்து இலக்கை நோக்கி சீராக முன்னேறி வருகின்றது.
5 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 57 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
கொல்கத்தா அணி 4.2 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டினை இழந்து 53 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
4 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி ஒரு விக்கெட்டினை இழந்து 49 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 4வது ஓவரை வீச வந்த நடராஜன் அவர் வீசிய இரண்டாவது பந்தில் குர்பாஸ் விக்கெட்டினைக் கைப்பற்றி, கொல்கத்தா அணியின் முதல் விக்கெட்டினை வீழ்த்தியுள்ளார்.
மூன்று ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் கொல்கத்தா அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பந்தை பவுண்டரிக்கு விளாசி கொல்கத்தா அணியின் ரன் கணக்கைத் தொடங்கினார் குர்பாஸ்.
20 ஓவர்களில் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி களமிறங்கியுள்ளது.
19.3 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்கள் சேர்த்தது. கொல்கத்தா அணி சார்பில் ஸ்டார்க் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
19 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
18 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
17 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
15 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் சேர்த்து தத்தளித்து வருகின்றது.
ஹைதராபாத் அணியின் அப்துல் சமத் தனது விக்கெட்டினை 12 பந்தில் 16 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
ஹைதராபாத் அணியின் இம்பேக்ட் ப்ளேயர் சன்விர் சிங் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.
அரைசதம் கடந்த ராகுல் திருப்பாதி தனது விக்கெட்டினை ரன் அவுட் முறையில் இழந்து வெளியேறினார்.
13 ஓவர்கள் முடிந்த நிலையில் ஹைதராபாத் அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்துள்ளது.
அதிரடியாக விளையாடி வந்த ஹென்ரிச் கிளாசன் 21 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
4 விக்கெட் இழப்பிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 91 ரன்கள் எடுத்துள்ளது.
9 ஓவர்கள் முடிந்த நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 80 ரன்கள் எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 62 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
8வது ஓவரின் 4வது பந்தினை ராகுல் திருப்பாதி ஆட்டத்தின் முதல் சிக்ஸரை பறக்கவிட்டார்.
7 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
பவர்ப்ளே முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 45 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ஹென்றிச் கிளாசன் பவர்ப்ளேவில் முதல் முறையாக களமிறங்கியுள்ளார்.
போட்டியின் 5வது ஓவரில் நிதிஷ் மற்றும் ஷாபாஸ் அகமது தங்களது விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்து வெளியேறினர். ஸ்டார் மூன்று ஓவர்கள் வீசி 22 ரன்கள் விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
ஆட்டத்தின் இரண்டாவது பந்தில் டிராவிஸ் ஹெட் க்ளீன் போல்ட் ஆன வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
5வது ஓவரின் முதல் பந்தினை எதிர்கொண்ட நிதிஷ் ரெட்டி அதனை பவுண்டரிக்கு தட்டிவிட்டார். இந்த போட்டியில் நிதிஷ் ரெட்டியின் முதல் பவுண்டரி இதுதான்.
நான்கு ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 33 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஆட்டத்தின் 4வது ஓவரில் ராகுல் திருப்பாதி ஆட்டத்தின் நான்காவது பவுண்டரியையும், தனது நான்காவது பவுண்டரியையும் பறக்கவிட்டார். இந்த பந்தினை வீசிய வைபவ் அதனை நோ-பாலாக வீசியுள்ளார்.
மூன்று ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்கள் சேர்த்து நிதானமாக விளையாடி வருகின்றது.
இரண்டு ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 13 ரன்கள் சேர்த்து விளையாடி வருகின்றது.
ஹைதராபாத் அணியின் தொடக்க அட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது விக்கெட்டினை இரண்டாவது ஓவரில் இழந்து வெளியேறினார். இவர் தனது விக்கெட்டினை வைபவ் வோரா இழந்தார்.
ஹைதராபாத் அணியின் திருப்பாதி முதல் ஓவரில் இரண்டு பவுண்டரிகள் விளாசி மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியுள்ளார். முதல் ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி ஒரு விக்கெட்டினை இழந்து 8 ரன்கள் சேர்த்துள்ளது.
ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் டக் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்டார்க் வீசிய பந்தில் க்ளீன் போல்ட் ஆனார்.
கொல்கத்தா அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி களமிறங்கியது.
நரேந்திர மோடி மைதானம் குறித்து டிராவிஸ் ஹெட் மனம் திறந்துள்ளார். இந்த மைதானத்தில் தனக்கு சில நல்ல நினைவுகள் இருப்பதாக கூறியுள்ளார். 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக சதம் விளாசி ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தார்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (பிளேயிங் லெவன்): டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென்(விக்கெட் கீப்பட்), அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), புவனேஷ்வர் குமார், விஜயகாந்த் வியாஸ்காந்த், டி நடராஜன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (ப்ளேயிங் லெவன்): ரஹ்மானுல்லா குர்பாஸ்(விக்கெட் கீப்பர்), சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர்(கேப்டன்), ரின்கு சிங், ஆண்ட்ரே ரசல், ராமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், வைபவ் அரோரா, ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி
முதல் குவாலிஃபையரில் களமிறங்கியுள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
லீக் போட்டிகள் முடிவில் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திலும் ஹைதராபாத் அணி இரண்டாவது இடத்திலும் முடித்திருந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபையர் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்னும் சற்று நேரத்தில் மோதிக்கொள்ளவுள்ளது.
