நடப்பு ஐபிஎல் 2024ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் தொடக்க வீரர் ட்ராவிஸ் ஹெட் 1 பந்தை மட்டுமே சந்தித்து ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். 


இன்று நடைபெறும் ஐபிஎல் இறுதிப்போட்டி உட்பட கடைசியாக நடந்த 4 போட்டிகளில் 3 டக் அவுட்டுடன் 34 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார் ஹெட். மேலும், நடப்பு ஐபிஎல் 2024 சீசனில் கொல்கத்தாவிற்கு எதிரான 3 போட்டிகளிலும் ட்ராவிஸ் ஹெட், டக் அவுட் ஆகியுள்ளார்.






ட்ராவிஸ் ஹெட் கடைசி நான்கு இன்னிங்ஸ்:


0(1) vs பஞ்சாப் கிங்ஸ்
0(2) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
34(28) vs ராஜஸ்தான் ராயல்ஸ்
0(1) vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்






பிளாஃப் ஆன ஹெட் - அபிஷேக் ஜோடி:


சென்னையின் எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் பேட் கம்மின்ஸ் டாஸ் வென்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஞாயிற்றுக்கிழமை முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். 


ஐபிஎல் 2024 இறுதிப் போட்டியில் அதிரடி ஹிட்டுக்கு பெயர் போன தொடக்க ஜோடியான டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா, ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். அபிஷேக் சர்மா 2 ரன்களிலும், ஹெட் 0 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அபிஷேக் மற்றும் ஷெட் நடப்பு ஐபிஎல் சீசன் வரலாற்றில் பவர்பிளேயில் அதிக ஸ்டிரைக் ரேட்களில் ஒன்றாக அமைத்து கொடுத்தனர். 


அபிஷேக் சர்மா 202.95 லிலும், ஹெட் 209.29 ஸ்டிரைக் ரேட்டிலும் விளையாடி ரன்களை குவித்தனர்.


அதிக ரன்கள்:  


அபிஷேக் சர்மா மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் 15 ஆட்டங்களில் 3 சதம் மற்றும் 2 ஐம்பது பிளஸ் ஸ்டாண்டுகளுடன் 691 ரன்களை குவித்துள்ளனர். இந்த சீசனில் ட்ராவிஸ் ஹெட் 567 ரன்களுடன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அதேபோல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 15 போட்டிகளில் 3 அரைசதங்களுடன் 484 ரன்கள் குவித்துள்ளார் அபிஷேக் சர்மா.