Background
KKR Vs SRH, IPL Playoff 2024: கொல்கத்தா மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ள முதல் குவாலிஃபையர் போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் பிளே-ஆஃப் சுற்று:
கடந்த மார்ச் மாதம் இறுதியில் 10 அணிகளுடன் தொடங்கிய ஐபிஎல் தொடர், சர்வதே கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது. 70 லீக் போட்டிகளின் முடிவில் 6 அணிகள் தொடரில் இருந்து வெளியேற, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் பெங்களூர் ஆகிய அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறின. அதன்படி, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முதல் அணி எது என்பதை இறுதி செய்யும், முதல் குவாலிஃபையர் போட்டி இன்று நடைபெற உள்ளது. இதில் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடித்த ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ளன.
கொல்கத்தா Vs ஐதராபாத் மோதல்:
முதல் குவாலிஃபையர் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள, நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கொல்கத்தா அணி 9 வெற்றிகளுடன் லீக் சுற்றில் ஆதிக்கம் செலுத்தி, முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. மறுமுனையில் ஐதராபாத் அணியோ, முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு அசுரத்தனமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறது. கடினமான இலக்குகளையும் அநாயசமாக சேஸ் செய்து, 8 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் தனது இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில், இரண்டு அணிகளும் இன்றைய போட்டியில் வென்று, நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற மிகுந்த தீவிரம் காட்டுகின்றன. இந்த போட்டியில் தோல்வியுறும் அணி, எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோத வேண்டியிருக்கும் என்பதால், இன்றே வெற்றி பெற இரு அணிகளும் மல்லுக்கட்டுகின்றன. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.
பலம், பலவீனங்கள்:
கொல்கத்தா அணியில் பேட்டிங்கில் சுனில் நரைன், ரஹ்மனுல்லா குர்பாஸ், ரிங்கு சிங், ஸ்ரேயாஸ் அய்யர், ரமன்தீப், ரஸல் மற்றும் ராணா என பல அதிரடி பேட்ஸ்மேன்கள் வரிசைகட்டுகின்றனர். பந்துவீச்சிலும் மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா மற்றும் வருண் சக்ரவர்த்தி என மேட்ச் வின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் உடன் சரியான கலவையில் ஆல்-ரவுண்டர்கள் என, கொல்கத்தா அணி வலுவான பிளேயிங் லெவன் கட்டமைப்பை கொண்டுள்ளது. பெரும்பாலான போட்டிகளில் கூட்டு முயற்சியில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணியின் பெரும் பலமாகும்.
மறுமுனையில் ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், கிளாசென் மற்றும் நிதிஷ் ரெட்டி என அதிரடி பேட்ஸ்மேன்கள் காத்திருக்கின்றனர். இவர்களை சமாளிப்பது கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். ஆனால், அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினால், பின்கள வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறுவதை ஏற்கனவே காண முடிந்தது. பந்துவீச்சில் நடராஜன், புவனேஷ்வர் குமார், பேட் கம்மின்ஸ் என ஆகச்சிறந்த வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். ஆனாலும், பல போட்டிகளில் இந்த வீரர்கள் ரன்களை வாரி வழங்கியதை காண முடிந்தது. எனவே இன்றைய போட்டியில் வெல்ல, ஐதராபாத் அணி மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்துவீச வேண்டியுள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளும் 26 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா அணி 17 முறையும், ஐதராபாத் அணி 9 முறையும் வெற்றி பெற்றுள்ளன.நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியிலும், கொல்கத்தா அணியே வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 208 ரன்களையும், குறைந்தபட்சமாக 101 ரன்களையும் சேர்த்துள்ளது. கொல்கத்தா அணிக்கு எதிராக ஐதராபாத் அணி ஒரு போட்டியில் அதிகபட்சமாக 228 ரன்களையும், குறைந்தபட்சமாக 115 ரன்களையும் சேர்த்துள்ளது.
நரேந்திர மோடி மைதானம் எப்படி?
நரேந்திர மோடி மைதானத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்கள் மற்றும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சமமான சூழலை வழங்குகிறது. மேற்பரப்பு பேட்டர்களுக்கு உதவியை வழங்கும் அதே வேளையில், அவர்கள் எளிதாக ரன்களை சேர்க்க அனுமதிக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வேகம் மற்றும் பவுன்ஸ் வாய்ப்புகளையும் வழங்குகிறது. இங்கு விளையாடிய கடைசி ஐந்து ஆட்டங்களில், சேஸிங்கைத் தேர்ந்தெடுத்த அணிகள் எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தேச அணி விவரங்கள்:
கொல்கத்தா: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா, ஆண்ட்ரே ரஸ்ஸல், ரின்கு சிங், ரமன்தீப் சிங், மிட்செல் ஸ்டார்க், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி
ஐதராபாத்: டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, சன்வீர் சிங், பாட் கம்மின்ஸ், புவனேஷ்வர் குமார், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே
- - - - - - - - - Advertisement - - - - - - - - -